அஜித்தால் பழிவாங்கப்பட்ட விக்னேஷ் சிவன்… புட்டு புட்டு வைத்த சந்தானம்..

0
Follow on Google News

நடிகர் அஜித்தின் நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் துணிவு. பொதுவாக அஜித் ஒரு படத்தின் இறுதி கட்டப்பிடிப்பின் பொழுது தான் தன்னுடைய அடுத்த படத்தில் கமிட் ஆகுவார். ஆனால் துணிவு படத்தின் ஆரம்ப கட்ட படப்பிடிப்பின் பொழுதே தன்னுடைய அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் விக்னேஷ் இவனுக்கு கொடுத்த அஜித், அந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க கமிட் செய்யப்பட்டது.

இந்த படத்திற்காக நடிகர் நடிகைகள் தேர்வு, மற்றும் லொகேஷன் தேர்வு என அனைத்தும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், படத்திற்கான முழு ஸ்கிரிப்டும் எழுதும் பணியில் மிக தீவிரமாக எழுதி முடித்த விக்னேஷ் சிவன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க இருந்த நிலையில் சில குளறுபடி காரணமாக படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதமானது. இதனால் பிப்ரவரி இறுதியில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வந்தது தீடிரென அஜித் படத்தில் இருந்து வெளியேற்ற பட்டார் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் ஆரம்பத்திலே அஜித்திடம் ஒன் லைன் ஸ்டோரியை சொல்லி தான் கமிட்டாகி இருந்த நிலையில், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு கதை பிடிக்கவில்லை என்பதால் தான் விக்னேஷ் சிவனை அஜித் வெளியேற்றி விட்டு, அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை கமிட் செய்தார் என கூறப்பட்டது. ஆனால் விக்னேஷ் சிவன் மீது தனிப்பட்ட வெறுப்பின் காரணமாக தான் அஜித் அவரை வெளியேற்றினார் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில் அஜித் – விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க மற்ற நடிகர்களும் தேர்வு செய்து அவர்களின் கதையை தெரிவித்து கமிட் செய்து வைத்திருந்தார் விக்னேஷ் சிவன், அந்த வரிசையில், காமெடிக்கு பிரேக் விட்டு, தொடர்ந்து ஹீரோவாக தான் நடிப்பேன் என ஹீரோவாக நடித்து வரும் சந்தானத்திடம் கதையை தெரிவித்து அஜித் நடிக்கும் படத்தில் கமிட் செய்திருந்தார் விக்னேஷ் சிவன்.

இந்நிலையில் அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகவிருந்த படம் குறித்து நடிகர் சந்தானம் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். அதில், அந்தப் படத்தில் தான் கமிட்டாகியிருந்த சந்தானத்துக்கு காமெடி மற்றும் சீரியஸ் ஆன கேரக்டர் என்பதால் அவருக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும் தெரிவித்த சந்தானம் , அதனால் தான் அந்தப் படத்தில் நடிக்க சந்தானம் ஒப்புக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் படத்தில் வித்தியாசமான சந்தானத்தை ரசிகர்கள் பார்த்திருக்கலாம் என்று கூறிய சந்தானம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் ட்ராப் ஆகியுள்ளதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த அஜித் படத்தில் இருந்து வெளியேற்ற பட்டதற்கு அஜித்துக்கு கதை பிடிக்கவில்லை என்பதால் தான் அஜித் வேறு ஒரு இயக்குனரை தேர்வு செய்தார் என கூறப்பட்டது.

ஆனால் கதை நன்றாக இருந்தது, துரதிர்ஷ்டவசமாக அந்தப் படம் ட்ராப் ஆனது என சந்தானம் பேசியுள்ளது, படத்தின் கதையில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என்பது போன்றும், குறிப்பாக கதை நன்றாக இருந்ததால் தான் சந்தனம் இந்த கமிட்டானது போன்று பேசியுள்ளார். அந்த வகையில் விக்னேஷ் சிவனை தன்னுடைய படத்தில் இருந்து அஜித் வெளியேற்றுவதற்கு கதை பிரச்சனையாக இருக்க வாய்ப்பில்லை என்றும்,

விக்னேஷ் சிவன் நடவடிக்கைகள் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டு, அவர் மீது இருந்த தனிப்பட்ட வெறுப்பு தான் தன்னுடைய படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை அஜித் வெளியேற்றி இருக்கலாம் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.