காக்க வைக்கும் சூர்யா… கடுப்பான பாலா..! தலைகீழாக மாறிய பாலாவின் பரிதாப வாழ்க்கை..!

0
Follow on Google News

இயக்குனர் பாலா இயக்கத்தில் கடைசியாக வெளியான படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வந்தது, அதே நேரத்தில் அவருடைய குடும்பத்தில் அவருக்கும் அவருடைய மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துள்ளார். இப்படி சினிமா வாழ்க்கை மற்றும் நிஜ வாழ்க்கை இரண்டிலுமே பலத்த அடி வாங்கி இருந்த பாலா, தன்னுடைய முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்த திட்டமிட்டு சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்.

தன்னை சினிமாவுக்கு அடையாளப்படுத்திய தனது குருநாதர் பாலாவிற்கு சினிமாவில் மறுவாழ்வு கொடுக்கும் வகையில் நன்றி கடனாக வணங்கான் படத்தில் கமிட்டான சூர்யா, இந்த படத்தை சொந்தமாகவும் தயாரிக்கிறார். இந்த நிலையில் சேது, நந்தா படத்தில் எப்படி பாலா நடவடிக்கைகள் இருந்ததோ.! அதேபோன்று தற்பொழுது வணங்கான் படத்தின் படப்பிடிப்பிலும் தொடர்கிறார்.

ஆனால் நந்தா படத்தில் சூர்யா முதல் முதலில் பாலா உடன் வேலை செய்த போது அவர் வளர்ந்து வரும் நடிகராக இருந்தார், ஆனால் தற்பொழுது மிகப்பெரிய உச்சத்தில் இருப்பதால் அவருடைய நடவடிக்கைகள் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. நந்தா படத்தில் பாலா மிகக் கடுமையாக சூர்யாவிடம் நடந்து கொண்ட விதம் தற்பொழுது வணங்கான் படத்திலும் பாலா தொடர்கிறார்.

இதனால் வணங்கான் படப்பிடிப்பு தொடங்கியது முதல் சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. இருவருக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்ததும் படப்பிடிப்பை பாதியில் ரத்து செய்துவிட்டு சூர்யா சென்னை திரும்பினார். இதனால் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நின்றது. இருவருக்கும் இடையில் நடந்த சமரச பேச்சுவார்த்தை சுமூக முடிவு எட்டியதை தொடர்ந்து மீண்டும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கான வேலைகள் தொடங்கியது.

ஆனால் இந்த படத்தின் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முடியாமல் தவித்து வந்தார் பாலா. இதனால் நாட்கள் பட இரண்டாம் கட்ட பட படிப்பு தொடங்குவதற்கான நாட்கள் தள்ளிக் கொண்டே போனது.இதனால் பாலாவிடம் நீங்கள் மெதுவாக அடுத்த கட்ட படத்திற்கான கதையை தயார் செய்யுங்கள் என தெரிவித்து விட்டு, சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் கலந்து கொண்டு உள்ளார் சூர்யா.

வனங்கான் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கான கதையை பாலா தயார் செய்து சூர்யாவுக்கு அனுப்பி உள்ளார். சூர்யா தற்பொழுது மும்பையில் நிரந்தரமாக குடும்பத்துடன் தங்கி உள்ளதால், அவரை பாலா தொலைபேசியில் தான் தொடர்பு கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது, அதனால் அடிக்கடி சந்திக்க முடியாத நிலை உருவாகியுள்ளது, கதையை தயார் செய்து அனுப்பி விட்டு வரும் ஜனவரி மாதம் வனங்கான் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்குவதற்கு தயாராக இருக்கிறார் பாலா.

ஆனால் நடிகர் சூர்யா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல், பாலாவை காக்க வைத்து வருவதாக தகவல் வருகிறது, இதில் செம்ம கடுப்பில் இருக்கும் பாலா இருந்தாலும் தன்னுடைய சினிமா எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு, சூர்யா இந்த படத்தின் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என்பதால் தன்னுடைய நடவடிக்கைகளில் பல மாற்றங்களை செய்துள்ள பாலா. மேலும் நடிகர் சூர்யாவிடம் தற்போது கீழே இறங்கி பவ்யமாக பேசி வரும் பாலாவின் பரிதாப நிலையில் தலைகீழாக மாறியுள்ளது என கூறப்படுகிறது.