திமிராக நடந்துகொண்டு… பி.வாசுவிடம் முக்குடைபட்ட சாய்பல்லவி… என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், பிரபு, வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி, இந்த படம் மிக பெரிய ஹிட் அடித்தது, இதில் வடிவேலு நகைச்சுவை காட்சிகள் பெருமளவு பேசப்பட்டது, மேலும் ஜோதிகா நடிப்பு மிக பெரிய பாராட்டை பெற்றது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக சந்திரமுகி அமைந்தது, சந்திரமுகி படத்திற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான படம் பாபா.

இந்த படம் மிக பெரிய தோல்வியை சந்தித்து ரஜினிகாந்த் சினிமா வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டது என பலர் தெரிவித்து வந்த நிலையில், சந்திரமுகி படத்தில் மிக பெரிய ஹிட் கொடுத்து, சந்திரமுகி வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த், நான் யானை அல்ல குதிரை, விழுந்த உடனே எழுந்து ஓடுவேன் என்று பாபா படம் தோல்வியின் போது கடுமையாக விமர்சனம் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தார் ரஜினிகாந்த், அந்த வகையில் சந்திரமுகி ரஜினி சினிமா கேரியரில் முக்கிய படமாக அமைந்தது.

இந்நிலையில் இயக்குனர் பி.வாசு மீண்டும் சந்திரமுகி பார்ட் 2 எடுக்க ரஜினியின் கால் சீட்காக காத்திருந்தார், ஆனால் ரஜினிகாந்த் கால் சீட் கிடைக்காது என்று உறுதியான பின்பு தற்பொழுது அந்த படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரதத்தில் நடிகர் ராகவலரன்ஸ் நடிப்பது உறுதியாகி உள்ளது, இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கின்றனர், அதில் நயன்தாரா நடித்த வேடத்தில் நடிகை திரிஷா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து ஜோதிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகை சாய்பல்லவியை அணுகியுள்ளார் இயக்குனர் பி.வாசு, ஏற்கனவே ராகவா லாரன்ஸ், திரிஷா, வடிவேலு ஆகியோரிடம் படத்தின் கதையை சொல்லி அவர்களை ஓகே செய்துள்ளா இயக்குனர் பி. வாசு, நடிகை சாய் பல்லவியிடமும் படத்தின் கதையை சொல்லியுள்ளார், படத்தின் கதையை ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை முழு கதையையும் கேட்டுள்ளார் சாய் பல்லவி.

ஆனால், படத்தின் கதையை கேட்க தொடங்கிய சாய்பல்லவி காதை சொல்ல தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் இருந்தே படத்தின் கதையில் சிறு சிறு திருத்தங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வந்துள்ளார் சாய் பல்லவி, இயக்குனர் பி.வாசுவும் பொறுமையாக சாய் பல்லவி கதையின் சொல்லும் திருந்தங்களை நோட் செய்து கொண்டு தொடர்ந்து கதையை காட்சிகளுடன் விளக்கி கொண்டு வந்துள்ளார், இடையில் குறுக்கிட்டு அடுத்தடுத்து கதையில் திருத்தம் தெரிவித்துள்ளார் சாய் பல்லவி.

இந்நிலையில் படத்தின் கிளைமஸ் கட்சியை இயக்குனர் பி.வாசு தெரிவித்து படத்தின் முழ கதையையும் கட்சிகளுடன் விளக்கி முடிந்த பின்பு, கிளைமஸ் காட்சிகளும் மாற்றம் செய்ய வேண்டும் என்றும், மேலும் கிளைமஸ் கட்சியில் கதையில் திருத்தம் செய்யவேண்டும் என சாய் பல்லவி தெரிவிக்க, பொறுமை இழந்த இயக்குனர் பி.வாசு, நீ இந்த படத்தில் நடிக்கவே வேண்டாம், வேறு ஒரு நடிகையை பார்த்து கொள்கிறோம் என தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார் பி.வாசு என கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா இரண்டாவது திருமணம்… ரஜினி கடும் எதிர்ப்பு… போதையில் இருவரும் தப்பு செய்து விட்டோம், தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் வேதனை…