விளம்பரத்துக்காக பாஜகவை சீண்டி பல்பு வாங்கிய சூர்யா.? எதற்கு இந்த பொழப்பு.. என்ன நடந்தது தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தியேட்டரில் பார்க்க ஆட்கள் இல்லாமல் காற்று வாங்கி கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களாக மொக்கை படத்தை கூட வசூல் ரீதியாக வெற்றி அடைய செய்ய சில யுக்திகளை கையாண்டு வருகின்றனர் சினிமா துறையினர், அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்து சில வசனங்கள் அந்த படத்தில் இடம் பெற்று இருந்தது.

இதற்கு தமிழக பாஜகவினர் மத்தியில் கடும் எதிப்பு கிளம்பியதை தொடர்ந்து, படு தோல்வியை தழுவி பெரும் நஷ்டத்தை சந்திக்க இருந்த மெர்சல் படம் பாஜகவினர் எதிர்ப்பின் காரணமாக படத்திற்கு கிடைத்த விளம்பரம், அப்படி அந்த படத்தில் என்ன தான் இருக்கிறது என மக்கள் பார்க்க தூண்டியதால் சிறிய நஷ்டம் அடைத்து தப்பித்தது மெர்சல் படம், இந்த சம்பவத்துக்கு பின்பு பாஜகவை சீண்டி காட்சிகள் அமைத்தால் அந்த படத்துக்கு விளம்பரம் கிடைக்கும் என சினிமா துறையினர் இந்த யுக்தியை கையாண்டார்.

இதே போன்று நடிகர் சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னிய சமூகத்தை சீண்டும் வகையில் காட்சிகள் இடம் பெற்று இருந்ததால், அந்த சமூகத்தின் எதிர்ப்பின் காரணமாக கிடைத்த விளம்பரத்தால் ஜெய்பீம் படம் வெற்றியை பெற்று தந்தது, ஆனால் அதுவே எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மண்ணை கவ்வ காரணமாக அமைத்துள்ளது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்திலும் சில எதிர்மறை விளம்பரத்துக்காக சில யுக்திகளை திரைப்பட குழு கையாண்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே வன்னிய சமூகத்தின் எதிர்ப்பை பெற்றுள்ள நடிகர் சூர்யா, எதற்கும் துணிந்தவன் படத்தில் பாஜகவை சீண்டி படம் வெளிவந்த பின்பு எதற்கும் துணிந்தவன் படத்துக்கு எதிராக பாஜகவினர் கொந்தளிக்க, பாஜக எதிர்ப்பாளர்கள் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு ஆதரவாக களம் இறங்க, இதனால் படத்திற்கு விளம்பரம் கிடைக்கும், வன்னிய சமூகத்தினர் எதிர்ப்பை பாஜக எதிப்பை வைத்து திசை திருப்பி விடலாம் என படக்குழு திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், பொள்ளாச்சி சம்பவத்தை தழுவிய கதை தான் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் என கூறப்படும் நிலையில், பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கு வில்லன் நடிகரை மத்திய அமைச்சரின் மகனாக சித்தரித்து கதை அமைக்கப்பட்டுள்ளது. இது உறுதியாக மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜகவை சீண்டும் வகையில் தான் இடம்பெற்றுள்ளது என்றும், மேலும் இதனால் தமிழக பாஜகவினரால் இந்த படத்துக்கு எதிப்பு வரும், இதனால் படத்திற்கு விளம்பரம் கிடைக்கும் என்கிற நோக்கத்தில் நடிகர் சூர்யா அறிவுறுத்தலின் படி தான் நடந்திருக்கும் என கூறப்படுகிறது.

ஆனால், ஏற்கனவே மெர்சல் படத்தில் பாஜக கற்று கொண்ட பாடத்தின் அடிப்படையில் எதற்கும் துணிந்தவன் படம் குறித்து பாஜகவினர் வாய் திறக்காமல், உன் பட விளம்பரத்துக்கு நாங்கள் ஆட்கள் கிடையாது, வேறு ஏதாவது முயற்சி செய் என்கிற தோரணையில் பாஜகவினர் அமைதியாக கடந்து சென்ற சம்பவம், பாஜகவை சீண்டினால் தன் படத்துக்கு விளம்பரம் கிடைக்கும் என எதிர்பார்த்த சூர்யா பல்பு வாங்கியது தான் மிச்சம் என்றும், எதற்கு சூர்யாவுக்கு இந்த பொழப்பு என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

குடும்பத்துடன் ஒப்பாரி வைத்த சிவகுமார் குடும்பம்…விழித்து கொண்ட மக்கள்..! ஏமாற்றம் அடைந்த சிவகுமார் குடும்பம்..