விபச்சாரம் நடக்கும் இடத்தில் இப்படி ஒரு கட்சியா.? சிவகுமாரை திட்டமிட்டு அசிங்கப்படுகிறாரா மோகன் ஜி..

0
Follow on Google News

நடிகர் சூர்யா நடிப்பில் ஒடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தில் உண்மை சம்பவத்தை படமாக எடுத்துள்ளதாக கூறப்படும் நிலையில், ஜெய்பீம் படத்தில் வரும் மற்ற அணைத்து கதாபாத்திரத்துக்கு உண்மையான பெயரில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை சம்பவ விவகாரத்தில் மிக கொடூரமாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் அந்தோனிசாமி என்பவர் பெயரை படத்தில் குருமூர்த்தி என மாற்றப்பட்டது.

மேலும் இவர் இடம்பெறும் காட்சிகளில் சில குறியீடுகள் மூலம் கொடூரமான காவல் ஆய்வாளரை ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் போன்று சித்தரிக்கப்பட்டது, அதில் குறிப்பாக அவர் வீட்டில் இருக்கும் காலண்டரில் அக்னி சட்டி புகைப்படம் இடம்பெற்றுள்ளது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினர் ஜெய்பீம் படத்தின் இயக்குனர் மற்றும் அந்த படத்தில் நடித்த நடிகர் சூர்யா ஆகியோருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர்

நடிகர் சூர்யாவை தாக்கினால் பரிசு வழங்கப்படும் என பாமக நிர்வாகி ஒருவர் அறிவிக்க நடிகர் சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வழக்கப்பட்டது. நான்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் சூர்யாவை காப்பாற்றி விட முடியாது, என மறைந்த வன்னியர் சங்கம் தலைவர் காடுவெட்டி குரு மகன் அனலரசன் பகிரகமாக எச்சரிக்கை விடுக்க மேலும் ஜெய்பீம் விவகாரம் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அன்புமணி சூர்யாவை கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

பதிலுக்கு சூர்யா தாங்கள் பக்கம் எந்த ஒரு தவறும் இல்லை என்பதை விளக்கம் கொடுக்கும் வகையில் பதில் அறிக்கை விட்டார், இந்த நிலையில் நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசிவரை வருத்தம் கூட தெரிவிக்காமல் ஜெய்பீம் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து படத்தில் கவனம் செலுத்த தொடங்கினார், மேலும் ஜெய்பீம் விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இருந்த சினிமா மற்றும் அரசியல் பிரபலன்களுக்கு தனி தனியாக நன்றி தெரிவித்தார் சூர்யா.

இதனால் ஏற்கனவே இந்த விவகாரத்தில் கடும் கோபத்தில்இருந்த குறிப்பிட்ட தரப்பினரை மேலும் ஆத்திரம் அடைய செய்தது. இந்நிலையில் ஜெய்பீம் படத்திற்கு பின்பு சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திற்கு ஒரு குறிப்பிட்ட தரப்பினார் மத்தியில் கடுமையான எதிர்ப்பின் காரணமாக வட மாவட்டங்களின் பல இடங்களில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையிடப்படவில்லை இதனால் அந்த படம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

ஜெய்பீம் படத்தில் ஒரு குறிப்பிட்ட தரப்பினரை அவமானப்படுத்தும் விதத்தில் காட்சி அமைத்து நடித்த நடிகர் சூர்யாவுக்கு அவரது பாணியில் பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் மோகன் ஜி தரமான சம்பவம் செய்துள்ளது தற்பொழுது வெளியாகியுள்ளது. இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பகாசூரன், இந்த படத்தில் நடித்த செல்வராகவன், நட்ராஜ் ஆகியோர் நடிப்பு பெரும் பாராட்டை பெற்றது.

பகாசூரன் படத்தில் விபசாரத்தில் ஈடுபடும் விலை மாது வரும் கட்சியில், அந்த விலை மாது வீட்டில் இருக்கும் ஒரு காலெண்டரில் ‘சிவக்குமார் அண்ட் கோ என எழுதப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து, இயக்குனர் மோகன் ஜி பாமக ஆதரவாளர் என்பதால், ஏற்கனவே ஜெய்பீம் விவகாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வேண்டுமென்றே விபசாரம் நடக்கும் இடத்தில சிவகுமார் அண்ட் கோ என பெயரிடப்பட்டுள்ள காலெண்டரை இடம்பெற் செய்துள்ளார் என,

இதற்கு கடுமையாக எதிர்ப்பை சூர்யா ரசிகர்கள் பதிவு செய்து வரும் நிலையில், ஜெய்பீம் படத்தில் காலெண்டர் சர்ச்சை எழுந்த போது, நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக படத்தை படமாக பாருங்க என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் தற்பொழுது பகாசூரன் படத்தில் எழுந்துள்ள சிவகுமார் அன்ட் கோ சர்ச்சைக்கும் , படத்தை படமாக பாருங்க என மோகன் ஜி க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர் குறிப்பிட்ட தரப்பினர்.