இந்த கேவலமான செயலுக்காக வெட்கப்படுகிறேன்.! சூர்யா, காத்திக் விஷால், சித்தார்த் என வெளுத்து வாங்கிய காயத்ரி ரகுராம்.. எதற்கு தெரியுமா.?

0

பேட்மிட்டன் வீராங்கனை சாய்னா நேவாலை ஆபாசமாக பாலியல் ரீதியாக நடிகர் சித்தார்த் விமர்சனம் செய்துள்ளது இந்தியா முழுவதும் கடும் எதிப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் தேசிய மகளிர் ஆணையம் வரை சென்றுள்ள நிலையில். இது குறித்து பாஜகவை சேர்ந்த நடிகை காயத்ரி ரகுராம் கடும் கண்டனத்தை பதிவு செய்தவர் ஒரு நடிகரிடமிருந்து இது போன்ற கேவலமான பதிவுகள் வருவதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது என தெரிவித்தவர்.

மேலும்,வரவிருக்கும் அவரது திரைப்பட விளம்பரத்திற்காக வெறும் 5 நிமிட புகழ்காக. பிரதமரின் பாதுகாப்பு, தேசிய ஜாம்பவான்களை கேலி செய்யும் பிரபல நடிகர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்று வெட்கப்படுகிறேன். சித்தார்த்தின் இந்த கருத்துக்கு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும், திமுக குடும்பமும் அமைதியாக இருக்கிறது. இதுபோன்ற கீழ்த்தரமான கருத்துக்கள் கண்டிக்கப்படுவதில்லை. அதனால் மற்றவர்கள் இதுபோன்ற தவறுகளைத் தொடர்கிறார்கள். யாரும் பாடம் கற்க மாட்டார்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் ஜோதிமணி எங்கே? என கேள்வி எழுப்பிய காயத்ரி ரகுராம்,மேலும் முதல்வர் அளித்த வாக்குறுதிகள் மற்றும் அண்ணா மீது சத்தியங்கள் அனைத்தும் வேடிக்கைக்காக மட்டுமே. மாநில சட்டசபைக்கான உரையாடல் மட்டுமே. உண்மையான சமூக நீதி இல்லை, சாதனை படைத்த பெண்களுக்கு நீதி இல்லை. தொடர்ந்து சண்டை போடும் சூர்யா கார்த்தியும் விஷாலும் எங்கே?

நண்பர்கள் தவறு செய்யும் போது திடீரென்று மறைந்து விடுவார்கள். அவர்கள் தங்கள் நண்பர்களை திருத்துவதில்லை. தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா துறையினர் சித்தார்த் திரைப்படத்தை தடை செய்யவேண்டும். மேலும் முதல்வர் முக ஸ்டாலின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும். பிரதமரின் பாதுகாப்பு என்பது நகைச்சுவை அல்ல. இதை நடிகர் சங்கமும், தயாரிப்பாளர்கள் சங்கமும் கண்டிக்க வேண்டும்.

இதுபோன்ற செயல்களை அனுமதிக்க முடியாது. சித்தார்த் போன்றவர்களை திமுக பாதுகாத்து ஊக்கப்படுத்துகிறது என்றால். இதை திமுகவின் நோக்கமாகவும் பார்க்கிறேன். பிரதமரின் பாதுகாப்பு குறித்து மூன்றாவது நபரை கூற வைப்பது. இதற்கு திமுக பதில் சொல்ல வேண்டும்..சித்தார்த் இந்த செயலுக்கு திமுக பொறுப்பேற்கப்படும் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

மோடியை பஞ்சாபில் போட்டு தள்ள ஏற்கனவே நடந்த ஒத்திகை..! வெளியானது அதிர்ச்சியளிக்கும் எஸ்பிஜி ரிப்போர்ட்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here