இறந்தவர் பணத்தை ஏப்பம் விடும் விஷாலின் போர்ஜரிக்கு முடிவு கட்டப்படுகிறது… சினிமா பக்கமே வரமுடியாது..

0
Follow on Google News

நடிகர் சங்கம் பொதுச் செயலாளர், தயாரிப்பாளர் சங்கம் தலைவர் என முக்கிய பதவியில் இருக்கு நடிகர் விஷால், சினிமா துறையில் பல்வேறு தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார். குறிப்பாக பண விஷயத்தில் பல போர்ஜரி வேலைகளை செய்து வருகிறார் விஷால் என்கிற குற்றசாட்டு உள்ளது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மறைந்த தயாரிப்பாளர் பாலு, அவர் மரணம் அடைவதற்கு முன்பு விஷால் தன்னுடைய தயாரிப்பில் நடிக்க 7 கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்திருந்தார்.

ஆனால் பாலு இறந்த பின்பு அவரது மனைவி தன் கணவர் கொடுத்த அட்வான்ஸ் தொகையை திருப்பித் தரும்படி விஷாலிடம் பலமுறை கேட்டும் திருப்பி கொடுக்காமல் இறந்தவர்கள் பணத்தை கூட இரக்கமில்லாமல் ஏப்பம் விட்டு வருகின்றவர் விஷால். இந்நிலையில் பிரபல பைனான்சியர் அன்பு செழியனிடம் வாக்கிய கடனை திருப்பி கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வந்த விஷால் மற்றவர்களிடம் காட்டு அதே போர்ஜரி வேலையை அன்புச்செழியனிடம் காட்டியுள்ளார்.

ஆனால் அன்புசெழியன் கொடுத்த நெருக்கடியில் தப்பிக்க முடியமால், லைக்கா நிறுவனத்திடம் சில ஒப்பந்தம் செய்து அவர்களிடம் வாங்கிய பணத்தில் அன்புசெழியன் கடனை அடைத்தார் விஷால். ஆனால் லைக்கா நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி நேர்மையாக நடந்து கொள்ளாமல் வழக்கம் போல் தன்னுடைய போர்ஜரி வேலையை அவர்களிடமும் காண்பித்தார் விஷால்.

இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றதும் விஷாலை கடுமையாக கண்டித்த நீதிமன்றம் லைக்கா நிறுவனத்திடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த அறிவுறுத்தி உள்ளனர்.ஆனாலும் விஷால் நீதிமன்ற தீர்ப்பை கண்டு கொள்ளவில்லை, இதனை தொடர்ந்து விஷால் சொத்துக்களை பறிமுதல் செய்வதர்க்கு கூட நீதிமன்றத்தால் நடவடிக்கை எடுக்க முடியாதபடி விஷால் பெயரில் எந்த ஒரு சொத்துக்களும் இல்லை,

அவருடைய சகோதரி மற்றும் அவருடைய பெற்றோர்கள் பெயரில் தான் சொத்துக்கள் இருக்கிறது. இதனால் தனக்கு எந்த ஒரு பாதிப்பு இல்லை என ஜாலியாக இருக்கும் விஷால், மேலும் லைக்கா நிறுவனத்தில் வாங்கிய பணத்தை திரும்பி கொடுக்க வேண்டும் என்ற எந்த ஒரு எண்ணமும் இல்லாமல் ரொம்ப கூலாக இருந்து வருகிறார். இதுபோன்று பல போர்ஜரி வேலைகளை செய்து வரும் விஷால், பாதிக்கப்பட்டவர்கள் நெருக்கடி கொடுத்தால் ,

உதயநிதி ஸ்டாலின் பெயரை பயன்படுத்தி, நான் யார் தெரியுமா.? உதயநிதி என்னுடைய நண்பர் என்றெல்லாம் அவர் உதயநிதி பெயரை தவறாக பயன்படுத்தி அடாவடியில் ஈடுபட்டு வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் புகார் எழுந்ததை தொடர்ந்து தன்னுடைய பெயரை இனி பயன்படுத்து கூடாது என உதயநிதி தரப்பில் இருந்து விஷாலுக்கு எச்சரிக்கை செய்தி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷால் பல போர்ஜரி வேலைகளை செய்து வந்தாலும் கூட, அவர் தயாரிப்பளார் சங்க தலைவராக இருந்து வருவதால், அவர் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பல பிரச்சனைகளில் இருந்து தற்காத்து கொண்டு வருகிறார், அந்த வகையில் விரைவில் வர இருக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில், லைக்கா நிறுவனத்தின் CEO தமிழ் குமரன் மற்றும் AGS நிறுவனத்தை சேர்ந்த கல்பாத்தி அகரம் போட்டியிடுகிறார்கள்,

இவர்கள் விஷால் போட்டியிடும் அணிக்கு எதிராக போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பெரும் கார்பொரேட் முதலாளிகள் இம்முறை போட்டியிடுவதால், மேலும் பலரின் கோபத்திற்கு உள்ளாகியுள்ள விஷால் இம்முறை தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தோல்வியடைய செய்து சினிமாவில் இருந்து விஷாலை துடைத்து எரியாவே மிக பெரிய கார்பொரேட் நிறுவனங்கள் தேர்தலில் களம் காண இருப்பதாக கூறப்படுகிறது.