உதயநிதிக்கு எதிராக அப்பாவி ரசிகர்களை பகடைய காயாக பயன்படுத்தும் விஜய்… பின்னணி என்ன.?

0
Follow on Google News

நடிகர் விஜய் தனக்கு எப்பொழுது எல்லாம் பிரச்சனை வருகிறதோ அப்போது எல்லாம் தன்னுடைய ரசிகர்களை பகடைக்காயாக பயன்படுத்தி வருகின்றவர். அதற்காகத்தான் அஜித் போன்று ரசிகர் மன்றங்களை கலைத்து விட்டு, நான் சினிமாவில் நடிக்கிறேன் என்னுடைய படம் நன்றாக இருந்தால் நீங்கள் பார்க்கலாம் என்கின்ற துணிவு நடிகர் விஜய்க்கு இல்லை.

மேலும் தன்னுடைய எதிர்காலம் மற்றும் சுய லாபத்திற்காக ரசிகர்கள் தேவை என்பதை புரிந்து கொண்டு தேவைக்கு அவர்களை பயன்படுத்தி வருகிறார் என்கின்ற விமர்சனமும் உண்டு. நடிகர் விஜய் தொடர்ந்து அதிமுக – திமுக என மாற்றி மாற்றி தன்னுடைய தேவைக்கு அவர்களை பயன்படுத்தி கொண்டார் என்பது கடந்த கால வரலாற்று சம்பவங்கள் பல உண்டு

2006முதல் 2011 வரை திமுக ஆட்சியில் விஜய் நடிப்பில் வெளியான காவலன் படத்திற்கு பிரச்சனை வந்த போது ஜெயலலிதாவின் உதவியை நாடினார் விஜய். பின்பு அந்த படம் வெளியான பின்பு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்து வந்தார் விஜய், இதன் பின்பு அதிமுக ஆட்சிக்கு வந்த பின்பு “தலைவா” படத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக சில சேட்டைகளை செய்து ஜெயலலிதாவை சீண்டி பார்த்தார் விஜய்.

இதனால் தலைவா படம் திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. ஜெயலலிதா என்கின்ற ஆளுமைக்கு எதிராகவும் மேலும் விஜய்க்கு ஆதரவாகவும் யாரும் குரல் கொடுக்க முன்வரவில்லை. இந்நிலையில் நேரடியாக ஜெயலலிதாவிடமே சரண்டரான விஜய், கைகட்டி, தலைவா படத்தை வெளியிடுவதற்கு அம்மா நீங்க தான் உதவி செய்ய வேண்டும் என்று கெஞ்சி கூத்தாடி வீடியோ வெளியிட்ட பின்பு, விஜய் நடித்த தலைவா படம் திரைக்கு வந்தது.

அதனை தொடர்ந்து, ஜெயலலிதா மறைவுக்கு பின்பு ஆட்சிக்கு வந்த எடப்பாடியை சீண்டுவதும் பின்பு, தன்னுடைய படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டால் எடப்பாடி பழனிச்சாமியை மரியாதை நிமித்தமாக திடீரென்று சந்திக்கிறேன் என்று வெள்ளைக்கொடி தூக்கி சமாதானம் பேச செல்வதும் விஜய்க்கு புதியது கிடையாது. அதே போன்று மத்திய பாஜகவுக்கு எதிராக பேசி வந்த விஜய் மாஸ்டர் படத்தின் போது நடந்த வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய பின்பு இதுவரை பாஜகவுக்கு எதிராக வாயே திறக்கவில்லை.

இப்படி தேவையில்லாத அரசியல் சர்ச்சையில் சிக்கி பெரும் பிரச்சனையை விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறவர் நடிகர் விஜய். அந்த வகையில் அஜித் நடிக்கும் துணிவு படத்தை பொங்கல் அன்று தமிழ்நாடு முழுவதும் உதயநிதி ஸ்டாலின் வெளியிட இருக்கின்றார். அதே நாளில் நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் வெளியாகிறது. ஆனால் பெரும்பாலான திரையரங்குகளில் துணிவு படம் வெளியாவதால் வாரிசு படத்திற்கு திரையரங்குகள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள்.

இதன் பின்னணியில் உதயநிதி ஸ்டாலின் இருப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ள நிலையில், உதயநிதிக்கு எதிராக தன்னுடைய காய் நகரத்தில் ஆரம்பித்துள்ளார். விஜய் சுமார் ஐந்து வருடங்களுக்கு பின்பு திடீரென்று தனது ரசிகர்கள் மீது அக்கறை வந்து நேரில் அழைத்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார். மேலும் விஜய் மக்கள் இயக்கத்தை பலப்படுத்த வேண்டும் என்றும் ரசிகர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

விஜய் ரசிகர் சந்திப்பு பின்னணியில் குறித்து விசாரித்ததில், வாரிசு படம் வெளியாவதற்கு பெரும் பிரச்சனையாக இருப்பது உதயநிதி என்றும், அதற்காக எச்சரிக்கை விடும் விதத்தில் தான் தன்னுடைய ரசிகர்களை நேரில் அழைத்து பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் விஜய் என்கின்ற ஒரு தகவல் வெளியாகிறது. ஆனால் விஜய்யின் இந்த உருட்டலை உதயநிதி பெரிதாக கண்டு கொள்ளவில்லை என்கிறது சினிமா வட்டாரங்கள்.