பாஜகவுடன் கைகோர்க்கும் விஜய்… தப்பிக்க வேறு வழியில்லை… சூடு பிடிக்கும் 2024 தேர்தல் களம்..

0
Follow on Google News

கடந்த காலங்களில் நடிகர் விஜய், அவருடைய திரைப்படம் மற்றும் ஆடியோ வெளியிட்டு விழாவில், மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்து அரசியல் பன்ச் பேசி மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியவர், அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் இடம்பெற்ற பாஜகவுக்கு எதிரான பன்ச் வசனத்தினால், தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, இது மெர்சல் படத்திற்கு விளம்பரமாக அமைந்து அந்த படத்தின் வெற்றிக்கு பாஜகவினரே காரணமாக அமைந்தனர்.

இதனை தொடர்ந்து பாஜகவை சீண்டும் வகையில் விஜயின் நடவடிக்கைகள் தொடர்ந்து இருந்து வந்த காரணத்தில் பாஜக – விஜய் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றது, இந்த சூழலில் மாஸ்டர் படப்பிடிப்பு சமயத்தில், விஜய்க்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும்,இந்த சம்பவத்துக்கு பின்பு தன்னை தற்காத்து கொள்ள விஜய் பாஜக குறித்து விமர்சனம் செய்வதை நிறுத்தி கொண்டார் என பரவலாக பேசப்பட்டு வந்தது.

ஆனால் கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது சைக்கிளில் வந்து விஜய் வாக்களித்தது பெட்ரோல், டீசல் விலையை பாஜக அரசு உயர்த்தியுள்ளதால், நூதன முறை பிரச்சாரம் தான் சைக்கிளில் வந்து விஜய் வாக்களித்தது என்றும், அந்த வகையில் விஜய் தன்னுடைய ஆதரவை திமுவுக்கு தெரிவித்துள்ளார் என்கிற செய்தி, வாக்கு பதிவு நடந்து கொண்டிருக்கும் போதே காற்று தீ போன்று பரவி அது திமுகவுக்கு ஜாதகமாக மாறியது.

இந்த நிலையில் கடந்த 2021 தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றத்துக்கு பின்பு, தமிழ் சினிமா துறையில் ஆதிக்க செலுத்த தொடங்கிய உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படம் வெளியிடபட்டதில் ஒரு சில பிரட்சனை காரணமாக உதயநிதி ஸ்டாலின் மீதி அதிருப்தியில் இருந்த விஜய், வாரிசு படத்தை ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ்க்கு கொடுத்து கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இதனால் விஜய் – உதயநிதி இருவருக்கும் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை அடைத்து.

இதனால் வாரிசு படம் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து பின்பு வெளியானது, இந்த நிலையில் தற்பொழுது விஜய் நடிக்கும் லியோ படமும் இது போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் என எதிர்பார்க்க படுகிறது, இந்த நிலையில் தொடர்ந்து தன்னுடைய படத்திற்கு ரெட் ஜெயண்ட் மூவிஸ் தரப்பில் இருந்து வரும் நெருக்கடிகளை சமாளிக்க பாஜக பக்கம் மெல்ல சாய்த்து வரும் விஜய், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியகியுள்ளது.

ஏற்கனவே 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சியில் இருந்த போது, அரசியல் ரீதியாக தனக்கு கொடுக்கப்படம் நெருக்கடியின் காரணமாக 2011 சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு வாய்ஸ் கொடுத்து ஜெயலலிதாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார் விஜய், இது போன்று பல்வேறு காலகட்டத்தில் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்திய விஜய் தற்பொழுது தனக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சந்திக்க பாஜகவிடம் திரைமறைவில் நெருக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் 2014 குஜராத் முதல்வராக இருந்த மோடி பிரதமராவதற்கு முன்பு நடிகர் விஜயை தனியாக சந்தித்து பேசிய சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறியது, அந்த வகையில் விஜய் – மோடி இருவருமே நட்பு பாராட்டி வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.