கண்டு கொள்ளாத விக்ரம்… நடு தெருவுக்கு வந்த கவுதம் வாசுதேவ் மேனன்…

0
Follow on Google News

தமிழ் சினிமாவில் ரொமான்டிக் படங்களை வித்தியாசமான விதத்திலும் ரசிகர்களை கவரும் வகையில் படங்களில் கொடுத்து வருகிறார் இயக்குனர் கவுதம் மேனன். 2001ல் மின்னலே என்னும் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அடுத்தடுத்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம், என்னை அறிந்தால், என்னை நோக்கி பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார்.

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் துருவநட்சத்திரம் என்னும் படம் குறித்த அறிவிப்பை சில ஆண்டுகளுக்கு முன்னரே கொடுத்திருந்தார். ஆரம்பத்தில், சூர்யாவிற்குச் சொன்ன ‘துருவ நட்சத்திரத்தின்’ கதை, பின் சில பிரச்னைகளால் விக்ரம் வசம் வந்துள்ளது. ஹாலிவுட் ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் முக்கால்வாசி வெளிநாடுகளில் படமாக்கப்பட்டது. அதனாலோ என்னவோ, 2016ன் கடைசியில் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஓவர் பட்ஜெட், கால் ஷீட் பிரச்னை எனப் பல பிரச்னைகளால் தள்ளிப்போக இப்போது ஒருவழியாக ரிலீஸாக இருக்கிறது.

வரும் நவம்பர் 24-ம் தேதி இப்படம் திரைக்காணவுள்ளது. முன்னதாக படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் இடம்பெற்றிருந்த காட்சிகள் நீக்கப்பட்டிருந்தன. இதையொட்டி படத்தில் அவர் சம்பந்தபட்ட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் படத்தின் திரைக்கதையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் இதுகுறித்து படக்குழுவினரோ ஐஸ்வர்யா ராஜேஷோ மௌனம் காத்து வருகின்றனர். தற்போது, துருவநட்சத்திரம் படம் குறித்த சில தகவல்களை கூறியிருக்கிறார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன். இந்த படம் தொடர்பாக டிடி உடன் நேர்காணலில் கவுதம் வாசுதேவ் மேனன் பேசினார். அதில் இந்தத் தகவல்களை கூறியிருக்கிறார் வாசுதேவ் மேனன்.

அவர் பல விஷயங்களை கூறியிருந்தாலும், இந்த ஒரு விஷயம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என தெரிகிறது. இந்த படத்திற்காக தீயாய் ப்ரோமோஷன் செய்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு சினிமாட்டிக் யூனிவெர்ஸை உருவாக்கியவர்தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கைதி படம் தொடங்கி விக்ரம் அடுத்த சில படங்கள் அந்த யூனிவெர்ஸில் இணையவிருக்கிறது.

இந்த தொகுப்பான படங்களுக்கு லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் அதாவது LCU என பெயரிடப்பட்டுள்ளது. அந்த வகையியல், அவருக்கான ஒரு யூனிவெர்ஸ் உருவாக்கும் ஐடியாவில் இருப்பதாக கவுதம் மேனன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். துருவநட்சத்திரம் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படத்தின் டப்பிங் வேலைகளும் முடிந்திருக்கிறது. இந்த படத்தின் ஹீரோவான விக்ரம் படத்தை பார்த்து நன்றாக இருப்பதாக கூறியுள்ளாராம். மேலும், துருவநட்சத்திரம் படத்தின் கிளைமாக்ஸ் முடியாமலேயே இருக்குமாம். ஒருவேளை, இந்த படம் ரசிகர்களை கவர்ந்தால் அடுத்த பாகம் எடுக்க தயாராக இருக்கிறாராம் மேனன். அதனை தொடர்ந்து அவருக்கான சினிமாட்டிக் யூனிவெர்ஸ் உருவாக்கவும் தயார் என கூறியிருக்கிறார்.

இப்படம் இவரது வாழ்வில் பல மற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளதாக சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார். இப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் இவரே. இப்படத்தின் தயாரிப்பின் போது இவர் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளார். அந்த நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக இவர் தான் ஆசையாய் கட்டிய வீட்டையே விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இவர் இத்தகைய நஷ்டத்தை சமாளிக்கவே சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததாகவும் அதில் வரும் தொகையை வைத்து துருவ நட்சத்திரத்தினை இயக்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

‘துருவ நட்சத்திரம் மட்டும் எனக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால் நான் இயக்குனராகவே இருந்திருப்பேன். ஆனால் இந்த சுமையும் தனக்கு ஒரு சுகமான விஷயமாக இருக்கிறது’ என அவர் தெரிவித்திருந்தார். ஆனால் நடிப்பதற்காக தான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்கவில்லை என்றும் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை தான் சிறப்பாக பயன்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். தனக்கு ஒத்துவராது என்று தான் கருதிய சில நடிப்பு வாய்ப்புகளை தான் நிராகரித்துள்ளதாகவும் கௌதம் மேனன் குறிப்பிட்டுள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் மூலம் தன்னுடைய நடிப்பு கேரியரை துவங்கிய கௌதம் மேனன் தற்போது விஜய்யின் லியோ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

அந்த வகையில், ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு, வரவேற்பை பொறுத்து துருவநட்சத்திரம் படத்தை வைத்து கவுதம் மேனனின் யூனிவெர்ஸ் வருமா இல்லையா என தெரியும். முன்னதாக விக்ரம் நடித்த கோப்ரா படம் ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது. அந்த ஏமாற்றத்தை சரிசெய்யும் விதத்தில் துருவநட்சத்திரம் படம் இருக்கும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.