ஆபாச பதிவாளர் நடிகர் சித்தார்த்தை நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட சாய்னாவின் தந்தை..!

0

பிரதமர் மோடி கடந்த வாரம் பஞ்சாப் சென்ற போது ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாதியிலே டெல்லி திரும்பினார். இந்த விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு ஆதரவாக இந்திய விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவால் கருத்து தெரிவித்திருந்தார். இதை பொறுத்து கொள்ள முடியாத நடிகர் சித்தார்த் மிக கடுமையா பாலியல் ரீதியாக ஆபாசமாக இந்திய விளயாட்டு வீராங்கனை சாய்நாவை விமர்சனம் செய்திருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்து நடிகர் சித்தார்த்துக்கு எதிராக கடும் கண்டன குரல் எழுந்தது. தேசிய மகளிர் ஆணையம் நடிகர் சித்தார்த்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது மேலும், சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க மகாராஷ்டிரா மற்றும் தமிழக டிஜிபிக்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. மேலும் இது குறித்து இந்தியாவை சேர்ந்த பிரபலங்கள் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வரும் நிலையில் சாய்னாவின் தந்தை இது குறித்து பேசியுள்ளார்.

தனது மகளை பாலியல் ரீதியாக ஆபாசமாக விமர்சனம் செய்த நடிகர் சித்தார்த் குறித்து, முன்னணி ஆங்கில ஊடகத்தில் இது குறித்து பேசியுள்ள ஹர்வீர் சிங் நேவால் (சாய்னாவின் தந்தை) தனது மகள் குறித்து இழிவான முறையில் பதிவிட்ட சித்தார்த்தை கடுமையாக சாடினார். ”என் மகள் குறித்து அவர் அப்படிப்பட்ட மிக கீழ்த்தரமான வார்த்தைகளைப் அந்த நடிகர் பயன்படுத்தியதை மோசமாக உணர்ந்தேன்.

அவர் நாட்டுக்கு என்ன செய்தார்? என் மகள் பதக்கங்களை வென்றுள்ளார், இந்தியாவிற்கு விருதுகளை கொண்டு வந்துள்ளார். இந்தியா ஒரு சிறந்த சமூகம் என்று நான் எப்போதும் நம்புகிறேன். ஒரு விளையாட்டு வீரர் எவ்வளவு போராடுகிறார் என்பதை அறிந்திருப்பதால், பத்திரிகையாளர்கள் மற்றும் சக விளையாட்டு வீரர்களின் சப்போர்ட் சாய்னாவுக்கு உள்ளது.மன்னிப்பு கேட்பது தான் சித்தார்த் செய்ய வேண்டிய அடிப்படை கடமை.

அந்த நடிகரையும் எனக்குத் தெரியாது. நேற்றுதான் அவரைப் பற்றி முதல்முறையாகக் கேள்விப்பட்டேன் என்ற சாய்னாவின் தந்தை. பேட்மிண்டன் மைதானத்தில் சாய்னா இந்தியாவுக்காக பதக்கங்களை வென்றுள்ள நிலையில், நடிகர் சித்தார்த் நாட்டிற்காக என்ன செய்தார் எனக் ஆபாச பதிவாளர் நடிகர் சித்தார்த்தை நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட சாய்னாவின் தந்தையின் இந்த பேச்சுக்கு நாடு முழுவதும் பலர் ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடதக்கது.

மோடியை பஞ்சாபில் போட்டு தள்ள ஏற்கனவே நடந்த ஒத்திகை..! வெளியானது அதிர்ச்சியளிக்கும் எஸ்பிஜி ரிப்போர்ட்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here