அவருடன் கீர்த்தி சுரேஷ் இரவில்…. காதலன் கண்முன்னே தான் அது எல்லாமே நடந்ததாம்.. அட கடவுளே..!

0

கடந்த சில தினங்களாக சினிமா வட்டாரத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் கிசுகிசுக்கப்பட்டு வருவது தான் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் படத்தில் ஆடியோ வெளியீட்டு விழாவில் தன்னுடைய குடும்பத்துடன் கலந்து கொள்வது வழக்கம் . அந்த வகையில் சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பெற்றோர் கலந்து கொண்டனர்.

ஆனால் அவருடைய மனைவி கலந்து கொள்ளவில்லை, இதற்கு காரணம் நடிகர் விஜய் மற்றும் அவருடைய மனைவி சங்கீதா இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மனைவி லண்டனில் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இயக்குனர் அட்லி மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் விஜய் அவருடைய மனைவியுடன் வந்து வாழ்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனியாக வந்து அட்லீதை வாழ்ந்து விட்டு சென்றார் விஜய்.

இதனால் விஜய் அவருடைய மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ய இருப்பதாகவும், மேலும் கீர்த்தி சுரேசை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கிசு கிசுக்கள் வெளியானது. ஆனால் இது குறித்து விசாரித்ததில், கீர்த்தி சுரேஷ் பள்ளியில் படிக்கும் பொழுதே தன்னுடைய பள்ளி தோழனை காதலிக்க தொடங்கியுள்ளார், இந்த காதல் சுமார் 13 வருடங்களுக்கு மேலாக தொடர்கிறது.

பள்ளி காதலனை கீர்த்தி சுரேஷ் காதலித்து வருவது இரண்டு குடும்பத்தினரும் கீர்த்தி சுரேஷ் சினிமாவுக்கு வருவதர்க்கு முன்பே பச்சை கொடி காட்டியுள்ளனர். மேலும் கீர்த்தி சுரேஷ் திருமணம் அடுத்த மூன்று அல்லது நான்கு வருடங்களில் நடத்துவதற்காக இரண்டு குடும்பத்தினரும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் பெற்றோர்கள் சினிமா துறையை சார்ந்தவர்கள் என்பதால், மிக எளிதாக சினிமா துறையில் கீர்த்தி சுரேஷ் உள்ளே நுழைந்து விட்டார். ஆனால் சினிமா துறையில் வருவதற்கும் முன்பே தன்னுடைய காதலனிடம் இதுகுறித்து ஆலோசித்துள்ளார். ஆனால் காதலன் உன்னுடைய விருப்பத்திற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன் என்று கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நடிப்பதற்கு பச்சைக்கொடி காட்டிய பின்பே கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நடிக்க வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் தனக்கு நெருக்கமான பல சினிமா நட்சத்திரங்களுக்கு தன்னுடைய காதலனை தனியாக அறிமுகம் செய்து வைத்துள்ள கீர்த்தி சுரேஷ் , ஆனால் எந்த ஒரு காரணத்திற்காகவும் தன்னுடைய காதலன் மீடியா பார்வையில் பட்டுவிடாமல் இருப்பதற்கு மிக ரகசியமாக தன்னுடைய காதலை இதுவரை வைத்து வந்துள்ளார். இதற்கு முன்பு இசையமைப்பாளர் அனிருத்துடன் கிசுகிசுக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் இரவு பார்ட்டிகளில் ஒன்றாக மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் கூட வெளியாகி சமூக வலைதளத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

ஆனால் கீர்த்தி சுரேஷ் – அனிருத் கலந்து கொண்ட அதே இரவு பார்ட்டியில் கீர்த்தி சுரேஷின் காதலனும் கலந்து கொண்டதாகவும், அந்த பாட்டி நடப்பதற்கு முன்பே கீர்த்தி சுரேஷ் தன்னுடைய காதலனை அனிருத்திடம் அறிமுகப்படுத்தி வைத்திருந்த நிலையில், அந்த பார்ட்டியில் குறிப்பாக கீர்த்தி சுரேஷ் – அனிருத் இருவரும் மிக நெருக்கமாக புகைப்படம் எடுக்கும் பொழுது கூட , அவருடைய காதலன் அங்கே அருகில் தான் இருந்துள்ளார்.

அன்று இரவு பார்ட்டியில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்தது அனைத்துமே கீர்த்தி சுரேஷ் காதலனின் கண் முன்னே நடந்தது என்றும் தற்பொழுது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் சினிமா துறையைச் சார்ந்த சிலர், கீர்த்தி சுரேஸை காதலிப்பதாக அப்ரோச் செய்த போது, தான் ஏற்கனவே பள்ளி தோழனை காதலித்து வருவதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தன்னுடைய காதலில் உறுதியாக இருந்துள்ளார் கீர்த்தி சுரேஷ் என கூறப்படுகிறது.