லியோ வசூலுக்கு விழுந்த ஆப்பு… மிக பெரிய சூழ்ச்சியில் சிக்கிய விஜய்…

0
Follow on Google News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நடிகர்கள் சஞ்சய் தத் மற்றும் அர்ஜூன் கதாபாத்திரத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் 420 கோடி வசூலை கடந்த நிலையில், லியோ திரைப்படமும் எல்சியூவாக அமைந்தால் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ திரைப்படமானது அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. அன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் வேறு எந்த ஒரு பெரிய படமும் ரிலீஸ் ஆகாதால் லியோ படத்திற்கு நல்ல கலெக்ஷன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே வேளையில் மற்ற மாநிலங்களில் அவர்களின்‌ சூப்பர்ஸ்டார் படங்கள் ரிலீஸ் ஆவதால் அங்கு வசூல் மழை பொழிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வீரசிம்ஹா ரெட்டிக்கு பிறகு பாலகிருஷ்ணன் நடிப்பில் உருவாகும் பகவந்த் கேசரி படத்தில் காஜல் அகர்வால், ஸ்ரீ லீலா, அர்ஜுன் ராம்பால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்கள். இப்படமானது அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வந்துள்ளது. மேலும் ஜெயிலர் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் ஆன சிவராஜ் குமாரின் நரசிம்மன் கதாபாத்திரம் மக்களால் ஈர்க்கப்பட்டுள்ள நிலையில், மார்க்கெட்டில் மிகவும் டிமாண்டில் இருந்து வருகிறார்.

கன்னட மொழி படங்களில் சிவ குமாரின் நடிப்பை கொண்டாடியவர்கள் தற்போது தமிழிலும் கொண்டாடி வருகின்றனர். அவ்வாறு தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வரும் சிவராஜ்குமாரின் அடுத்த படம் தான் கோஸ்ட். இவரின் மஃப்டி படம் தற்போது தேடி தேடி பார்க்கப்பட்டு வரும் நிலையில், பக்கா என்டர்டைன்மென்ட் படமாய் உருவாகிய கோஸ்ட் படமும் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் டைகர் நாகேஸ்வரராவ் படமும் அக்டோபர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாம். இவையனைத்தும் ஒரே நாளில் வெளியாகுவது, லியோ படத்தின் வசூலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பது தற்போதைய புது தலைவலியாக பார்க்கப்பட்டு வருகிறது. அதுவும் ஜெயிலர் படத்திற்குப் பிறகு சிவாண்ணாவின் மார்க்கெட் உயர்ந்துள்ள நிலையில், விஜய்க்கு இப்படம் பிற மொழிகளில் ஓடுவது சவாலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இது ஒரு புறம் இருக்க, மறுபக்கம் ஜெயிலர் படத்தின் வசூலை லியோ படம் முறியடித்து விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று நிரூபிப்பார் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இதுவரை ஜெயிலர் திரைப்படம் 525 கோடி வசூலை அள்ளியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் கொஞ்சமும் சளைக்காமல் கமெண்ட் பக்கத்தில் வந்து லியோ படம் 8 நாளில் ஜெயிலர் வசூலை முறியடித்து விடும் என சவால் விட்டு வருகின்றனர்.

இதனிடையே லியோ படத்தின் அட்வான்ஸ் புக்கிங் எப்போது ஓபனாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றாலும், பெரும்பாலும் ஒரு வாரத்துக்கு முன்புதான் டிக்கெட் புக்கிங் தொடங்கும். ஆனால், லியோ படத்தின் அட்வான்ஸ் டிக்கெட் ரிசர்வேஷன், 6 வாரங்களுக்கு முன்பே தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.