மீண்டும் படவாய்ப்பு இல்லாமல் வீட்டிலே முடங்கும் சிம்பு… பிரச்சனைக்கு காரணமே சிம்பு அம்மாவா.?

0
Follow on Google News

தயாரிப்பாளர் ராயப்பன் உட்பட்ட இன்னும் சில தயாரிப்பாளர்கள் படத்தில் சிம்பு நடித்த போது அவர்களுக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்காததால், அதனால் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்த தயாரிப்பாளர்கள் அடுத்து சிம்பு நடித்துக் கொண்டிருந்த மாநாடு படம் வெளியிட முடியாத அளவுக்கு தடையாக இருந்தனர். மேலும் இந்த பஞ்சாயத்து பல கட்டங்களாக தயாரிப்பாளர் சங்கம் உட்பட்ட பல சினிமா சார்ந்த இடங்களில் நடைபெற்றது.

நடிகர் சிலம்பரசனின் தாயார் பலமுறை இந்த பஞ்சாயத்துக்கு வந்தும் கூட ஒரு முடிவுக்கு வரவில்லை. இறுதியில் தயாரிப்பாளர் ஐசரி கணேசன் இந்த விவாரத்தில் தலையிட்டு, உங்கள் பிரச்சனை அனைத்தையும் தீர்த்து வைக்கிறேன், சிம்பு நடிக்கும் மாநாடு படம் வெளியாக இடையூறு செய்ய வேண்டாம். என சிம்புவால் ஏற்பட்ட தயாரிப்பாளர்கள் பிரச்சனையை ஐசரி கணேசன் தீர்த்து வைத்த பின்பு தான் மாநாடு படம் வெளி ஆனது

மேலும் மாநாடு வெற்றிக்குப் பின்பு ஐசரி கணேசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் வெந்து தணிந்தது காடு படத்திற்கு சக்சஸ் மீட் வைத்து சிம்பு நடித்த படம் வெற்றி படம் என ஒரு போலியான பிம்பத்தையும் உருவாக்கி சிம்புவுக்கு உதவி செய்த ஐசரி கணேசன் மேலும் சிம்புவுக்கு விலை உயர்ந்த காரையும் பரிசாக கொடுத்தார்.

இதனை தொடர்ந்து ஐசரி கணேசனுக்கு சொந்தமான பல்கலைக்கழகத்தில் நடிகர் சிலம்பரசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிம்பு உன் இமேஜை மேலும் உயர்த்தினார் ஐசரி கணேசன். மேலும் நடிகர் சிலம்பரசனின் தந்தை டி ராஜேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த போது அவருக்கு அமெரிக்காவில் தேவையான பல உதவிகளை ஐசரி கணேசன் செய்து கொடுத்துள்ளார்

இவ்வளவு உதவி செய்த ஐசரி கணேசனிடம் கொஞ்சம் கூட விசுவாசம் இல்லாமல் நடிகர் சிலம்பரசனும் மற்றும் அவருடைய குடும்பத்தினரும் செய்து வருகின்றனர். தன்னுடைய பிரச்சனையிலிருந்து தப்பிப்பதற்காக ஐசரி கணேசன் உதவி செய்ய முன்வந்த போது, ஐசரி கணேசன் தயாரிப்பில் தொடர்ந்து மூன்று படங்கள் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்து அதற்கான அட்வான்ஸ் தொகையும் வாங்கினார் சிலம்பரசன்.

சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் வீட்டிலே முடங்கி கிடந்த சிலம்பரசன் நடிப்பில் வந்த மாநாடு படம் பிரச்சனையில் சிக்கிய போது அதற்கு உதவியாக இருந்து அந்த படத்தை வெளியே கொண்டு வந்து மாநாடு வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் ஐசரி கணேசன். அதேபோன்று வெந்து தணிந்தது காடு திரைப்படம் தோல்வி அடைந்தாலும், அது வெற்றிப்படம் என சக்சஸ் மீட் வைத்து மேலும் தன்னுடைய பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் கொடுத்து சிம்புவின் இமேஜை மிகப்பெரிய அளவில் உயர்த்தியவர் சிம்பு.

ஆனால் மாநாடு வெற்றி மூலம் தன்னுடைய மார்க்கெட் உயரத்துக்கு வந்த பின்பு, ஐசரி கணேசனிடம் ஒப்பந்தம் செய்தது போன்று அடுத்தடுத்து படங்களில் நடிக்காமல் வேறு ஒரு தயாரிப்பில் படம் கமிட்டாகி ஐசரி கணேசனுக்கு விபூதி அடித்து வருகிறார் சிம்பு. இதன் நிலையில் சிம்புவுக்கு இவ்வளவு பிரச்சனை வருவதற்கு முக்கிய காரணமே அவருடைய தாயார் உஷா தான் என்று கூறப்படுகிறது.

சிம்புவின் கால்ஷீட் முதல், அவர் எந்த படத்தில் நடிக்க வேண்டும் , என்ன கதையில் நடிக்க வேண்டும் என்று பின்னணியில் இருந்து செயல்படுவது அவருடைய தாயார் உஷா தான் என்றும். அந்த வகையில் ஐசரி கணேசன் தன்னுடைய மகன் பிரச்சனையின் போது உதவி செய்ததை சற்றும் கூட நினைவில் கொள்ளாமல், நன்றி இல்லாமல் சிலம்பரசன் நடந்து கொள்வதற்கு முக்கிய காரணமே சிலம்பரசன் பின்னணியில் இருந்து செயல்படும் அவர் தாயார் உஷா தான் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதற்கு முன்பு சிலம்பரசன் சினிமாவில் மார்க்கெட் இழந்து வீட்டிலே முடங்கியதற்கு காரணமும் கூட அவருடைய தாயார்தான் என்றும், மேலும் மாநாடு என்ற ஒரே வெற்றி படத்தை வைத்து சிலம்பரசன் ரொம்ப நாளைக்கு ஓட்ட முடியாது, அந்த வகையில் விரைவில் இதற்கு முன்பு பட வாய்ப்பு இல்லாமல் வீட்டிலே முடங்கியது போன்று முடங்குவார் சிலம்பரசன் என்றும், அதற்கும் காரணமாக இருக்கப் போறது அவர் தாயார் தான் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஐசரி கணேசனிடம் ஒப்பந்தம் செய்தபடி அவருடைய தயாரிப்பில் நடித்து கொடுப்பதற்காக சிம்புவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், ஆனால் சிம்பு அந்த வக்கீல் நோட்டீசை பெறவில்லை என கூறப்படும் நிலையில், விரைவில் சிம்புவுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையும் மற்றும் திரைப்படத்துறை மூலமாகவும் நடவடிக்கை எடுப்பதற்காக ஐ சரி கணேசன் முயற்சித்து வருவதால் மீண்டும் சிம்பு நடிக்கும் படங்கள் மிகப்பெரிய சிக்கல் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.