மீண்டும் சிறுத்தை சிவா உடன் இணைந்த அஜித்… விக்னேஷ் சிவன் – அஜித் கூட்டணி என்னாச்சு தெரியுமா.?

0
Follow on Google News

சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமான சிறுத்தை சிவா, முதல் படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்து அடுத்த இரண்டாவது படத்தில் நடிகர் அஜித் குமாரை வைத்து இயக்கும் அளவிற்கு பிரபலமானார். அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம் படம் வெளியான அதே தேதியில் விஜய் நடித்த ஜில்லா படமும் வெளியானது.

இந்த போட்டியில் வீரம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது, இதனை தொடர்ந்து அடுத்தடுத்து அஜித் – சிறுத்தை சிவா கூட்டணி தொடர்ந்தது. இதில் வேதாளம் மிகப்பெரிய ஹிட் அடித்தது, அதன் பின்பு வெளியான விவேகம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. தோல்வியை தழுவிய சிறுத்தை சிவாவுக்கு உதவி செய்யும் வகையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் நடிக்க கால் சீட் கொடுத்தார் அஜித்.

இவர்கள் கூட்டணியில் நான்காவது படமான விஸ்வாசம் மிக பெரிய ஹிட் அடித்தது. சிறுத்தை சிவா- அஜித் கூட்டணியில் வெளியான நான்கு படங்களுமே V எழுத்தில் தொடங்கும் பெயராக இருக்கும். இதை செண்டிமெண்டாக கருதுகிறார் சிறுத்தை சிவா என்பது குறிப்பிடதக்கது. தற்பொழுது எச் வினோத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் அஜித்.

இந்த நிலையில் சமீபத்தில் சிறுத்தை சிவாவை நேரில் அழைத்து சந்தித்த அஜித் மீண்டும் ஐந்தாவது முறையாக சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைப்பதை உறுதி செய்துள்ளார். புதிய படத்திற்கான பணியை தொடங்கச் சொல்லி சிறுத்தை சிவாவிடம் அறிவுறுத்தியுள்ளார் நடிகர் அஜித். இதனை தொடர்ந்து சூர்யா நடிக்கும் புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ள சிறுத்தை சிவா, இந்த படத்தை முடித்த பின்பு அஜித்துடன் ஐந்தாவது முறையாக கூட்டணி அமைக்கிறார்.

அஜித் – சிறுத்தை சிவா புதிய படத்தின் தலைப்பு செண்டிமெண்டாகவே வழக்கம் போல் V எழுத்தில் தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்பொழுது ஹெச் வினோத் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜித், அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடித்து முடித்த பின்பு தான் சிறுத்தை சிவா படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

error: Content is protected !!