பிரச்சனை மேல் பிரட்சனை …என்ன செய்தாலும் பிரச்சனை …. சூர்யாவின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன தெரியுமா.?

0
Follow on Google News

மும்பையை பூர்வீகமாக கொண்ட நடிகை ஜோதிகா, கடந்த 2006ம் ஆண்டு சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சூர்யா – ஜோதிகா இருவருடைய காதலுக்கு சூர்யாவின் தந்தை சிவக்குமார் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாலும், ஒரு கட்டத்தில் மகனின் பிடிவாதத்தினால் சூர்யா – ஜோதிகா இவருடைய திருமணத்திற்கு பச்சை கொடி காட்டினார் சிவக்குமார். திருமணத்திற்கு பின்பும் கூட சிவகுமார் , சூர்யா, ஜோதிகா , கார்த்திக் என கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.

ஆனால், கூட்டு குடும்பத்தில் வாழ்வதற்கு ஜோதிகாவுக்கு விருப்பம் இல்லை என்றும், அதனால் கணவர், குழந்தைகளுடன் தன்னுடைய பூர்வீகமான மும்பையில் தனி குடித்தனம் சென்று செட்டிலாக வேண்டும் என்பதே நடிகை ஜோதிகாவின் நீண்ட கால திட்டமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. ஜோதிகாவை திருமணம் செய்வதற்கு முன்பு தமிழ்நாட்டில் முதலீடு செய்து தொழில் செய்து வந்த சூர்யா. திருமணத்திற்கு பின்பு மனைவி ஆலோசனைப்படி கோடி கணக்கில் மும்பையில் பிரபல நிறுவனத்தில் முதலீடு செய்ய தொடங்கினார்.

சுமார் 300 கோடி வரை மும்பையில் முதலீடு செய்துள்ள சூர்யா – ஜோதிகா தம்பதியினர் சினிமாவில் சம்பாரிப்பதை விட, தொழில் ரீதியாக பெரும் வருமானத்தை பெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் தொழில் ரீதியாக அடிக்கடி குடும்பத்துடன் மும்பை சென்று தங்கி வந்த சூர்யா, மனைவி ஆலோசனைபடி தன்னுடைய இரண்டு குழந்தைகளின் பள்ளியை சென்னையில் இருந்து மும்பைக்கு மாற்றிய சூர்யா நிரந்தரமாக மும்பையில் குடியேறியுள்ளார். இனி சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் போது மட்டும் தமிழகம் வரும் சூர்யா, பெரும்பாலும் குடும்பத்துடன் மும்பையில் தான் இருக்க உள்ளார் என செய்திகள் வெளியானது.

இதனை தொடர்ந்து சூர்யா – சிவகுமார் இடையில் பிரச்சனை ஏற்பட்டு சூர்யா தனி குடித்தனம் சென்று விட்டார், மேலும் இனி நிரந்தரமாக மும்பையில் செட்டிலாக இருப்பதால் தமிழ்நாட்டிற்கு குட்பை சொல்லிவிட்டார், அதனால் தமிழ் சினிமாவில் சூர்யா புதிய படங்களில் கமிட்டாவதை தவிர்த்து வருவதாக என தகவல் பரவியது. இதனை தொடர்ந்து இந்த பிரச்சனைகளுக்கு முற்று புள்ளி வைத்தாக வேண்டும் என்கிற முடிவுக்கு வந்த நடிகார் சூர்யா.

தந்தை சிவகுக்குமார் மனைவி குழந்தைகளுடன் மதுரை கீழடி அகல் ஆராய்ச்சி மையத்திற்கு சென்று அது செய்தியாக வெறும் போது, சிவகுமார் – சூர்யா இருவருக்கும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை, ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள் என்பது வெளிப்படும், மேலும் தமிழர் நாகரிகம் சார்ந்த கீழடி அகல் ஆராய்ச்சி மையத்திற்கு செல்வதால் தன்னுடைய குடும்பம் தமிழ் உணர்வு மிக்க குடும்பம் என்கிற தோற்றத்தை உருவாக்கலாம் என்கிற ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் திட்டத்தில் குடும்பத்துடன் கீழடி சென்றார் சூர்யா.

ஆனால் சிவகுமார், சூர்யா மற்றும் குடும்பத்தினர் கீழடி அருங்காட்சியத்தில் உள்ளே சென்று பார்வையிடுவதால், அங்கே அருகாட்சியம் சென்று பார்வையிட வந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல், அருகாட்சியத்தின் நுழைவு வாயில் கேட் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் என பலரும் பல மணிநேரம் கடும் வெயிலில் காத்திருந்துள்ளனர்.

இந்த நிலையில் சிவகுமார் குடும்பம் கீழடி அருகாட்சியம் வந்த காரணத்தினால், தனி ஒரு குடும்பத்திற்காக மாணவர்களும் ,பொதுமக்களும் உள்ளே சென்ற சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியில் வரும் வரை கடும் வெயிலில் கால் கடுக்க காத்திருந்த நிகழ்வு சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக மக்கள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்து மிக பெரிய சர்ச்சையில் சிக்கியது சிவகுமார் குடும்பத்தினர்.

இந்த நிலையில் தந்தை மகன் பிரச்சனை என பரவலாக பேசப்பட்டு வரும் பிரச்ச்னைக்கு முடிவு கட்ட தந்தை மற்றும் குடும்பத்துடன் கீழடி சென்ற சூர்யாவுக்கு அதுவே பிரச்ச்னையாக உருவெடுத்துள்ள்ளது. இதனால் ஏற்கனவே இருந்த பிரச்சனையை தீர்க்க சென்று மேலும் பிரச்சனையை விலை கொடுத்து வாங்கி வந்துள்ளார் சூர்யா என கூறப்படுகிறது.