அட்லீ உன் பருப்பு இங்க வேகாது.. தெலுங்கு சினிமாவில் இருந்து விரட்டபட்ட அட்லீ.. எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

சென்னை : பொதுவாக பிறமொழி திரைப்படங்களை சுட்டு தங்களது திரைப்படம் போல இயக்குவது தமிழக இயக்குனர்கள் வழக்கம். ஆனால் டைரக்டர் அட்லீயின் ஸ்டைல் வேறுமாதிரி. தமிழ்திரையிலகில் வெளிவந்த திரைப்படங்களை ஒரே குவளையிலிட்டு சுவையான லஸ்ஸியாக ரசிகர்களுக்கு கொடுப்பது அட்லீயின் ஸ்டைல். மனிதர் ஆட்டையை போடுவதென முடிவுசெய்துவிட்டால் மோஷன் போஸ்டர் முதல் அனைத்தையும் சுட்டுவிடுவார்.

அட்லீயின் அறிமுகப்படமான ராஜாராணி தொடங்கி மெர்சல், தெறி உட்பட அனைத்தும் அந்தரகமே. இருப்பினும் சோகத்தில் வாழும் தமிழ்ரசிகர்களுக்கு இவரது திரைப்படங்கள் புத்துணர்ச்சியை கொடுத்ததோ என்னவோ அட்லீயின் அனைத்து படங்களும் வணிகரீதியாக வெற்றிபெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக நடிகர் விஜயை வைத்து தொடர்ந்து இரண்டுபடங்கள் இயக்கியுள்ளார்.

மேலும் இவர் பாலிவுட்டிலும் கால்பதிக்கிறார். லயன் எனும் பெயர் சூட்டப்பட்ட அந்த திரைப்படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார். நடிகை நயன்தாரா அந்த திரைப்படத்தில் ஒரு விசாரணை அதிகாரியாக நடிக்கவுள்ளார். பெரும்பொருட்செலவில் இந்த திரைப்படம் தயாராகிறது. இதைத்தொடர்ந்து தெலுங்கில் ஒரு படம் இயக்க அட்லீக்கு வாய்ப்பு வந்தது.

அந்த திரைப்படத்தில் பான் இந்தியா ஹிட் கொடுத்த புஷ்பா திரைப்படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அடுத்தடுத்த வெற்றியை தொடர்ந்து அல்லு அர்ஜுனுக்கு நூறுகோடி சம்பளம் பேசப்பட்டதாக தெரிகிறது. இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்சன் தயாரிப்பதாக இருந்தது.

இந்த திரைப்படத்தை இயக்க அட்லீக்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அட்லீ தனக்கு 40 கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த நடிகர் அல்லு அர்ஜுன் அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் அட்லீயின் இயக்கத்தில் தான் நடிக்கப்போவதில்லை என கூறி தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடியுள்ளார். லைக்கா நிறுவனமும் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் நடிகையின் டார்ச்சர் தாங்க முடியமால் அஜித் எடுத்த அதிரடி முடிவு..! என்ன செய்தார் அஜித் தெரியுமா.?

error: Content is protected !!