கட்டப்பஞ்சாயத்து செய்த சிவகுமார் குடும்ப உறவினர்… நியத்துக்காக போராடும் அமீர்…

0
Follow on Google News

நடிகர் கார்த்திக் நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் அவருடைய நடிப்பில் 25 வது படம் என்பதால் அந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பு விழாவாக விமர்சியாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சினிமா துறையைச் சார்ந்த பலரும் வந்து நடிகர் கார்த்திக்கை வாழ்த்திருந்தனர். இந்த நிலையில் நடிகர் கார்த்திக் சினிமாவில் இன்று மிகப்பெரிய உச்சத்திற்கு வந்துள்ளார் என்றால் அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் அமீர்.

பருத்தி வீரன் படத்தின் மூலம் கார்த்தியை அறிமுகம் செய்து அடையாளம் காட்டியவர் அமீர், அந்த வகையில் கார்த்திக் இன்று சினிமாவில் 25 படங்கள் நடிக்கும் அளவுக்கு உச்சத்திற்கு சென்றாலும் அதற்கு முக்கிய காரணமாக அடித்தளம் இட்டது இயக்குனர் அமீர் என்பதால் நிச்சயம் கார்த்திக்கின் இந்த 25வது பட விழாவில் அமீரை அழைத்து கார்த்திக் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கௌரவப்படுத்தி இருக்க வேண்டும்.

ஆனால் அமீர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வில்லை, அப்படி என்ன தான், சிவகுமார் குடும்பத்திற்கும் அமீருக்கும் பிரச்சனை என சினிமா வட்டாரத்தில் விசாரித்ததில். நடிகர் கார்த்திக் நடித்த பருத்திவீரன் படத்தின் இயக்குனர் அமீர் தான் அந்த படத்தின் தயாரிப்பாளரும் ஆக இருந்துள்ளார். படம் எடுத்து முடிக்கும் தருவாயில் படத்தைப் பார்த்து அனைவரும் படம் வேற லெவல் இருக்கிறது பாராட்டி வந்துள்ளனர்.

இந்த நிலையில் அமீருக்கு கார்த்திக் குடும்ப உறவினர் நிறுவனமான ஸ்டூடியோ கிரேனில் இருந்து சில பண உதவிகளை பருத்தி வீரன் படத்திற்காக செய்து வந்துள்ளார்கள். இந்நிலையில் படம் வேற லெவெலில் உள்ளது, நிச்சயம் படம் மிக பெரிய லாபத்தை பெற்று தரும் என்பதை உணர்ந்து, தயாரிப்பாளர் கவுன்சிலில் அமீர் மீது புகாரை கொடுத்து பருத்திவீரன் மொத்த படத்தையும் கார்த்திக் உறவினர் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் தயாரிப்பாளர் கவுன்சில் இருந்தவர்கள் சிவகுமார் குடும்பத்திற்கு மிக நெருக்கமானவர்கள் என்பதால் இந்த விவகாரத்தில் சிவக்குமார் குடும்பத்தினருக்கு சாதகமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அமிரிடமிருந்து படத்தை பெற்றுக் கொண்டாலும் அந்த காலகட்டத்தில் அமீருக்கு ஒண்ணே கால் கோடி ரூபாய் பணம் கொடுத்துவிட்டு தான் படத்தை வாங்கி இருக்க வேண்டும்.

ஆனால் படத்தை தயாரிப்பு கவுன்சிலிங் மூலம் கட்டப்பஞ்சாயத்து செய்து அமீரிடம் இருந்து பெற்று அவர்கள் பெயரில் ரிலீஸ் செய்துவிட்டு. அமீருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்கவில்லை. பருத்திவீரன் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்து பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில் தனக்கு சேர வேண்டிய பணம் அமீருக்கு வரவில்லை என்றதும் இதற்கு முன்பு கட்டப்பஞ்சாயத்து செய்த தயாரிப்பாளர் கவுன்சிலிடம் முறையிட்டுள்ளார் அமீர்.

அதற்கு தயாரிப்பாளர் கவுன்சில் நாங்கள் என்ன செய்வது நாங்கள் தொலைபேசியில் அழைத்தால் கூட அவர்கள் எடுப்பதில்லை என்று அமீரிடம் அலட்சியமான பதிலை தெரிவித்துள்ளார்கள். இதனை தொடர்ந்து இதற்கு மேல் தயாரிப்பு கவுன்சிலர் நம்பி பிரயோஜனம் இல்லை என முடிவு செய்த அமீர் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து உள்ளார், அந்த வழக்கு சுமார் 17 வருடங்களாகி இன்னும் நடந்து வருவதாக பிரபல சினிமா பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கார்த்திக் 25வது பட விழாவிற்கு அமீர் மீது என்ன தான் பகை இருந்தாலும், கார்த்திக் நன்றியுடன் நேரடியாக சென்று அமீரை அழைத்து கௌரவ படுத்திருக்க வேண்டும்.25 படத்தை தயாரித்த தயாரிப்பாளர் அலுவலகத்தில் வேலை செய்த ஒருவர் மூலம் அமீரை இந்த நிகழ்வுக்கு அழைத்துள்ளார்கள். ஏற்கனவே நமக்கு அநீதி இழைத்தவர்கள், தற்பொழுது அலுவலக ஊழியர்கள் மூலம் அழைப்பு விடுப்பது மிக பெரிய அவமரியாதை என அமீர் கார்த்திக் 25வது பட விழாவை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.