ரத்த நாளத்தில் ரஜினிக்கு என்ன பிரச்சனை.? மருத்துவமனை வெளியிட்ட தகவல்.. அதிர்ச்சியில் ரஜினி ரசிகர்கள்..!

0
Follow on Google News

சமீபத்தில், ரஜினிகாந்த்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய ஹூட் ஆப்பை ரஜினிகாந்த் ஆரம்பித்துவைத்தார். குரல் மூலமாகச் செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் இந்தச் சமூக வலைதளத்தில், கமென்ட்களையும் குரல் மூலமாகவே தெரியப்படுத்தலாம். தன் பேரனுடன், ‘அண்ணாத்த’ திரைப்படத்தைப் பார்த்து மகிழ்ந்ததைப் பற்றி, தன் குரலில் இந்தச் செயலியில் பகிர்ந்துகொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

அதில்,“அண்ணாத்த’ டீஸர் வெளியானதிலிருந்து எனது 3-வது பேரன் வேத், படத்தை எப்போது காண்பிப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தான். அவனுக்கு 6 வயதாகிறது. ஒரு நாளைக்கு 15-20 முறையாவது கேட்டுவிடுவான். இன்னும் ரெடியாகவில்லை என்றால் ஏன் ரெடியாகவில்லை என்று கேட்டுக் கொண்டிருப்பான். இவனுக்காகவே நான் இயக்குநர் சிவாவிடம் சீக்கிரம் படத்தைக் காண்பியுங்கள், பேரன் கேட்டுக்கொண்டே இருக்கிறான் என்றேன்.

நீங்கள் டெல்லிக்குப் போய்விட்டு வந்தவுடன் காட்டுகிறேன் என்றார். ‘அண்ணாத்த’ படம் பார்த்தோம். குறிப்பாக எனக்கு அருகிலேயே உட்கார்ந்து படம் பார்க்க வேண்டும் என நினைத்து, வேத் உட்கார்ந்து கொண்டான். நான் நடித்த படங்களில் அவன் திரையரங்கில் பார்க்கும் முதல் படம் இது. முழுப் படத்தையும் அவ்வளவு ரசித்துப் பார்த்தான். படம் முடிந்தவுடன் என்னைக் கட்டியணைத்து 3-4 நிமிஷம் விடவே இல்லை. அவனுக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டால் “தாத்து தாத்து” என்று சொல்வான். “தாத்து ஐ யம் ஸோ ஹாப்பி, தேங்க் யூ” என்று சொன்னான். எனக்கு ரொம்ப சந்தோஷமாகிவிட்டது.

இப்படி, தனது பேரன்களுடன் அண்ணாத்தே படம் பார்த்த ரஜினிகாந்த் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய அடுத்த சிலமணி நேரத்தில், சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது, நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தாலும் , நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போவதை குறிக்கும், ரத்த குழாயில் அடைப்பு, ரத்த பாதை தானாகவே சுருங்குதல், ரத்தகுழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தத்தை குறிக்கும் என்றும், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைந்து சிகிச்சைப் பெற்றால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது என மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

இந்த தகவல் ரஜினி ரசிர்கர்களுக்கு அதிர்ச்சியை தந்தாலும், தொடர்ந்து ரஜினிகாந்த் குணமடைய அவரது ரசிகர்கள் பிராத்தனை செய்து வந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வேகமாக குணமடைந்து வருவதாகவும், ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக ரஜினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, ஒரு சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அவர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சூர்யா, விஜய் சேதுபதி, திராவிட குஞ்சு சித்தார்த்… தம்பிகளா எங்கடா போனீங்க.?