நயன்தாராவை தேடி சென்ற லெஜெண்ட் சரவணன்… எத்தனை கோடி நயன்தாரா கேட்டார் தெரியுமா.?

0
Follow on Google News

தீபாவளி போன்ற பண்டிகை வந்தாலே போதும், கையில் பிடிக்க முடியாது நம்ம சரவணா ஸ்டார் அண்ணாச்சி லெஜெண்ட் சரவணன் அவர்களை. அவருடை கடையின் விளம்பரத்துக்காக இளம் முன்னணி நடிகைகள் முதல் வெளிநாட்டு அழகிகள் வரை அழைத்து வந்து விளம்பர படங்களில் நடித்து வந்தலெஜெண்ட் சரவணன் விளம்பரம் படங்களை பார்த்து கேலி, கிண்டல் செய்த மக்கள், இவர் ஏன் சினிமாவில் நடிக்க கூடாது என் கிண்டல் செய்தனர்.

சரவணா ஸ்டார் விளம்பர படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி – ஜெர்ரி இருவரும் சினிமாவில் படம் இயக்கும் வாய்ப்புக்காக, நீங்கள் சினிமாவில் நடிக்க எங்களிடம் அருமையான கதை இருக்கு என லெஜெண்ட் சரவணனை உசுப்பேத்தி விட்டனர். மக்கள் கிண்டல் செய்வதை சீரியசாக, உன்மையில் நாம் சினிமாவில் நடித்தால் மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என நம்பி, சினிமாவில் நடித்தார் லெஜெண்ட் சரவணன்.

இப்படத்தை சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர். காசு இருந்தால் போதும் ஹீரோவாகிவிடலாம் என்ற கனவில் சினிமாவில் காலடி எடுத்துவைத்தார் மிகப்பெரிய தொழிலதிபரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன் . அவர் நடித்த லெஜெண்ட் படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடலா என்பவர் நடித்தார்.

இந்த படத்தில் முதலில் நடிகை நயன்தாரா தான் லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியானது, பல முன்னணி நடிகைகளுக்கு பணத்தை வாரி இறைத்து விளம்பர படத்தில் ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்ட லெஜெண்ட் சரவணன் , முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை நயன்தாராவுடன் முதல் படத்தில் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என துடியாய் துடித்துள்ளார். அதற்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இது குறித்து சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறுகையில், நயன்தாரா வீட்டு முன்பு அவ்வப்போது லெஜெண்ட் சரவணனுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் கார் நிற்பதை பார்த்ததாகவும், அதாவது லெஜெண்ட் சரவணன் அவருடைய படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பலமுறை வீட்டிற்க்கே சென்று பேச்சுவார்த்தை நடந்தியதாகவும், மேலும் நயன்தாராவுக்கு இரட்டிப்பு சம்பளம் தருவதற்கு லெஜெண்ட் முன் வந்தும் நயந்தாரா தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் நயன்தாரா எனக்கு 100 கோடி கொடுத்தாலும் நான் உங்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க மாட்டேன் என இறுதியாக தெரிவித்து இருக்கிறார். அதாவது லெஜெண் சரவணன் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை தன்னுடைய முதல் படம் மிகப்பெரிய ஹிட் அடிக்க வேண்டும் என்கின்ற திட்டத்துடன் களம் இறங்கிய லெஜென் சரவணன்.

அதிக சம்பளம் கொடுத்து இந்த படத்தில் பல முன்னணி நடிகர் நடிகைகளை நடிக்க வைத்தார், இசை அமைப்பாளர் ஹரிஷ் ஜெயராஜ்க்கு பெரிய தொகை சம்பளமாக கொடுத்து இந்த படத்தில் ஒப்பந்தம் செய்தார். ஆனால் விலைகொடுத்து எதையும் விலைக்கு வாங்கலாம் என்று அதிகம் சம்பளம் கொடுத்து பலரை தன்னுடைய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த லெஜெண்ட் சரவணன், நயன்தாராவை மட்டும் விலைக்கு வாங்க முடியவில்லை என கூறப்படுகிறது.

இதற்கு காரணம் பவர் ஸ்டார் போன்ற ஒரு நடிகர் லெஜெண்ட் சரவணன், அவருக்கு ஜோடியாக நடித்தால் தன்னுடைய பிரெஸ்டிஜ் என்னாவது என நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் நயன்தாரா கெத்து தான் என்கிறது சினிமா வட்டாரங்கள்.