இயக்குனர் தரணி இயக்கத்தில் விஜய் , திரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது, இந்த படத்துக்கு பின் மாஸ் நடிகராக தமிழ் சினிமாவில் இடம் பிடித்தார் விஜய். இந்த படத்தில் விஜய்- திரிஷா ஜோடிகளின் காட்சிகளை பார்த்தவர்களுக்கு இருவருக்கும் கெமிஸ்ட்ரி நல்ல வேலை செய்திருக்கிறது என பாராட்டுகளை தெரிவித்தனர்.படத்தில் மட்டுமில்லை இருவருக்கும் இடையில் நிஜத்திலும் கெமிஸ்ட்ரி நல்ல வேலை செய்ய தொடங்கியது கில்லி படத்தில் இருந்து.
இதனை தொடர்ந்து 2005ம் ஆண்டு இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளியான திருப்பாச்சி படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்தது விஜய் – திரிஷா ஜோடி, இந்த படமும் வெற்றி படமாக அமைந்தது, அடுத்து பேரரசு இயக்கத்தில் வெளியான ஆதி திரைப்படத்தில் தனக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க வேண்டும் என இயக்குனரிடம் விஜய் வலியுறுத்தியதை தொடர்ந்து மீண்டும் விஜய் உடன் ஜோடி சேர்ந்தார் திரிஷா.

இதனை தொடர்ந்து படப்பிடிப்பு இடைவேளையில் விஜய் – திரிஷா ஜோடி கேரவனுக்குள் நீண்ட நேரம் தனியாக இருப்பது கேரவனை விட்டு வெளியில் வரும்போது இருவரும் கையை பிடித்து கொண்டு ஜோடியாக வருவது என இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரி மிக பெரிய அளவில் வேலை செய்ய தொடங்கியது, அப்போது இவர்கள் பற்றிய கிசு கிசு வெளியானதும் குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் வெற்றி ஜோடி என வர்ணிக்கப்பட்ட விஜய் -திரிஷா ஜோடி நடித்த ஆதி படம் படு தோல்வி அடைந்தது.
ஆனால் மீண்டும் அடுத்து தரணி இயக்கத்தில் குருவி படத்தில் விஜய் சிபாரிசில் மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்தார் திரிஷா, இந்த படத்தின் வெளிநாடு படப்பிடிப்பின் போது விஜய் – திரிஷா ஜோடியை பற்றிய சில ரகசிய தகவல் விஜய் மனைவி சங்கீதா கவனத்துக்கு சென்றுள்ளது, இதனை தொடர்ந்து விஜய் குடும்பத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது விஜய் – திரிஷா இருவருக்கும் இடையில் இருந்த உறவு.
இந்நிலையில் இனிமேல் திரிஷா உடன் சேர்ந்து நடிக்க கூடாது என கணவன் விஜய்க்கு சங்கீதா கண்டிஷன் போட்டதாகவும் அதன் பின்பு தான் விஜய்- திரிஷா ஜோடி திரைப்படங்களில் இணையவில்லை என கூறப்பட்டது. மேலும் விஜய் – த்ரிஷா விவாகரத்துக்கு பின்பு விஜய் உடன் ஜோடி சேரும் நடிகைகள் யார் என்பதை விஜய் மனைவி சங்கீதா தான் தேர்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.

