கண்ட கனவெல்லாம் பாழாய் போச்சே.. அய்யோ.. கடும் சோகத்தில் திரிஷா.. என்னாச்சு தெரியுமா.?

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்கின்ற அடைமொழியுடன் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்து இருந்த நடிகை நயன்தாரா, அவருடைய திருமணம் வரை மற்ற நடிகைகள் அவருடைய இடத்தை நெருங்க கூட முடியவில்லை அளவுக்கு மார்க்கெட்டில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்து வந்தவர். நயன்தாரா திருமணத்திற்கு பின்பு அவருடைய மார்க்கெட் மிகப்பெரிய சரிவை சந்தித்து தற்போது பட வாய்ப்புகள் பெரிதும் கைவசம் இல்லாமல் உள்ளார்.

இந்நிலையில் நயன்தாரா விட்டு சென்ற அந்த நம்பர் ஒன் இடத்தை தக்க வைப்பதற்காக நடிகை திரிஷா பல்வேறு யுகங்களை வகுத்தார். அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்த திரிஷா. அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படத்தில் ஜோடி சேர்வதால் தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்திக் கொள்ளலாம் என விஜய் நடிக்கும் லியோ படத்தில் ஜோடி சேர்ந்தார்.

அதேபோன்று மற்ற முன்னணி நடிகர்கள் படத்திலும் ஜோடி சேர முயற்சித்து வருகிறார் திரிஷா, இருந்தும் அதற்கான வாய்ப்பு அமையவில்லை, திரிஷா கைவசம் ஹீரோயின் சப்ஜெக்ட் படமான தி ரோட் மற்றும் லியோ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே உள்ளது. நயன்தாரா மார்க்கெட் இழந்து உள்ளதால் தன்னை தேடி வரும் என திரிஷா எதிர்பார்த்து காத்து கொண்டிருக்க ஆனால் பெரும்பாலான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகை ரஷ்மிகா மந்தானாவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

ஆனால் ரஷ்மிகா மந்தானா ஹிந்தி தெலுங்கு ஆகிய படங்களில் ரொம்ப பிஸியாக இருப்பதால், அடுத்த இரண்டு வருடங்களுக்கு தன்னால் கால்ஷீட் கொடுக்க முடியாது என்று கைவிரித்து விட்டாராம். அதே போன்று நடிகை பூஜா ஹெட் அடுத்த ஒரு வருடத்திற்கு தன்னால் கால்ஷீட் கொடுக்க முடியாது அந்த அளவுக்கு ஹிந்தி, தெலுங்கு படங்களில் பிஸியாக இருக்கிறேன் என்று கைவிரித்து விட்டார்.

இதனை தொடர்ந்து, சமீபத்தில் உடல்நிலை பிரச்சினை காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வந்த சமந்தா தற்பொழுது மீண்டும் உடல்நிலை சரியாகி சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கும் நிலையில் தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் சமந்தாவின் வரவேற்புக்காக காத்திருக்கிறார்கள். அந்த வகையில் நயன்தாரா இல்லாத இடத்தை தான் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று திரிஷா கண்ட கனவு எல்லாம் பாழாய் போனது அவருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்து கடும் சோகத்தில் திரிஷா இருந்து வருவதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!