மாரிசெல்வராஜை மேடையில் வைத்து கொண்டே பொலந்து கட்டிய பிரபலம் .. யார் சாதியை வளர்கிறது.?

0
Follow on Google News

கடந்த சில மாதங்களாகவே, சாதி தொடர்பான விவாதம் தமிழ் சினிமாவில் மிக பெரிய பேசும் பொருளாக மாறியுள்ளது, குறிப்பாக மாமன்னன் திரைப்படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்த சர்ச்சை கூறிய வகையில் இயக்குனர் மாரிசெல்வராஜ் பேசிய பேச்சு, சினிமா திரைப்பட துறையினர் மத்தியிலே கடும் விமர்சனத்துக்கு உள்ளானது, இந்நிலையில் சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் ஒன்றில் மாரிசெல்வராஜ் மற்றும் தங்கர் பச்சன் போன்றோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் மேடையில் இயக்குனர் மாரிசெவ்ராஜ் இருக்கையில் இயக்குனர் தங்கர் பச்சன் பேசிய பேச்சு தற்பொழுது வைரலாகி வருகிறது, அந்த நிகழ்ச்சியில் தங்கர்பச்சன் பேசுகையில், திரைப்படம் செய்ய வேண்டிய வேலை என்னவென்றால் சாதிகளை இணைக்க வேண்டிய வேலையைத்தான் செய்ய வேண்டும் மேலும் பிரிவினையை உண்டு பண்ணக் கூடிய வேலையை செய்யக்கூடாது, அப்படிப்பட்ட படங்களும் வரவேண்டும் என தெரிவித்த தங்கர் பச்சன்.

மேலும், வெறும் வலிகளை சொல்லக்கூடிய படங்களை தாண்டி, மக்களை இணைக்கும் வகையில் காட்சி அமைப்புகள் கொண்ட எந்த ஒரு படமும் வரவில்லை அடுத்த கட்டமாக இது போன்ற படங்கள்தான் வரவேண்டும். நம்ம நிறைய பேசுகின்றோம், சாதி பிரிவினை, சாதி அடக்குமுறை, சாதிய விடுதலை இதையெல்லாம் பேசுகின்றோம். ஆனால் செயல்படுத்துவது எங்கே.?

இதெல்லாம் நிறைவேறாமல் இருப்பதற்கு காரணம் யார்? யார்.? மக்களை மட்டும் சொல்லிவிட முடியாது. மக்களும் தான் காரணம். என்னுடைய கிராமத்தில் இருந்து 14 வயதில் நான் சென்னைக்கு வந்து விட்டேன். அன்றைக்கு நான் பார்த்த சாதிய பாகுபாடுகள் இன்றைக்கு இல்லை என்று என்னால் சொல்ல முடியாது. இது தமிழக முழுவதும் இருக்கின்றது, ஆனால் எதை வைத்து இதெல்லாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

இதற்கு உயிர் கொடுப்பவர்கள் அதிகாரத்தை பெற விரும்புகின்றவர்கள். அந்த அதிகாரத்தை சாதியை வைத்து தான் பெறுகின்றார்கள், நீங்கள் சட்டம் எழுதிவிட்டால் மட்டும் போதாது, சாதியை பற்றி பேசுகின்றவர்களுக்கு அதை துன்புறுத்துகின்றவர்களுக்கு தண்டனை கொடுப்பது மட்டும் போதாது, சாதியை வைத்து தான் இங்கே எல்லாமே உருவாக்கப்படுகிறது. அது இங்கிருந்து வெளியே போனால் தான் முற்றிலுமாக போகும். இல்லையென்றால் நமக்குள் சண்டை போட்டுக் கொண்டே தான் இருக்க வேண்டும் என பேசிய தங்கர் பச்சன்.

மேலும், அனைவரையும் இணைப்பது யார்.? அனைவரிடமும் கோபத்தை காட்டுவது முக்கியமா.? இணைப்பது முக்கியமா.? சாதிய பாகுபாடு, சாதிப் பெருமை, சாதிய அடக்குமுறை இதெல்லாம் குறையும் வகையில் திரைப்படம் வரவேண்டும். அனைவரும் வன்மத்தை வளர்த்துக் கொண்டு போகக்கூடாது. என்னை நீ திட்டுகிறாயா.? வைத்திருக்கிறேன் டா உனக்கு . இன்னொரு படம் எடுக்கிறேன் என்று இப்படியே சென்று விடக்கூடாது .

நீ திட்டினால் நானும் திட்டுகிறேன், இப்படி வந்தால் திரும்பத் திரும்ப வந்து கொண்டே தான் இருக்கும், நாங்குநேரியில் நடந்த சம்பவம் எல்லாம் மிகப்பெரிய அவமானம். சாதியை பற்றி ஒழிய வேண்டும் என்று பேசுகின்றவர்கள் தான் தண்ணி ஊற்றி சாதியை வளர்க்கிறார்கள். இது என்ன முரண்பாடு, அடிப்படையில் ஒரு கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் என சாதி இல்லாமல் ஏதாவது பண்ண முடியுமா.?

அப்படி இருக்கையில் எப்படி சாதி ஒழியும். அம்பேத்கர் அருமையான தலைவர், ஆனால் அவர் படத்தை வைத்துக் கொண்டு அவருக்கு எதிரான செயலை செய்து கொண்டிருக்கிறோம். அம்பேத்கர் படத்தை வைத்து விட்டால் எல்லாம் முடிந்து விடுமா.? அம்பேத்கர் படத்தை வைத்துக்கொண்டு இங்கே தொழில் தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் நினைத்தால் மட்டும் தான் சினிமா மாறும், படைப்பாளிகளால் மாறாது, பெரிய பெரிய கொம்பன் எல்லாம் இங்கே இருக்கிறார்கள். முழுக்க முழுக்க மக்களுடைய தவறு, நல்ல திரைப்படங்களை ஆதரித்து திரையில் மக்கள் பார்த்தால் ,கண்ட கழிசடைகள் எல்லாம் ஓடிப் போய்விடும் அதை செய்யுங்கள் என மிக உருக்கமாக தங்கர் பச்சன் என பேசியது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.