வாடிவாசல் படத்தில் மோகன்லால் ….வெற்றிமாறன் – சூர்யா இடையில் என்ன பிரச்சனை தெரியுமா.?

0
Follow on Google News

இயக்குனர் வெற்றிமாறன் தற்பொழுது இயக்கி வரும் விடுதலை படத்தின் படப்பிடிப்புகள் முடியும் தருவாயில் இருக்கிறது. இதனை முடித்துவிட்டு நடிகர் சூர்யா நடிப்பில், தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் வாடிவாசல் என்கின்ற படத்தில் வெற்றிமாறன் கமிட்டாகி உள்ளார். இந்த படத்திற்கான போட்டோ சூட் மற்றும் ஆரம்பகட்ட சில காட்சிகள் ஜல்லிக்கட்டு காளைகள் வரவழைத்து எடுக்கப்பட்டது.

விடுதலை படத்தை எடுத்து முடிப்பதற்கு வெற்றிமாறன் தாமதம் செய்து வந்தது, மேலும் வாடிவாசலின் படப்பிடிப்பு அடுத்தடுத்து தள்ளி கொண்டு போனதால் சூர்யா அடுத்தடுத்து வேறு ஒரு படங்களில் கமிட் ஆகி பிஸியாக உள்ளார். இந்த நிலையில் வாடிவாசல் படப்பிடிப்பு அடுத்து எப்போது தொடங்கப்படும் என்பதில் உறுதியான தகவல் எதுவும் இல்லை.

இந்த படத்தில் இரண்டு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதில் ஒன்று சூர்யா மற்றொன்று இயக்குனர் அமீரை இந்த படத்தில் நடிக்க இருப்பதாக வெற்றிமாறன் சமீபத்தில் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் தானு ஆகியோரிடம் தெரிவித்திருக்கிறார். ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் இயக்குனர் அமீரின் நடிப்பு அனைவராலும் பாராட்டும்படியாக இருந்தது.

அந்த வகையில் மீண்டும் தன்னுடைய வாடிவாசல் படத்தில் அமீருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார் வெற்றிமாறன். இந்நிலையில் அமீர் தன்னுடன் நடிப்பதில் எந்த ஒரு ஆட்சேபனும் தெரிவிக்கவில்லை சூர்யா. ஆனால் தயாரிப்பாளர் தானு அமீருக்கு பதில் மோகன்லால் நடிப்பதற்கு இயக்குனர் வெற்றிமாறனிடம் சிபாரிசு செய்துள்ளார்.

ஆனால் வெற்றிமாறன், வாடிவாசல் படத்தின் கதை எழுதும் பொழுதே இயக்குனர் அமீர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கான கதையை நான் அமீரை மனதில் வைத்து தான் எழுதியுள்ளேன். அதனால் இந்த கதாபாத்திரத்தில் மாற்றம் செய்ய வேண்டாம் என வெற்றிமாறன் பிடிவாதமாக இருந்ததால், தாணு மறுப்பு தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் வாடிவாசல் படத்தில் அமீர் மற்றும் சூர்யா இருவரும் நடிகர் இருக்கிறார்கள், இருவருக்குமே சமமான கதாபாத்திரங்கள் இந்த படத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!