விஜயை பொலந்து கட்டினாரா அவருடைய தந்தை..? விஜய் தந்தை பேசிய வீடியோ வைரல்…

0
Follow on Google News

80களில் மிகவும் பிஸியாக படங்களை இயக்கிக் கொண்டிருந்தவர் விஜயின் தந்தை SAC. அப்போது, அவர் இயக்கிய ஒரு சில படங்களில் மகன் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியிருந்தார். இதனையடுத்து 90களின் துவக்கத்தில் தன் மகன் விஜய்க்கும் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருப்பதை உணர்ந்த SAC விஜய்யை தமிழ் சினிமாவில் ஹீரோவாக்கிப் பார்க்க நினைத்துள்ளார். 1992இல் அவர் இயக்கிய நாளைய தீர்ப்பு என்ற படத்தில் நடிகர் விஜய்யை கதாநாயகனாகவும் அறிமுகப்படுத்தினார். இவ்வாறு மகன் விஜய்யின் சினிமாக் கனவிற்கு அடித்தளமிட்ட அப்பா SAC,

ஒரு படத்தோடு நின்று விடாமல், அடுத்தடுத்து ரசிகன், மாண்புமிகு மாணவன், கோயமுத்தூர் மாப்ள என சில படங்களை விஜய்யை வைத்து இயக்கினார். எவ்வளவுதான் தன் மகனை ஹீரோவாக வைத்து அவர் படங்களை இயக்கினாலும், திரையுலகின் மற்ற இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மத்தியில் விஜய் ஒரு ஒரு ஹீரோவாக எளிதில் புரமோட் ஆகவில்லை. விஜய்யின் ஆரம்பகால சினிமா வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை என்பது அனைவரும் அறிந்ததே…

பல கேலிகள் மற்றும் நெகட்டிவ் ஆன விமர்சனங்களுக்கு உள்ளான விஜய்யை இயக்க யாரும் முன்வரவில்லை. அந்த நேரத்தில் SAC பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் சென்று தன் மகன் விஜய்க்காக வாய்ப்பு கேட்டு சென்றிருக்கிறார். ஆனால், எல்லோரும் சாக்குபோக்கு சொல்லி தட்டி கழித்து விட்டனர். அதனையடுத்து சில வருடங்களில் பூவே உனக்காக என்ற படத்தின் மூலம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய விஜய்க்கு அடுத்தடுத்து பல இயக்குனர்கள் வாய்ப்பு கொடுத்தனர்.

இவ்வாறு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்த விஜய், ஒருகட்டத்தில் முன்னணி நடிகராக உருவெடுத்தார். தமிழ் சினிமா ரசிகர்கள் இளையதளபதியாக அவரை தூக்கி வைத்துக் கொண்டாடினர். இப்போது, தளபதியாக இருக்கும் விஜய், தமிழ் சினிமாவின் ரெகார்ட் பிரேக்கர், அடுத்த சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சொல்லும் அளவிற்கு வசூல் மன்னனாக மாறிவிட்டார்.

இப்படி, விஜய் அவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் எழுந்து நிற்க திணறிக் கொண்டிருந்த போது, அப்பா SAC சரியான நேரத்தில் தூக்கி விட்டிருக்கிறார் என்று கூறலாம். ஆனால், இத்தகைய தந்தை மகன் உறவுக்கு இடையில், கடந்த சில வருடங்களாக விரிசல் ஏற்பட்டுள்ளது. அம்மாவுடன் மட்டும் இன்றளவிலும் அன்பு பாராட்டிக் கொண்டிருக்கும் விஜய், சில காரணங்களுக்காக அப்பாவிடம் பேசுவதை நிறுத்தியிருக்கிறார்.

நீண்ட நாட்கள் சென்றும், விஜய்யின் மனம் மாறாததால், இது தொடர்பான தனது ஆதங்கத்தை எஸ்.ஏ.சி பல பேட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளார். பெற்றோரைப் பிரிந்த விஜய் சென்னை நீலாங்கரையில் வசித்து வருகிறார். இந்நிலையில், தனுஷ் நடித்த கொடி மற்றும் சிம்பு நடித்த மாநாடு போன்ற படங்களில் அவ்வப்போது நடித்து வந்த SAC இந்தாண்டு நான் கடவுள் இல்லை என்ற படத்தையும் இயக்கி வெளியிட்டுள்ளார்.

ஒருபக்கம் இவ்வாறு சினிமாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் SAC, மற்றொரு பக்கம் சீரியலிலும் நடிக்க துவங்கிவிட்டார். இந்நிலையில், அவர் நடித்து வரும் சீரியலில் அவர் வசனம் பேசும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் ‘திடீர்னு உனக்கு வசதி வாய்பு வந்திருச்சி.. பணக்காரன் ஆயிட்ட. ஆனா இதுக்கு முன்னாடி நாம எப்படி இருந்தோம்?.

இந்த நிலமைக்கு எப்படி வந்தோம்?. அதுக்கு காரணமாக இருந்தவங்க யாரு? இதெல்லாம் யோசிக்கணும். கொஞ்சமாச்சும் நன்றி இருக்கணும்’ என அவர் பேசிய டயலாக்கை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர். குறிப்பாக, ‘எஸ்.ஏ.சி விஜயை மனதில் வைத்தே இந்த வசனத்தை பேசியிருக்கிறார்’ என்றும் பலர் சோஷியல் மீடியாக்களில் பேசி வருகின்றனர்.