அஜித்திடம் சொந்த மகன் போல் பழகிய ராஜ்கிரண் … மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்ட அஜித்…

0
Follow on Google News

நடிகர் அஜித் குமார் சினிமாவில் அவருடைய ஆரம்ப கட்ட வாழ்க்கை தொடங்கி தற்பொழுது வரை மிக குறுகிய நட்பு வட்டத்தை தன்னை சுற்றி வைத்து கொள்ள கூடியவர், என்ன தான் அஜித்தை வைத்து தொடர்ந்து பல படங்கள் இயக்கி இருந்தாலும் கூட, அஜித்திடம் மிக நெருங்கி செல்ல முடியாது, அந்த வகையில், இயக்குனர் சிறுத்தை சிவா, ஹெச். வினோத் போன்ற இயக்குனர்கள் கூட அஜித்தை வைத்து அடுத்தடுத்து படங்களை இயக்கி இருந்தாலும் கூட. அந்த படம் முடிந்ததும், அஜித் விருப்பப்பட்டு அவர்களை பார்த்தால் தான், மற்ற படி அஜித்திடம் மிக நெருங்கிய நட்புக்குள் அவர்களால் செல்ல முடியாது.

இப்படி விதியசமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வரும் நடிகர் அஜித் விரல் விட்டு என்ன கூடிய மிக குறுகிய நபர்கள் உடன் தான் நெருங்கிய நட்பில் இருந்து வருவார், அப்படி அவருடைய நெருங்கிய நட்பில் இருந்த ஒருவர் தான் சமீபத்தில் மரணம் அடைந்த வெற்றி துரைசாமி. அந்த அஜித்தின் மிக நெருங்கிய நட்பில் இருந்து வந்துள்ளார் நடிகர் ராஜ்கிரண்.

அஜித் நடித்த கிரீடம் படத்தில் அஜித்துக்கு தந்தையாக நடித்தவர் ராஜ்கிரண், அந்த படத்தில் இருந்தே இருவருக்கும் இடையிலான நெருக்கம் அதிகரித்து வந்துள்ளது, பொதுவாகவே ராஜ்கிரணை இது வரை தமிழ் சினிமா துறையில் யாரும் குறை சொல்லியது கிடையாது. அந்த அளவுக்கு உண்மையை பேசக்கூடிய அற்புதமான மனிதர் என்றே ராஜ்கிரணை சொல்லலாம்.

இந்நிலையில் ராஜ்கிரணுடன் நெருங்கி பழகி வந்த அஜித், ஒரு கட்டத்தில் ராஜ்கிரண் நற்குணங்களை பார்த்து அவரை தன்னுடைய அப்பா ஸ்தானத்தில் பார்க்க தொடங்கினார். அதே போன்று அஜித்தை மகன் ஸ்தானத்தில் வைத்து பழகி வந்துள்ளார் ராஜ்கிரண். பொதுவாக அஜித் அவருடன் நெருங்கிய வட்டத்துக்குள் இருக்க கூடிய, குறிப்பிட்ட சில நண்பர்கள் வீட்டிற்கு மட்டும் நேரில் சென்று அவர்களுடன் பழகுவார்.

மேலும் அவர்கள் வீட்டிற்கு சென்று உரிமையுடன் பேசி, அரட்டை அடித்து மிக ஜாலியாக இருக்க கூடியவர் அஜித். அந்த வரிசையில் அஜித்தின் பட்டியலில் முக்கியமான நபராக ஒரு காலத்தில் இருந்தவர் நடிகர் ராஜ்கிரண். உடனே ராஜ்கிரணை பார்க்க வேண்டும் என்றால், அவரை வீட்டிற்கு அழைத்து பார்ப்பதை விட அஜித்தே ராஜ்கிரண் இருக்கும் இடத்தை அறிந்து அங்கே சென்று பார்த்து பேசிவிட்டு வருவாராம்.

அந்த வகையில் ராஜ்கிரண் படப்பிடிப்பில் இருந்தாலும், டப்பிங் ஸ்டுடியோவில் இருந்தாலும் அங்கே சென்று பார்க்க கூடிய அஜித், சில நேரங்களில் ராஜ்கிரண் டப்பிங் பேசி கொண்டிருந்தால் அவர் டப்பிங் பேசிவிட்டு வரும் வரை காத்திருந்து அவரை பார்த்து பேசிவிட்டு வருவார் அஜித். இப்படி தந்தை – மகன் போல் சென்று கொண்டிருந்த ராஜ்கிரண் – அஜித் உறவு..

ஒரு அஜித் – ராஜ்கிரண் இடையே நடந்த சந்திப்பின் போது, தனக்கு இருக்கும் பொருளதாக சிக்கல் குறித்து அஜித்திடம் தெரிவித்த ராஜ்கிரண், உங்களை வைத்து ஒரு படம் தயாரித்தால் எனக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து விடும் என ராஜ்கிரண் தெரிவிக்க, அந்த நிமிடத்தில் இருந்து ராஜ்கிரண் உறவை துடித்து விட்டாராம் அஜித்.

அதாவது தன்னிடம் எதாவது எதிர்பார்த்து பழகினால் அது அஜித்துக்கு பிடிக்காதாம், ஆனால் ஒரு மனிதனுக்கு சக மனிதன் உதவி செய்யும் இவுலகில் தந்தை போல் பழகிய ராஜ்கிரண் உதவி என்றது உடனே அவரை அஜித் கழட்டி விட்டுள்ளது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்.