விஜய்க்கு அந்த தகுதி இருக்கா.? ரஜினி கொடுத்த அட்வைஸ் …

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினி பேசிய ஒவ்வொரு பேச்சு, சமீபபத்தில் நடந்து வரும் சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கு விஜய்க்கு பதிலடியாக அமைத்துள்ளது என்கின்ற கருத்துக்கள் உலா வருகிறது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் லியோ படத்தின் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சி மிக பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு முக்கிய காரணம் விஜய் நடிப்பில் வெளியான அழகிய தமிழ் மகன் திரைப்படத்தில் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்ற போது, விஜய்க்கு எதிராக சமூக அக்கறை கொண்ட அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது, அப்போது இது போன்ற காட்சிகளை கூட தவிர்க்க முயற்சி செய்கிறேன் எ‌ன விஜய் தெரிவித்திருந்தார். ஆனால் அடுத்தது விஜய் நடித்த துப்பாக்கி, சர்க்கார் போன்ற படங்களில் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் விஜய் நடித்தது கடும் எதிப்புக்கு உள்ளானது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா படத்தில் ரஜினி சிகரெட் மற்றும் மது அருந்துவது போன்ற இடம்பெற்ற கட்சிகளுக்கு கடும் எதிப்புகளை குறிப்பிட்ட அரசியல் கட்சி தலைவர் தெரிவித்து வந்த நிலையில், தான் சினிமாவில் சிகெரெட் மற்றும் மது அருந்துவதால் அதை பின்பற்றி என்னுடைய ரசிகர்கள் சிகரெட் மற்றும் மது அருந்தும் பழக்கத்துக்கு உள்ளாகிறார்கள் என்றால், இனி நான் நடிக்கும் படத்தில் மது அருந்துவது, சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்கிற முடிவுக்கு வந்தார் ரஜினி.

பொதுவாக ரஜினி படம் என்றாலே அவருடைய ஸ்டைல் தான், அதுவும் ரஜினி சிகரெட் தூக்கி போட்டு வாயில் பிடிக்கும் அந்த காட்சி தான் ரஜினி நடிக்கும் ஒவ்வொரு படத்தின் ஹைலைட், அப்படி இருக்கையில் ரஜினி திரைப்படத்தில் சிகெரெட் பிடிக்காமல் எப்படி நடிக்க முடியும், ரசிகர்களே ரஜினி சிகெரெட் பிடிக்கும் காட்சியை தானே விரும்புவார்கள், அதனால் ரஜினி படத்தில் சிகெரெட் பிடிக்கும் காட்சியை அவரால் தவிர்க்க முடியாது என பலரும் தெரிவித்து வந்த நிலையில்.

கொடுத்த வாக்கையும், கொடுத்த பொருளையும் திருப்பி வாங்கியதா சரித்திரமே இல்லை என ரஜினி சினிமாவில் டயலாக் பேசுவது போன்றே, பாபா படத்திற்கு பின்பு அவர் நடித்த எந்த ஒரு படத்திலும் சிகரெட் பிடிக்கும் கட்சியிலோ, அல்லது மது அருந்தும் கட்சியிலோ நடிக்க வில்லை, அதை இன்றளவு கடை பிடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம், எனவே தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள் என ரசிகர்களுக்கு கோரிக்கை ஒன்றையும் விடுத்தார். ஒருவேளை குடிப்பழக்கம் என்னிடம் இல்லாமல் இருந்திருந்தால், இப்போது இருப்பதை விட இன்னும் உயரத்தில் இருந்திருப்பேன் என உருக்கமாக பேசிய ரஜினிகாந்த்,

இந்த குடிப்பழக்கம் உங்களுடைய அம்மா, மனைவி என குடும்பத்தில் இருக்கிறவங்களை கஷ்டப்படுத்தக் கூடாது என ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார். இந்நிலையில் லியோ படத்தில் விஜய் சிகரெட் பிடிப்பது போன்று இடம் பெரும் காட்சிகள் சமூகத்தில் கடும் எதிப்பு ஒரு பக்கம் கிளம்பியுள்ள நிலையில், மறுபக்கம், ரஜினிகாந்த் மதுவால் ஏற்படும் தீமைகளை பற்றி எடுத்துரைத்து அவர்களுடைய ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளது சமூகத்தில் பாராட்டை பெற்று வருகிறது.

அந்த வகையில் இதே அட்வைசை விஜய் அவரது ரசிகர்களுக்கு சொன்னால், முதலில் உன் படத்தில் அதை நீ செய்யாதே என்கிற விமர்சனம் விஜய்க்கு எதிராக எழும், அந்த வகையில் சமூகத்தில் சில அட்வைஸ் செய்ய வேண்டும் என்றாலும் கூட அதற்கு ஒரு தகுதி வேண்டும் என்கின்றனர் சமூக பார்வையாளர்கள்.