என் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்திவிட்டார் திரிஷா… மன்சூர் அலிகான் வழக்கை விசாரித்த நீதிபதி என்ன சொன்னார் தெரியுமா.?

0
Follow on Google News

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மன்சூர் அலிகான், லியோ படத்தில் த்ரிஷா உடன் பெட்ரூம் சீன் இருக்கும் என்று எண்ணியதாகவும், எண்பதுகளில் நடிகைகள் குஷ்பூ ரோஜா ஆகியோரை பெட்டில் தூக்கி போட்ட மாதிரி திரிஷாவை போடலாமா என்று யோசித்தேன் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இப்போதெல்லாம் படங்களில் ரேப் சீன் இல்லை படங்களில் நாம் பார்க்காத ரேப் சீனா என்று கேட்டிருந்தார்.

மன்சூர் அலி கானின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்த வீடியோவை பார்த்த நடிகை திரிஷா, மன்சூர் அலிகானுக்கு கண்டனம் தெரிவித்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். அது மட்டும் இல்லாமல், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் போட்டிருந்தனர்.

இவ்வாறு நடிகை த்ரிஷாவுக்கு வலுக்கும் ஆதரவை பார்த்த மன்சூர் அலிகான், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக அறிக்கையை வெளியிட்டு இருந்தார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே த்ரிஷா என்னை மன்னித்துவிடு என்று சொல்லவில்லை மரணித்து விடு என்று தான் சொன்னேன் என்று கூறி மன்சூர் அலிகான் மீண்டும் பிரச்சனையை உருவாக்கினார். அதே சமயம், தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசிய த்ரிஷா குஷ்பூ சிரஞ்சியாகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

அதாவது, நடிகை திரிஷா, தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருப்பதாகவும், அதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறினார். அத்துடன் நீதிமன்றத்தில் நடிகை திரிஷா மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து ஒரு கோடி இழப்பீடு கேட்டு மனு அளித்திருந்தார்.

மன்சூர் அலிகான் தொடர்ந்த இந்த வழக்கு, இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கு தொடர்பாக நடிகை குஷ்பூ த்ரிஷா மற்றும் சிரஞ்சீவி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், சினிமாவில் நடிக்கும் நடிகர்களை பல இளைஞர்கள் தங்கள் ரோல் மாடலாக பின்பற்றும் நிலையில், பொதுவெளியில் இப்படி அநாகரிகமாக பேசலாமா? தான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறும் மன்சூர் அலிகான் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க நிபந்தனையற்ற மன்னிப்பு கூறினாரா? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேபோல் த்ரிஷா தரப்பு, பாதிக்கப்பட்ட தாமே அமைதியாக இருக்கும் நிலையில் தற்போது எதற்காக அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார் என்று தெரியவில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மன்சூர் அலிகான் தொடர்ந்த மான நஷ்ட வழக்குக்கு நீதிபதி பதிலடி கொடுத்த அதே வேளையில், மன்சூர் அலிகான் கொடுத்த மனு குறித்து நடிகைகள் திரிஷா குஷ்பூ மற்றும் சிரஞ்சீவி பதில் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மீண்டும் இந்த வழக்கு டிசம்பர் 22ஆம் தேதிக்கு விசாரணைக்கு வரும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.