நீங்க செய்வது சரியில்லை… விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் கொடுத்த அலர்ட்….

0
Follow on Google News

நடிகர் விஜய் சமீபத்தில் நடத்திய மாணவர் சந்திப்பு நிகழ்வு, அவருடைய ரசிகர் மன்ற நிர்வாகிகள் தலைவர்கள் சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செய்தது, இரவு பாடசாலை என அவருடைய ஒவ்வொரு நகர்வுகளும், விஜய் அரசியலுக்கு வருவதை உறுதி படுத்தும் வகையில் அமைத்துள்ளது. தமிழக அரசியல் களத்தில் இன்று வலுவான ஆளும் கட்சியாக இருந்து வருகிறது திமுக, திமுகவை எதிர்த்து அரசியல் செய்வதற்கான பிரதான எதிர்க்கட்சி யார் என்கிற போட்டி தற்பொழுது நிலவி வருகிறது.

மேலும் அடுத்த தலைமுறைக்கான தலைவராக மக்கள் மத்தியில் திகழ போகிறது யார் என்கிற விவாதமும் தமிழக அரசியலில் சூடு பிடித்துள்ளது. ஆளும் திமுகவை பொறுத்தவரை அடுத்த தலைமுறைக்கான தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்பது உறுதியாகி விட்டதால், இனி வரும் எதிர்காலத்தில் உதயநிதியை எதிர்த்து அரசியல் செய்ய கூடிய சரியான தலைவன் இவர் தான் என யாரை மக்கள் ஏற்று கொள்கிறார்களோ அந்த தலைவன் சார்ந்த கட்சிக்கும் திமுகவுக்கும் இடையிலான அரசியல் களமாக மாறும் தமிழகம்.

அந்த வகையில், தமிழக அரசியலை பொறுத்த வரை எதிர்க்கட்சி என்று அதிமுகவாக இருந்தாலும், திமுகவை எதிர்த்து அரசியல் செய்ய துணிவும் இல்லாமல், குறிப்பாக மக்கள் ஏற்று கொள்ளும்படி சரியான தலைவர் இல்லாததால், அதிமுக என்கிற கட்சி கரைந்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் பாஜக தலைவராக இருக்க கூடிய அண்ணாமலை இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் திமுகவை எதிர்த்து செய்ய கூடிய அரசியலின் காரணமாக எப்போதுமே ஹை லைட்டில் ஜெயலலிதா இருந்தது போன்று, இன்று எதிர்க்கட்சி தலைவர் அண்ணாமலையா.? என்று எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி என்கிற ஒரு அரசியல் தலைவர் இருப்பதை மறந்து மக்கள் பேசும் அளவுக்கு இருந்து வருகிறது அண்ணாமலையின் அரசியல்.

இப்படி பரபரப்பான தமிழக அரசியலில், திமுகவுக்கு மாற்றும் தான் என்கிற நிலை உருவாக தொடங்கி, குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் அண்ணாமலை. இந்த பரபரப்பான சூழலில் விஜய் அரசியல் என்ட்ரி என்பதும் திமுகவை எதிர்த்து தான் அவருடைய அரசியல் இருக்கும் என்று ஆருடம் சொன்னாலும், இதுவரை துணிந்து யாரை எதிர்த்து விஜய் அரசியல் செய்ய போகிறார் என பகிரங்கமாக பேச்சில் கணிக்க முடியவில்லை.

இந்நிலையில் விஜய் அரசியல் வருகை குறித்து தொடர்ந்து முக்கிய புள்ளிகளிடம் ஆலோசனை நடத்தி வருகிறார், அந்த வகையில் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரை இதற்கு முன்பு இரண்டு முறை சந்தித்து தன்னுடைய அரசியல் வருகை குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார், இந்நிலையில் தற்பொழுது லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓய்வு எடுக்க விஜய் வெளிநாடு சென்றுள்ள நிலையில், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பு பிரசாந்த் கிஷோரிடம் இருந்து விஜய்க்கு சில எச்சரிக்கை வந்துள்ளதாக கூறப்படுகிது.

நீங்கள் அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பதாக இருந்தால் அதை உடனே செய்ய வேண்டும், பாஜக தலைவர் அண்ணாமலையின் அரசியல் நகர்வுகள், திமுகவை எதிர்க்க சரியான தலைவன் இவர் தான்ப்பா என்று மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் அண்ணாமலை, குறிப்பாக அடுத்த கட்ட தலைமுறைக்கான இளைஞர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார், இதற்கு மேலும் நீங்கள் அரசியலுக்கு வருவதற்கு தாமதம் செய்ய கூடாது என்றும்.

ஒரு சில மாதங்களில் கட்சி தொடங்கி அதிரடியாக அரசியில் விஜய் இறங்கவில்லை, காலதாமதம் செய்து கட்சி தொடங்கி எந்த பயனும் இல்லை, குறிப்பாக அண்ணாமலை தொடங்கியுள்ள பாதயாத்திரை, ஆந்திர அரசியலில் ஜெகன் மோகன் ரெட்டி பாதயாத்திரை எப்படி ஒரு தாக்கத்தை ஏறப்டுத்தியதோ அதே தாக்கத்தை அண்ணாமலை பாதயாத்திரை ஏற்ப்படுத்தும் என விஜய்க்கு அலர்ட் கொடுத்துள்ள பிரசாந்த் கிஷோர்.

அதனால் உடனே அரசியல் கட்சியை தொடங்கி நீங்களும் தமிழகம் முழுவதும் அண்ணாமலை போன்று பாதயாத்திரை நடத்த வேண்டும் என விஜயை பிரசாந்த் கிஷோர் வலியுறுத்தியதாகவும், இந்நிலையில், வெளிநாடு சென்றுள்ள விஜய் இந்தியா திரும்பியதும் பிரசாந்த் கிசோரை நேரில் சந்தித்து தன்னுடைய அடுத்த கட்ட அரசியல் என்ன என்பது பற்றியும், திமுகவுக்கு மாற்றாக உருவெடுத்து வரும் அண்ணாமலையை எப்படி சமாளித்து, தான் திமுகவுக்கு மாற்றாக வரவேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.