கண்டபடி திட்டி லிவிங்ஸ்டனை வெளியே போக சொன்ன இளையராஜா… எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

80 மற்றும் 90 களில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்தவர் இசைஞானி இளையராஜா. ஒரு படத்தை அதன் கதையைத் தாண்டி, தன் இசையாலேயே பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடிக்கச் செய்யும் அளவிற்கு இசையமைத்து இன்றும் இரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கிறார்.

இத்தனைச் சிறப்புமிக்கவராக விளங்கும் இளையராஜாவிற்கு இசைத் திறமை மட்டுமின்றி, தான் ஒரு மிகப்பெரிய இசையமைப்பாளர் என்ற தலைக் கணமும் சற்று அதிகமாகவே உள்ளது என்று கூறலாம். புகழ் ஓங்கியிருக்கும் இடத்தில் ஆணவம் தானாகவே தலைக்கு வந்துவிடுமல்லவா!! அதுபோலத்தான், இளையராஜாவுக்கு ஆணவம், திமிரு இருக்கத்தான் செய்தது.இதை நம்மில் பலரும் சில மேடை நிகழ்ச்சி மற்றும் பேட்டிகளில் கூட பார்த்திருக்கிறோம்

மேலும் தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றவர் இளையராஜா, அந்த வகையில் மனோபாலா மறைவுக்கு இளையராஜா வெளியிட்ட இரங்கல் செய்தியில் “நான் காரில் போகும் போது பாலத்தில், காரில் வைத்து பார்ப்பதற்காக காத்திருந்த எத்தனையோ டைரக்டர்களில் மனோபாலாவும் ஒருவர் என்று இளையராஜா பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்து, மிக பெரிய விவாத பொருளாக அது மாறியது.

இந்நிலையில் தற்பொழுது இளையராஜா குறித்து மற்றொரு விஷயம் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகர் லிவிங்ஸ்டன் நடிக்க வந்தது கூட ஒரு விபத்து தான் என தெரிவித்துள்ளார், அதாவது அவர் நடிப்பதற்கு முன்பு ஆரம்ப கட்டத்தில், ஒரு இயக்குனராக வேண்டும் என்று முயற்சி செய்து வந்துள்ளார். அப்போது டாப் இயக்குனராக இருந்த பாக்யராஜிடம் உதவியாளராக சேர்வதற்கு முன்பு பாடல் பாடுவதில் விருப்பமாக இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து அன்றைய காலகட்டத்தில் மிக பெரிய உச்சத்தில் இருந்த இளையராஜா இசையில் பாடல் பாட வேண்டும் என்கிற ஆசையில் இருந்துள்ளார் லிவிங்ஸ்டன்.

பாடல் படுவதற்கு நமக்கு திறமை இருக்கிறது, நிச்சயம் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இளையராஜாவிடம் வாய்ப்பு கேட்டு சென்றுள்ளார் லிவிங்ஸ்டன். அப்போது இளையராஜா ஏவிஎம் ஸ்டுடியோவில் சீரியஸாக ஒரு பாடலுக்கு நோட்ஸ் எழுதிக் கொண்டிருக்க. அங்கு சென்ற சென்ற லிவிங்ஸ்டன் நேராக உள்ளே போய் அங்கு நோட்ஸ் எழுதிக் கொண்டிருந்த இளையராஜாவின் முதுகில் தொட்டு நான் நன்றாக பாடுவேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க என்று கேட்டுள்ளார்.

அதைக் கேட்டு கடும் கோபம் அடைந்த இளையராஜா, உடனே அங்கிருந்த தன்னுடைய உதவியாளரை அழைத்து கண்டபடி திட்டி இவரையும் வெளியே அனுப்பு என கொந்தளித்துள்ளார் இளையராஜா. உடனே அங்கிருந்த உதவியாளர்கள் லிவிங்ஸ்டனை தரதரவென்று இழுத்து கீழே கொண்டு விட்டுள்ளனர். இதனால்
லிவிங்ஸ்டன் ரொம்பவே வருத்தப்பட்டு, நம்ம ஒரு வாய்ப்பு தானே கேட்க போனோம். அதுக்காக இப்படி திட்டுறாங்களே என்று இவர் புரியாமல் அங்கிருந்து வந்துள்ளார்.

ஆனால் தான் செய்தது தவறு என்று பல பல வருடங்கள் கழித்து தான் எனக்கு லிவிங்ஸ்டனுக்கு புரிய வந்ததாகவும்,. அதற்கு பிறகு தான் நான் பாக்கியராஜ் இடம் உதவி இயக்குனராக வேலைக்கு சேர்ந்தேன் என்று பேட்டியில் நடிகர் லிவிங்ஸ்டன் தெரிவித்துள்ளார்.