மொத்தமும் போச்சே… ஏமாற்ற அட்லீ போட்ட திட்டம்…. பரிதாபத்தில் ஷாருக்கானின் ஜவான்….

0
Follow on Google News

பழைய படத்தின் கதையை சுட்டு, படம் எடுப்பதாக அட்லீ மீது தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வந்தாலும், அதெல்லாம் பற்றி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் கண்டு கொள்ளாமல், மீண்டும் எதாவது ஒரு படத்தின் கதையையும், பல படங்களில் இருந்து காட்சியியையும் சுட்டு அடுத்த படம் எடுக்க கிளம்பிவிடுவார் அட்லீ. ஒரு முறை தான் கதையை சுட்டு படம் எடுப்பதாக எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்த அட்லீ, இசையில் எப்படி ஏழு ஸ்வரங்கள் இருக்கிறதோ அதே போன்று தான் என்று அடுத்த படத்தில் இருந்து கதை திருடுவதை நியப்படுத்தி பேசினார்.

முதல் இரண்டு படங்களில் கதைகளை மட்டும் சுட்டு வந்த அட்லீ, அவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், பிகில் போன்ற படங்களில் இடம் பெற்ற காட்சிகள், ஹாலிவுட் படத்தில் இருந்து சுடப்பட்டது என்பது வெளியானது. ஹாலிவுட் படத்தில் இடம்பெற்ற காட்சியை சிறிதும் மாற்றம் செய்யாமல் அப்படியே காப்பி அடித்து வைத்திருந்தார் அட்லீ. ஆனால் ஆடியோ நிகழ்ச்சியில் பேசும் போது சொந்தமாக யோசித்து படம் இயக்கும் இயக்குனர் கூட அந்த அளவுக்கு பில்டப் கொடுக்க மாட்டார்கள். அட்லீ பில்டப் ஓவராக இருக்கும்.

அட்லீ இயக்கத்தில் தமிழில் வெளியான நான்கு படங்களில், முதல் இரண்டு படங்கள் ராஜா ராணி, தேறி ஆகிய படங்கள் வெற்றி, அடுத்து வெளியான மெர்சல் , பிகில் போன்ற படங்களை எடுத்த தயாரிப்பு நிறுவனங்கள் அதன் பின்பு அவர்கள் தயாரிப்பில் இதுவரை எந்த ஒரு பெரிய படமும் வெளியாகவில்லை, அந்த அளவுக்கு மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியவர் அட்லீ. பிகில் படத்தை தயாரித்த எஜிஎஸ் நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின்பு பெரிய பட்ஜெட் படமாக தற்பொழுது விஜய் நடிக்கும் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் கமிட்டாகியுள்ளார்கள்.

ஆனால் விஜய்யை வைத்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் இதுவரை மீண்டு வரமுடியாமல் தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் வெளியான மெர்சல் படம் படு தோல்வியை சந்தித்து பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலையில் இருந்தது, ஆனால் மெர்சல் படத்தில் இடம்பெற்ற மத்திய அரசுக்கு எதிரான, ஜிஎஸ்டி மற்றும் இலவச மருத்துவமனை போன்ற சர்ச்சை கூறிய காட்சிகள் பாஜகவினர் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

எந்த எதிர்ப்பு மெர்சல் படத்திற்கு ப்ரோமோஷனாக அமைய, அப்படி அந்த படத்தில் என்ன தான் இருக்கு என மக்கள் திரையரங்குகளுக்கு செல்ல தொடக்கியதால் மெர்சல் படம் மிக பெரிய நஷ்டத்தில் இருந்து தப்பித்தாலும், தயாரிப்பளருக்கு அந்த படம் நஷடத்தையை தான் ஏற்படுத்தியது. இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியான நான்கு படங்களில் இரண்டு படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை பெற்றது.

அதில் மெர்சல் படத்திற்கு பாஜகவின் தரப்பில் இருந்து வந்த எதிர்ப்பின் காரணமாக அந்த படத்திற்கு ஏற்பட்ட பிரமோஷன் ஓரளவு அந்த படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்ததை தொடர்ந்து அதே பார்முலாவை தற்பொழுது ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ஜவான் படத்தில் அட்லி கையாண்டு உள்ளார்.

அதாவது எப்படி மெர்சல் படம் தமிழக அளவில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி ப்ரமோசனை அப்படத்திற்கு பெற்று தந்ததோ.! அதேபோன்று ஜவான் திரைப்படம் ரிலீஸ் ஆகி பாஜக தரப்பினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி அந்த படத்திற்கு மிகப்பெரிய பிரமோஷன் ஆக அமைந்து மிகப்பெரிய வெற்றியை பெற்று விடும் என்கின்ற ஒரு நோக்கில் தான் அட்லி ஜவான் படத்தில் சில சர்ச்சை கூறிய காட்சிகளை வடிவமைத்துள்ளார் என்கிற விமர்சனம் எழுந்துள்ளது.

ஜவான் படத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஆக்சிஜன் குறைபாட்டினால் மருத்துவமனையில் இறந்த சம்பவம் மற்றும் பல பாஜக சார்ந்த ஒரு அரசியல் சம்பவங்களை இத்திரைப்படத்தில் உள்ளே வைத்துள்ளார் அட்லி. ஆனால் தற்பொழுது பாஜகவினர் மிக தெளிவாகவே இருந்து வருகிறார்கள், காரணம் ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான பதான் திரைப்படம் குறிப்பிட்டு ஒரு தரப்பின் எதிர்ப்பின் காரணமாக அந்த படம் பெரும் வசூலை வாரி குவித்தது.

அதேபோன்று தமிழ்நாட்டில் மெர்சல் திரைப்படம் பாஜகவினர் எதிர்ப்பின் காரணமாக அந்த படத்திற்கு பிரமோஷன் ஆக அமைந்தது, அந்த வகையில் அட்லி பாஜகவை சீண்டு வகையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை ஜமான் படத்தில் இடம்பெற வைத்துள்ளதை தேவையின்றி நாம் எதிர்ப்பதன் மூலம் அது அந்த படத்திற்கு பிரமோஷன் ஆக அமையும் ஆனால் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால், அந்த படத்தை யார் பார்க்கப் போகிறார் என்று பாஜகவினர் யாரும் ஜவான் படத்தை கண்டு கொள்ளாததால், அட்லியின் பார்முலா ஜவான் படத்தில் எடுபடவில்லை.

அட்லி பிற படங்களில் இருந்து கதைகளை சுடுவது காட்சிகளை காப்பியடிப்பது மட்டுமின்றி சில சர்ச்சை கூறிய காட்சிகளை வைத்தால் அதன் மூலம் அவர் எதிர்ப்பின் மூலம் தன்னுடைய படத்திற்கு பிரமோசனம் கிடைக்கும் என்கின்ற ஒரு திட்டம் தற்பொழுது தவிடு பொடியாகி தோல்வியில் தழுவியுள்ளது என கூறப்படுகிறது.