ரஜினியை அவமானப்படுத்திய மணிரத்தினம்… கொந்தளித்த ரசிகர்கள்.. PS1 நிகழ்வில் நடந்தது என்ன தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள படம் பொன்னியின் செல்வன். சோழ மன்னர்களின் வரலாற்று சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள பொன்னியின் செல்வன் படத்தை பலர் இதற்கு முன்பு திரைப்படமாக எடுக்க முயற்சித்தனர். அதில் எம்ஜிஆர், கமல்ஹாசன் போன்ற நடிகர்களும் முயற்சித்து எடுக்க முடியமால் போனது.

அந்த வகையில், 1989 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் கதையை படமாக்குவது குறித்து அப்போதே ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம், இயக்குனர் மணிரத்தினம் ஆகியோருடன் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை செய்துள்ளார். அதற்கான முயற்சியிலும் இறங்கிய நடிகர் கமல்ஹாசன் அந்தக் காலகட்டத்தில் இந்த படத்திற்காக சுமார் 2 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயம் செய்யப்பட்டு, இந்த படத்தை எத்தனை பாகங்களாக எடுக்கலாம் என திட்டமிட்டு ஒரே பாகமாகவே எடுப்பது என கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்க, மற்ற வேடங்களில் நடிகர்கள் பிரபு, சத்யராஜ் ஆகியோர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று அவர்களின் கதாபாத்திரமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் கமல்ஹாசன் முயற்சி தோல்வியை அடைந்து பொன்னியின் செல்வன் படத்தை கைவிட்டார் கமல்ஹாசன்.

இப்படி கமல்ஹாசன், எம்ஜிஆர் ஆகியோர் முயற்சித்தும் எடுக்க முடியமால் போன பொன்னியின் செல்வன் கதையை மணிரத்தினம் இரண்டு பாகங்களாக எடுத்து முடித்துள்ளார். இதில் முதல் பாகம் திரைக்கு வர இருக்கும் நிலையில், இந்த படத்திற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சி கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால் ப்ரோமோஷன் நிகழ்ச்சி மிக சப்பையாக இருந்ததால் மக்கள் மத்தியில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் பொன்னியின் செல்வன் மீது அதிகரிக்கவில்லை.

பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது, ஆனால் அந்த இரண்டு பாடல்களும் மக்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை. இதனை தொடர்ந்து புரமோஷன் நிகழ்ச்சியை மிக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்ட மணிரத்தினம். இந்த நிகழ்ச்சியில் ஏ ஆர் ரகுமான் மற்றும் அவருடைய குழுவினருடன் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் பாடுவதற்கும் ஏற்பாடு செய்தார்.

தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்குபெறும் வகையில் அழைப்பிதழும் தயார் செய்த மணிரத்தினம், அழைப்பிதழை முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து கொடுத்துள்ளார். அந்த அழைப்பிதழில் நடிகர் கமல்ஹாசன் பெயர் முதலாவதாகவும், ரஜினிகாந்தின் பெயர் இரண்டாவதாகவும் இடம் பெற்று இருந்தது.

இந்த தகவல் வெளியானதும், கொந்தளித்த ரஜினிகாந்த் ரசிகர்கள் மணிரத்தினத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். எங்கள் தலைவர் ரஜினிகாந்தை அவமானப்படுத்தி விட்டார் மணிரத்தினம், ஆகையால் தலைவர் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும், அப்போது தான் தலைவரின் அருமை மணிரத்தினத்திற்கு தெரியும் என்று மணிரத்தினத்தை கடுமையாக தீட்டிய ரஜினி ரசிகர்கள்.

மேலும் கமல்ஹாசன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கும், ரஜினிகாந்த் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கும் உள்ள வரவேற்பு என்ன என்பது தமிழ் சினிமா அறியும், ஆனால் திட்டமிட்டு தலைவர் ரஜினிகாந்தை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் கமல்ஹாசன் பெயரை முதலாவதாகவும், ரஜினியின் பெயரை இரண்டாவதாகவும் அழைப்பிதழில் மணிரத்தினம் அச்சடித்துவிட்டார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கொந்தளிக்க.

சென்னையில் நடக்க இருக்கும் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் பத்திரிகை விளம்பரங்களில் ரஜினிகாந்த் பெயர் முதலாவதாகவும், கமலஹாசன் பெயர் இரண்டாவதாகவும் இடம்பெறும் வகையில் மணிரத்தினம் ஏற்பாடு செய்து, ரஜினிகாந்த் ரசிகர்களை சமாதானப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.