தப்பிக்க வேறு வழியே இல்லையா.?விஜய்க்கு அவருடைய தந்தை வைத்த செக்…

0
Follow on Google News

நடிகர் விஜய் மற்றும் அவருடைய பெற்றோர் இடையில் நடந்த பிரட்சனை காரணமாக கடந்த சில வருடங்களாவே விஜய் அவருடைய தாய் தந்தையுடன் பேசி கொள்ளாமல் இருந்து வந்தார். அப்படி தாய் – தந்தை உடன் விஜய் பேசி கொள்ளாமல் இருந்த போது. விஜய்யின் தாய்-தந்தை திருமண விழாவை மகன் இல்லாமல் தனியாக சந்திரசேகர் – ஷோபனா இருவரும் கொண்டாடினார்கள்.

இதை பார்ப்பவர்களுக்கு மகன் இருந்தும் ஆதரவற்றவர் போன்று தாய் தந்தையினர் அவர்களின் திருமண விழாவை கொண்டாடுவது பரிதாபமாக இருக்கிறது என பலரும் கருத்து தெரிவித்தனர். மேலும் சினிமா துறையை சேர்ந்த பலரும் விஜய் அவருடைய தாய் – தந்தை உடன் பேசாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் இசையமைப்பாளர் கங்கை அமரன் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், விஜய் தன் பெற்றோரை தன்னிடமிருந்து தள்ளிவிடுவதைப் பார்ப்பது எனக்கு வேதனையாக இருந்தது. நான் பயப்பட ஒன்றுமில்லை என்பதால் இதை வெளிப்படையாக சொல்கிறேன். அவர் பெற்றோரை விட்டுப் பிரிந்து செல்கிறார் என்ற செய்தியைக் கேட்டதும் நான் மிகவும் எரிச்சலடைந்தேன், ஏனென்றால் விஜய்யை அவரது பெற்றோர் எவ்வாறு வளர்த்தார்கள் என்பதை நான் பக்கத்தில் இருந்து பார்த்தேன்.

எனவே விஜய் ரசிகர்கள் அனைவரும் அவரை திரும்பி வந்து பெற்றோருடன் வாழச் சொல்ல வேண்டும்” என்று கங்கை அமரன் தெரிவித்து இருந்தார். இதே போன்று நடிகர் நெபோலியேன் பேட்டி ஒன்றில், விஜய் அவரோட அப்பா அம்மா கிட்டயே பேசமாட்றாரே. விஜய் தன்னோட அப்பா அம்மா கிட்டயே பேசிக்கிறது இல்லனு எல்லோரும் சொல்றாங்க. அமெரிக்கா வரை இந்த செய்தி வந்திருக்கு. அது உண்மையா? பொய்யா? என்று கூட எனக்கு தெரியாது. முதல்ல அவரோட அப்பா அம்மா கூட சமரசம் ஆகட்டும் என நடிகர் விஜய்க்கு அறிவுரை வழங்கி இருந்தார் நடிகர் நெப்போலியன்.

இப்படி விஜய் அவருடைய தாய் தந்தை உடன் பேசாமல் இருந்து வந்தது அவருக்கு எதிராக தொடர்ந்து விமர்சனம் வந்த நிலையில், விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட விஜய் தாய் – தந்தை முன் வரிசையில் அமர்ந்திருந்தார்கள், அப்போது விஜய் தாய் விஜய்யை பார்த்து வணக்கம் வைக்கிறார், ஆனால் விஜய் தன்னுடைய தாயையும் பத்தோடு பதினொன்றாக கூட்டத்தோடு கூட்டமாக வணக்கம் வைத்து விட்டு கடந்து சென்றது மேலும் விஜய்யை டேமேஜ் செய்வது போன்று அமைத்தது.

இந்த நிலையில் இமேஜ் டேமேஜ் ஆவதை சரி செய்யும் வகையில், நடிகர் விஜய் அவருடைய தாய், தந்தையிடம் சமரசம் செய்யவேண்டும் என்கிற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே சமீபத்தில் தாய் சோபாவை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்ட நடிகர் விஜய், அந்த புகைப்படத்தை தன்னுடைய மக்கள் மன்ற தலைவர் புஸ்லி ஆனந்த் மூலம் வெளியிட்டு விளம்பரப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தாய் சோபாவை சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்ட விஜய், தந்தையை சந்தித்த புகைப்படம் ஏதும் வெளியாக வில்லை. அந்த வகையில் விஜய் தாய் உடன் மட்டுமே சமரசமாகியுள்ளார், இன்னும் தாய் உடன் சமரசமாகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்,

விஜய்யின் ஆரம்ப கால சினிமா வாழ்க்கையின் போது அவரை ஹீரோவாக்க வேண்டும் என்ற ஆசையில் பாரதிராஜாவிடம் மகனின் ஆல்பத்தை காண்பித்தேன் ஆனால், பாரதிராஜாவோ “என்னிடம் ஏன் இதையெல்லாம் கொண்டு வந்த என்றும், மேலும், பாரதிராஜா போன்ற பல முன்னணி இயக்குநர்கள் விஜய்யை நடிக்க வைக்க மறுத்துவிட்டனர் என தெரிவித்த எஸ்.ஏ.சந்திரசேகர்.

இந்த நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர், இவ்வாறு பேசியுள்ளது, விஜய் சினிமாவில் நடிக்க வைக்க பல இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு சென்ற எஸ்.ஏ.சந்திரசேகர், இறுதியில் யாரும் விஜய்யை வைத்து படம் எடுக்க முன் வரவில்லை என்றால் தந்தையே அவருடைய இயக்கத்தில் விஜய்யை சினிமாவில் அறிமுகம் செய்துள்ளார். இப்படி விஜய்யின் ஆரம்ப கட்டத்தில் துணையாக இருந்த அவருடைய தந்தையிடம் விஜய் பேசாமல் இருக்கலாமா என்கிற விமர்சனம் தற்பொழுது எழுந்துள்ளது.

அந்த வகையில் தாயிடம் சமரசமான விஜய் இன்னும் தந்தையிடம் இன்னும் சமரசமாகாத வருத்தத்தில் தான் மேடையில் விஜய்யின் ஆரம்ப கால வாழ்க்கை பற்றி பேசி விஜய்க்கு அவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், வைத்து செக், விரைவில் தாயை சந்தித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டது போன்று தந்தையுடனும் சமரசமாகி புகைப்படம் எடுத்து வெளியிடுவார் விஜய் என கூறப்படுகிறது.

error: Content is protected !!