அவமானப்பட்ட சூர்யா, ரஜினி, கமல்…விஜயகாந்த் இறந்து சோகம் கொஞ்சம் கூட உங்களுக்கு இல்லையா.?

0
Follow on Google News

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் கலைஞர் 100’ விழாவை தமிழ் திரையுலகம் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிப்பாளர் சங்கம் தலைமையில், சென்னையில் உள்ள கிண்டி ரேஸ் கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மிக பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதில் சினிமாத்துறையை சேர்த்த ரஜினி, கமல், சிவராஜ்குமார், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், கார்த்தி, அருண் விஜய், விஜய் ஆண்டனி, நயன்தாரா, வடிவேலு, இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் இருவரும் பங்கேற்பர் என எதிர்பார்க்க பட்ட நிலையில், அஜித், விஜய் இருவரும் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.மேலும் இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜாவும் வரவில்லை

விடாமுயற்சி படப்பிடிப்பில் துபாயில் இருந்த அஜித், கலைஞர் நூறாண்டு விழா நடைபெற்ற போது சென்னையில் தான் இருந்துள்ளார், அதே போன்று நடிகர் விஜய்யும் சென்னையில் தான் இருந்துள்ளார், இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து கொண்டே, திரை துறையினர் நடத்திய கலைஞர் நூறாண்டு விழாவுக்கு வரவில்லை. இதனால் அஜித், விஜய் வருவார்கள் என அவர்களை பார்க்க அவர்களுக்காக வந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கடந்த 2006-2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகம் சார்பில் “பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா” நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகமே கலந்து கொண்டது. இதில் பேசிய அஜித், இதுபோன்ற விழாவுக்கு தங்களை கட்டாயப்படுத்தி வரவைக்கிறார்கள் என அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்னிலையில் மேடையிலே வெளிப்படையாக பேசியது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வகையில் கலைஞர் நூறாண்டு விழாவுக்கு அஜித் வருவது சந்தேகம் தான் என ஏற்கனவே தகவல் வெளியானது. ஆனால் விஜய், இதுபோன்ற ஆளும் கட்சி நிகழ்ச்சியில் எல்லாம் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டாமல் கலந்து கொள்வார். ஆனால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இப்படி தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் வராமலே இந்த கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது.

குட்டி சுவரை எட்டி பார்த்தா உசுர கொடுக்க நூறு பேர் என சினிமாவில் வசனம் பேசும் ரஜினிகாந்த், கலைஞர் நூறாண்டு விழாவில் பேசும் போது பெரும்பாலும் காலி இருக்கைகள் மத்தியில் பேசிய ஒரு அவலம் ரஜினிகாந்துக்கு ஏற்பட்டது, இது போன்று சொர்ப்ப எண்ணிக்கையில் உள்ள மக்கள் மத்தியில் ரஜினிகாந்த் இதுக்கு முன்பு பேசியதே இல்லை என்கிற அளவுக்கு படு தோல்வியை அடையும் அளவுக்கு கலைஞர் நூறாண்டு விழா தோல்வியை சந்தித்துள்ளது.

கலைஞர் நூறாண்டு விழாவை முன்னின்று நடத்திய ஆர்.கே,செல்வமணி பெருப்பில் இருக்கும் பெப்சி தொழிலாளர்கள் மட்டுமே குடுமபத்துடன் கலந்து கொண்டால் கூட சுமார் 20 ஆயிரம் பேர் வந்திருக்க முடியும், அந்த நிகழ்வுக்கு வந்த ரஜினி, கமல், சூர்யா ரசிகர்கள், மற்றும் திமுக உடன் பிறப்புகள் திரளாக திரன்டு வந்திருந்தால், இந்த நிகழ்வு மக்கள் வெள்ளத்தில் திணறி இருக்கும், ஆனால் கூட்டத்தில் வந்த சிலரும் கூட நாங்கள் அஜித், விஜய் வருவார்கள் என்று தான் வந்தோம் என தெரிவித்து போனதை பார்க்க முடிந்தது.

இந்த அளவுக்கு தமிழ் திரை துறை சார்பில் மிக பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு தோல்விக்கு காரணம், சமீபத்தில் நடந்த விஜயகாந்த் மரணம் தான் என்றும், விஜயகாந்த் மரணம் அடைந்தது, தமிழ் திரை துறையை சேர்ந்த உச்ச நட்சத்திரங்கள் பெரிதும் வருத்தப்பட வில்லை என்றாலும் கூட, பெப்சி தொழிலாளர்கள் மற்றும் டெக்கினிசன்கள் இன்னும் அந்த சோகத்தில் இருந்து மீளவில்லை,

இப்படி ஒரு சூழலில் கலைஞர் நூறாண்டு விழா கொண்டட்டம் தேவை தானா என்று பலரும் புறக்கணித்ததால் தான் காலி இருக்கைகள் மத்தியில் நடந்து முடிந்துள்ளது திரைத்துறையினர் நடத்திய நூறாண்டு விழா, மேலும் காலி இருக்கையில் மத்தியில் ரஜினி, கமல், சூர்யா ஆகியோர் பேசியது அவர்களுக்கு மிக பெரிய அவமானம் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறர்கள்.