பணம், புகழை தலைக்கு ஏற்றிய விஜய் சேதுபதி….! அகங்காரம் தலைக்கு ஏறி நம்பியவர்களை நடுரோட்டில் நிற்க வைத்த கொடுமை..

0
Follow on Google News

விஜய் சேதுபதி நடுத்தர குடும்பத்தில் பிறந்து வேலை செய்து சம்பாரிக்க துபாய் சென்றவர், அங்கு சில காலம் வேலை பார்த்து வந்த விஜய் சேதுபதி சினிமா மீது உள்ள மோகத்தால் கூத்து பட்டறையில் படித்து கொண்டே செலவுக்கு சிறு சிறு வேடங்களில் சினிமாவில் நடித்து சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகளை தேடி வந்தார். தொடர்ந்து பல்வேறு போராட்டக்களுக்கு மத்தியில் பெரியதாக வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்த விஜய் சேதுபதி ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு வேறு வேலைக்கு செல்ல முடிவெடுத்தார்.

அப்போது தான் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் இயக்குனர் சீனு ராமசாமி கதாநாயகனாக விஜய் சேதுபதியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த படம் மிக பெரிய ஹிட் கொடுத்ததை தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு அடுத்தடுத்து படத்தில் நடிக்க வாய்ப்புகள் அமைந்தது, தொடர்ந்து தன்னுடையை இமேஜை பற்றி கவலை படாமல் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. அவருடைய எதார்த்தமான நடிப்பும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

ஆனால் ஒருகட்டத்தில் விஜய் சேதுபதி பணம் மட்டுமே குறிக்கோள் என முடிவெடுத்து, கதை, இயக்குனர் என எதையும் சிந்திக்காமல் ஒரே நேரத்தில் சுமார் 26 படங்களுக்கு மேல் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறபடுகிறது, சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான துக்ளக் தர்பார், அநபால் சேதுபதி,லாபம் போன்ற படங்கள் தோல்வியை சந்தித்து இவரை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த படத்தில் விஜய் சேதுபதி எதார்த்த நடிப்பு என்கிற பெயரில் நடிக்கவே இல்லை என்கிற விமர்சனமும் எழுந்துள்ளது.

ஒரு வெற்றி பெற்ற நடிகன் தனது வெற்றியை தக்க வைக்க வேண்டுமானல் தொடர்ந்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு வெளிப்படுத்த வேண்டும், ஆனால் விஜய் சேதுபதி தனக்கு பணம் கிடைத்தால் போதும் என சுயநலமாக இருந்து கொன்டு நடிப்பில் கோட்டையை விட்டுவிட்டு எந்த வேகத்தில் சினிமாவின் உச்சத்துக்கு சென்றாரோ அதே வேகத்தில் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறார். மேலும் தனது படத்தின் தோல்விக்கு தான் என்பதை மறந்து படத்தை குறைகூறும் விமர்சகர்களை கடுமையாக சாடி வருவதாக கூறபடுகிறது.

இந்நிலையில் இது குறித்து பிரபல சினிமா விமர்சகர் நடிங்கர் பயில்வான் ரங்கநாதன், விஜய் சேதுபதி தன்னை சுற்றி ஜால்ட்ராக்களை வைத்து கொண்டு அகங்காரத்துடன் நடந்து கொள்வதாகவும், பணம் மற்றும் புகழ் ஒருவர் மூளைக்கு செல்ல கூடாது, அப்படி செல்வதால் தற்போது விஜய் சேதுபதியிடம் இருந்து திமிர் மட்டுமே வெளிப்படுகிறது, உயரும் போது பணிவு வேண்டும் என அறிவுரை வழங்கிய பயில்வான், விஜய் சேதுபதி தன்னை திருத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிலையில் ஒரே நேரத்தில் பல படங்களில் ஒப்பந்தம் செய்து தனது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து தன்னை நம்பிய தயாரிப்பாளர்களை நடுதெருவில் நிற்க்க வைத்து விட்டு, படத்தின் வெற்றி தோல்வி பற்றி கவலை படாமல் தனக்கு கிடைத்த பணத்தில் நட்சத்திர ஓட்டல் ஒன்றை விஜய் சேதுபதி கட்டி வருவதாக கூறபடுகிறது, இந்நிலையில் அவரின் முழு கவனமும் நட்சத்திர ஓட்டல் கட்டி முடிப்பதில் மட்டுமே இருப்பதாக கூறப்படுவதால், தான் நடிக்கும் படத்தில் தனக்கு சம்பளம் வந்தால் போது என நடிப்பில் அவருக்கு கவனம் இல்லை என கூறப்படுகிறது.