தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர் சங்கர். இவருக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இரண்டாவது மகள் அதிதி சங்கர் மருத்துவ படிப்பை முடித்துவிட்டு மருத்துவம் சார்ந்த தொழில் செய்யாமல் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டினார். தந்தை சங்கர் ஆரம்பத்தில் அதிதி சங்கர் சினிமாவில் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், மகளின் ஆசைக்காக ஒருவன் படத்தில் நடிக்க பச்சைக்கொடி காட்டினார் சங்கர்.
முதல் படத்திலே அதிதி சங்கர் ஒரு பாடல் பாடினார், மேலும் அந்தப் படத்தில் அவருடைய நடிப்பு மற்றும் நடனம் என அனைத்துமே ரசிகர்களால் பாராட்டப்பட்டது. ஒரு கிராமத்து கதைக்கு ஏற்றார் போல் அதிதி சங்கர் நடிப்பு இருந்தது. இதனை தொடர்ந்து அதிதி சங்கர் கிராமத்துக் கதைக்கு தான் செட் ஆகுவார் என்கின்ற ஒரு தோற்றத்தை மறைப்பதற்காக விருமன் படம் வெளியான பின்பு அவர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் மாடர்ன் டிரஸ்ஸில் வந்தார்.

அதீதி சங்கர் மாடர்ன் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் பெரும்பாலும் வரவேற்பு இல்லை. அதே நேரத்தில் தந்தையின் செல்வாக்கை வைத்து ஆசைக்கு ஒரு படம் அல்லது இரண்டு படம் அதிதி சங்கர் நடித்துவிட்டு போகட்டும் என்றும், ஆனால் அவரை நயன்தாரா, திரிஷா போன்ற கனவு கன்னிகள் வரிசையில் தமிழக இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததே தவிர அவருடைய அவருடைய அழகில் மயங்கி சொக்கும் அளவுக்கு அவருக்கான ரசிகர்கள் உருவாகவில்லை.
இருந்தாலும் ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டு, அதிதி சங்கர் செய்கின்ற அலப்பறையும் மேலும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிதி சங்கர் மீது எரிச்சலை ஏற்படுத்தியது. விருமன் படம் வெளியான பின்பு தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் இடைவிடாது கலந்து கொண்ட அதிதி அந்த படத்தில் அவர் பாடிய பாடலை அனைத்து மேடைகளிலும் பாடி ரசிகர்களுக்கே இதை பார்த்து பார்த்து போரடித்து விட்டது.
மேலும் பல பேட்டியில் கலந்து கொண்டு அவர் அளவுக்கு அதிகமாக பேசியது, இதெல்லாம் ஓவர் என முகம் சுழித்தனர் ரசிகர்கள். விருமன் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் கமிட்டானார். அடுத்தடுத்து அதிதி சங்கருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை, காரணம் சிட்டி சப்ஜெக்ட்டில் இவரை கமிட் செய்ய இயக்குனர்கள் தயங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் பிரின்ஸ் மிகப்பெரிய தோல்வியை சந்தித்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்பொழுது நடித்தவரும் மாவீரன் படத்தின் இயக்குனரிடம் கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்த, இயக்குனர் மற்றும் சிவகார்த்திகேயன் இடையில் மிகப்பெரிய மோதல் உருவாகியுள்ளது, இதனால் சில காலம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் அதிதி சங்கர் கைவசம் இருக்கும் ஒரு படமும் பிரச்னையில் சிக்கியுள்ளது. மேலும் முன்னணி நடிகர்களுடன் மட்டுமே நடிப்பேன் என அதிதி பிடிவாதம் பிடிப்பதால். கிளம்பு கிளம்பு காற்று வரட்டும் என்கிறார்கள் தமிழ் சினிமா இயக்குனர்கள். இதனால் அதிதி சினிமா கேரியர் முடிவுக்கு வர இருப்பதால், அவர் மருத்துவ துறையில் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது.

