கிளம்பு கிளப்பு காற்று வரட்டும்… பட வாய்ப்பு இல்லை.. அதிதி சங்கர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா.?

0
Follow on Google News

பிரம்மாண்ட இயக்குனரின் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர் ‘விருமன்’ படம் மூலமாக நாயகியாக அறிமுகம் ஆனார். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தார். முதல் படமே கிராமத்து கதையம்சத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதிதி ஷங்கரின் எதார்த்தமான நடிப்பும், துறுதுறு குணமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துவிட்டது.

மேலும், ‘விருமன்’ படம் தொடர்பான மேடைகளில் பெரிய இடத்து பெண் எந்த பந்தம் இல்லாமல் அதிதி ஷங்கர் பேசியதும், அவரின் மொக்கை காமெடியும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்து விட்டது. இதனையடுத்து ‘விருமன்’ படத்தை தொடர்ந்து மாவீரனில் நடித்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தார். இந்த இரு படங்களுமே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.

குறிப்பாக மாவீரன் படத்தில் அதிதி கேரக்டர் முக்கியத்துவம் இல்லாமல் போனது என பல விமர்சனங்கள் எழுத்தது. ஆனாலும் தற்போது இயக்குனர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் ஒரு படம், ராம்குமார் இயக்கும் அடுத்தப்படம் என அதிதி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வருகிறார். விருமன் படத்தின் மதுரை வீரன் பாடலை பாடியிருந்த இவர், மாவீரன் படத்திலும் ஒரு பாடலை பாடியிருந்தார்.

இதனிடையே அதிதி கழுத்தில் டேக், மருத்துவர் உடை, முகத்தில் மாஸ்க், தலையில் கேப் அணிந்து ஒரு மருத்துவராக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்திற்கு டாக்டர் ஏ என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். மருத்துவ படிப்பு முடித்துள்ள அதிதி, விருப்பத்தின் பேரில் சினிமாவில் நடிக்க வந்தவர். ஆனால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் பல சந்தேககங்களை கிளப்பியுள்ளது.

இயக்குநர் ஷங்கரின் விருப்பத்திற்கேற்ப மருத்துவம் படித்த அதிதி ஷங்கர் டாக்டராக பணிபுரிவார் என எதிர்பார்த்த அப்பாவுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் விதமாக நடிக்கப் போகிறேன் என ஒற்றைக் காலில் நின்று ஹீரோயினாகவும் ஆகி விட்டார். இந்நிலையில் அவரின் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. விருமன், மாவீரன் படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றதால் அதிதி மீண்டும் தனது மருத்துவ தொழிலுக்கு திரும்பிவிட்டாரா, அல்லது அவர் அடுத்து நடித்து வரும் படங்களில் இது ஒரு கேட்டப்பா என்று ரசிகர்கள் சந்தேகம் எழுப்பி வரும் நிலையில், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிதி ஷங்கர் தற்போது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இதனையடுத்து ‘ராட்சசன்’ பட இயக்குனர் ராம்குமார் இயக்கத்திலும் அதிதி ஷங்கர் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் மட்டுமல்ல அடுத்ததாக செல்வராகவன் இயக்க இருக்கும் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்திலும் அதிதி சங்கரை தான் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.

முதல் பாகத்தில் கதாநாயகனாக நடித்த ரவி கிருஷ்ணா தான் இரண்டாம் பாகத்திலும் நடிக்க இருக்கிறார். ஆனால் இரண்டாம் பாகத்தில் சோனியா அகர்வாலுக்கு பதிலாக அதிதி சங்கர் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இவ்வாறு தொடர்ந்து அதிதிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு சங்கரின் மகள் என்ற காரணத்தினால் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது சங்கரை மேலும் டென்ஷன் ஏற்றி இருக்கிறது.

இதனால்தான் அதிதி சங்கர் மீண்டும் டாக்டராக மாறியுள்ளார் என்று பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் அடுத்த படத்தில் அதிதி ஷங்கர் டாக்டர் கேரக்டரில் நடிக்கிறாரா? அல்லது சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு டாக்டர் தொழிலுக்கு சென்று விட்டாரா? என்ற கேள்வியை ரசிகர்களை எழுப்பி வருகின்றனர். இதற்கு அதிதி ஷங்கரிடம் இருந்து விரைவில் பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.