கீர்த்தி சுரேசையும் விட்டு வைக்காத விக்னேஷ் சிவன்..! நயன்தாரா அதிரடி முடிவுக்கு என்ன காரணம் தெரியுமா.?

0

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஏழு வருடமாக காதலித்து வருகின்றனர். தொடர்ந்து சினிமாவில் பிசியாக இருந்து வரும் நயன்தாரா, அடுத்தடுத்து புதிய படங்களில் கமிட்டாகி வருவதால், விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள் என்கிற குழப்பம் தொடர்ந்து நீடித்து வந்தது. மேலும் 40 வயதை நெருக்கிய நயன்தாரா முதிர் கன்னியாக இதுக்கு மேலும் திருமணம் செய்து கொள்ளாமல் காலத்தை கடத்தலாமா என்கிற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் சமீபத்தில் திருப்பதி சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி வருகின்ற ஜூன் 9ம் தேதி தங்களின் திருமண தேதியை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணம் திருப்பதியில் நடைபெற இருப்பதால், திருமணத்துக்கான முன்னேற்பாடுகளையும் பார்வையிட்டு திரும்பியுள்ளனர். தற்பொழுது விக்னேஷ் சிவன் மேனேஜர் ஒருவர் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்துக்கான அணைத்து வேலைகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

அடுத்தடுத்து நயன்தாரா புதிய படங்கள் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கையில், திடீரென திருமணம் முடிவுக்கான காரணம் வெளியாகியுள்ளது. சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படம் காற்று வாக்கில் இரண்டு காதல், இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் சமந்தா இருவரும் நடித்திருந்தார்கள். படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றது. படத்தின் தயாரிப்பாளர்களான விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடிக்கு எதிர்பார்த்த லாபத்தை பெற்று தந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்த சமந்தாவுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார் விக்னேஷ் சிவன், இருவரும் நயன்தாராவுக்கு தெரியாமல் அடிக்கடி தனியாக சந்தித்து வந்துள்ளனர், காற்று வாக்கில் இரண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருந்த போது, விக்னேஷ் சிவன் – சமந்தா இருவரும் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு செம்ம லூட்டி அடித்த விஷயம் நயன்தாராவுக்கு தெரிய வந்துள்ளது. மேலும் இருவரும் அடிக்கடி இது போன்று லூட்டி அடித்த தகவலும் நயன்தாராவுக்கு தெரியவித்துள்ளது.

இது குறித்து காதலன் விக்னேஷ் சிவனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார் நயன்தாரா, பொய் சொல்லி தப்பிக்க முடியாது என்பதை உணர்த்த விக்னேஷ் சிவன் இனி இது போன்ற தவறு நடக்காது என நயன்தாராவிடம் சரண்டராகியுள்ளார் விக்னேஷ் சிவன். ஏற்கனவே தானா சேர்ந்த கூட்டம் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கிய போது, அந்த படத்தில் நாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷ் உடன் இதே போன்று நெருக்கி பழகி வந்துள்ளார் விக்னேஷ் சிவன்.

இவர்கள் பழக்கம் இரவு பார்ட்டி வரை அடிக்கடி சென்று லூட்டி அடிக்கும் நிலைக்கு நெருக்கமானது. இது அப்போதே நயன்தாரா கவனத்துக்கு வந்ததை தொடர்ந்து விக்னேஷ் சிவனிடம் கடுமையாக சண்டை போட்ட நயன்தாரா பின்பு இனி இது போன்று நடக்க கூடாது என மன்னித்து ஏற்று கொண்டார். இந்நிலையில் தற்பொழுது கீர்த்தி சுரேசை தொடர்ந்து சமந்தா உடன் நெருக்கமாக விக்னேஷ் சிவன் லூட்டி அடித்ததை தொடர்ந்து,.

இதுக்கு மேலும் தாமதம் செய்ய கூடாது என முடிவு செய்து அதிரடியாக திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்கிற முடிவை நயன்தாரா எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணத்துக்கு பின்பும் சினிமாவில் நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், பட வாய்ப்புகள் நயன்தாரா திருமணத்துக்கு பின்பு குறைவதர்க்கு வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

சூரியை நம்ப வைத்து கழுத்தை அறுந்த  வெற்றிமாறன்.. சூரியின் பரிதாப நிலைமை என்ன தெரியுமா.?