இந்தியாவே காரி துப்பும் வகையில் நடிகர் சித்தார்த்துக்கு தரமான பதிலடி கொடுத்த சுரேஷ் ரெய்னா.! இந்த அவமானம் தேவையா.?

0
Follow on Google News

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து பாலியல் ரீதியாக ஆபாசமாக விமர்சனம் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள நடிகர் சித்தார்த் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தற்போது தலையிட்டுள்ளது. இந்த விவகாரத்தை விசாரித்து நடிகர் சித்தார்த்துக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு மகாராஷ்டிரா மற்றும் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், அவரது ட்விட்டர் பதிவை முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. அதேபோல் பின்னணி பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் துன்புறுத்தப்படுவதற்கு தகுதியானவர் என்று துஷ்பிரயோகம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் விவாதம் என்று வரும்போது அவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு தள்ளப்படுவார்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும் நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “சித் நீங்கள் ஒரு நண்பர் ஆனால் கண்டிப்பாக உங்களிடமிருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இது மிகவும் மோசமானது. உங்கள் தாயும், தந்தையும் உங்களைப் பற்றி பெருமைப்படமாட்டார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு தனி நபர் மீது உங்கள் வெறுப்பை கொண்டு செல்லாதீர்கள்” என்று நடிகை குஷ்பு குறிப்பிட்டுள்ளார்.

சினிமா துறையினர் மற்றும் இல்லாமல் இந்தியாவின் விளையாட்டு வீரர்களும் சித்தார்த்தின் இந்த இழிவான செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, “விளையாட்டு வீரர்கள் வியர்வை மற்றும் ரத்தத்தை தங்கள் நாட்டுக்காக கொடுப்பவர்கள். நமது நாட்டின் பெருமை மற்றும் விளையாட்டின் அடையாளமாக இருக்கும் சாய்னாவுக்கு எதிராக மோசமான மொழிகள் மொழி பயன்படுத்தப்படுவதைப் பார்க்கும்போது வேதனை ஏற்படுகிறது என்றும்.

மேலும், இந்திய விளையாட்டு வீரராகவும், ஒரு மனிதராகவும் சாய்னாவுடன் இந்த தருணத்தில் உடன் நின்று அவருக்கு எதிராக சொல்லப்பட்டுள்ள கேவலமான வார்த்தைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்” என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் ரெய்னா கண்டனத்துக்கு பின்பு இந்த விவகாரம் இந்தியா முழுவதும் அனைவரும் கவனத்துக்கு சென்று சித்தார்த்தை இந்தியாவே காரி துப்பும் நிலைக்கு உருவாகியுள்ளது குறிப்பிடதக்கது.

மோடியை பஞ்சாபில் போட்டு தள்ள ஏற்கனவே நடந்த ஒத்திகை..! வெளியானது அதிர்ச்சியளிக்கும் எஸ்பிஜி ரிப்போர்ட்..!