பா.ரஞ்சித்தை புறக்கணித்து சிறுத்தை சிவாவை நோக்கி படையெடுக்கும் நட்சத்திரங்கள்..! பரிதாப நிலையில் பா.ரஞ்சித்.! இது தான் காரணமாம்.?

0
Follow on Google News

தன்னை புரட்சி இயக்குனர் என கட்டிக்கொண்ட இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க முன்னனி நட்சத்திரங்கள் புறக்கணித்து, ஐயோ .. பா.ரஞ்சிதா வேண்டவே வேண்டாம் என தெறித்து ஒடி கொண்டிருக்கும் காட்சிகள் ஒருபக்கம் அரங்கேறி வந்து கொண்டிருக்க, மறுபக்கம் தொடர்ந்து குடும்பங்கள் கொண்டாடும் மாஸ் வெற்றியை கொடுத்து வரும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க முன்னனி நடிகர்கள் சிறுத்தை சிவாவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்னர்.

இந்நிலையில் சிவா இயக்கத்தில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிக பெரிய ஹிட் கொடுத்ததை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான கடந்த 8 வருடங்களில் எந்த ஒரு படமும் சொல்லும்படியாக இல்லை என்பதால் சிவா இயக்கத்தில் அண்ணாத்தே படம் முடிந்ததும் , சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக செய்திகள் வெளியானது. ஆனால் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வரும் நடிகர் சூர்யா வாடிவாசல் மற்றும் இயக்குநர் பாலா உடன் ஒரு படம் என இரு படங்களில் கமீட் ஆகி உள்ள நிலையில்,

சிவாவுடன் உடனடியாக படம் பண்ணும் சூழல் தற்போது இல்லை என்பதால். சூர்யாவுக்கு காத்திருக்க முடியாது என்பதை முடிவு செய்து தனது அடுத்த படத்துக்கான வேலையை அண்ணாத்தே படம் முடிந்த கையோடு தொடங்கிவிட்டார். இதனை தொடர்ந்து சமீபத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும், அதற்காக நேரில் அழைத்து கதை கேட்டதாக செய்திகள் வெளியான நிலையில் தனக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை படி பா.ரஞ்சித் படத்தில் நடிப்பதை விஜய் தவிர்த்து விட்டதாக கூறபடுகிறது.

இந்நிலையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், புதிய படத்திற்கான கதையை சிவா நேரில் விஜயை சந்தித்து சொல்லியுள்ளார். கதை ரெம்ப விஜய்க்கு பிடித்து போக விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது. மேலும் தனியார் தொலைக்காட்சி பேட்டில் ஒன்றில் நடிகர் விஜய் படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் உள்ளது நல்லதே நடக்கும் என சிறுத்தை சிவா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில், விஜய் போன்ற முன்னனி நட்சத்திரங்கள் நடிக்க தவிர்த்து வரும் நிலையில், சமீபத்தில் கூட பா.ரஞ்சித் இயக்கும் நட்சத்திரம் நகர்கிறது படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைப்பதாக தகவல் வெளியான நிலையில், அவரும் அந்த படத்தில் இருந்து விளக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து தொடர்ந்து இரண்டு படம் இயக்கிய பா.ரஞ்சித் அதன் பின்பு உச்ச நட்சத்திரங்கள் அவர் படத்தில் நடிக்க தயங்குவது, அவர் தொடர்ந்து சில சமூகத்தை சீண்டி சர்ச்சையில் சிக்குவது தான் காரணம் என கூறப்படுவது குறிப்பிடதக்கது.