ரஜினி பயந்துட்டாரா.? யார் சொன்னா… விஜய்க்கு தரமான பதிலடி கொடுத்த ரஜினிகாந்த்..

0
Follow on Google News

கடந்த சில மாதங்களாக சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சை மிக பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது, இதற்கு முக்கிய காரணம், விஜய் நடித்த வாரிசு படத்தில் நடிகர் சரத்குமார் சூப்பர் ஸ்டார் விஜய் என்று பேசியது, மேலும் தொடர்ந்து இது குறித்து விஜய்க்கு நெருக்கமானவர்கள் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று கம்பு சுத்தி வந்த நிலையில் , இதெல்லாம் விஜயின் தூண்டுதலின் பேரில் தான் நடக்கிறது.

மேலும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் சரத்குமார் சர்ச்சைக்குரிய வகையில் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியதற்கு, அதே மேடையில் இந்த சர்ச்சைக்கு மூன்று புள்ளி வைக்கும் வகையில் விஜய் விளக்கம் கொடுத்து இருந்தால் இந்த பிரச்சனை அத்துடன் முடிவுக்கு வந்திருக்கும், ஆனால், விஜய் மௌனமாக இந்த விவகாரத்தை கடந்து சென்றது, சூப்பர் ஸ்டார் அடைமொழிக்கு ஆசை பட்டு விஜய் இதை ஆமோதிக்கிறாரா.? என்கிற கேள்வியும் விஜய்யை நோக்கி எழுந்து வந்தது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு யாருமே எதிர்பாராத வகையில் ரஜினிகாந்த் நேரடியாக பதிலடி கொடுக்கும் வகையில் ரஜினி நடிப்பில் ஜெயிலர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலில், ஒவ்வொரு வரியும், விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது, ரஜினி – விஜய்க்கு இடையிலான மோதல் மேலும் உச்சகட்டத்தை அடைந்தது. இந்த நிலையில் ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் ரஜினி நிச்சயம் இந்த விவகாரம் குறித்து பேசுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில்.

அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், மேலும் விஜய் ரசிகர்கள் கதறும் வகையில் அமைத்திருந்தது ரஜினிகாந்த ஜெயிலர் ஆடியோ வெளியிட்டு விழாவில் பேசிய பேச்சு. ரஜினிகாந்த் பேசுகையில், ‘Hukum பாடல் வரிகளை முதன்முறையாகப் பார்த்தபோது தாறு மாறா இருந்தது, பாடலில் இருந்து சூப்பர் ஸ்டார் என்பதை மட்டும் நீக்கச் சொன்னேன் என தெரிவித்த ரஜினிகாந்த்.

மேலும், சூப்பர் ஸ்டார் பட்டம் எனக்குமே தொல்ல தான். சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு பிரச்சனை இப்ப இல்ல 1977 லயே ஆரம்பிச்சிருச்சு.அப்ப எனக்கு ஒரு படத்துல சூப்பர் ஸ்டார்னு டைட்டில் போட்டப்ப நானே வேணாம்னு சொன்னேன். ஏன்னா, அப்ப கமல் ரொம்ப பெரிய உயரத்துல இருந்தாங்க . சிவாஜியும் ஹீரோவா நடிச்சிட்டு இருந்தாங்க.

அதனால சூப்பர் ஸ்டார் பட்டம் வேணாம்னு சொன்னேன். ஆனா, ரஜினி பயந்துட்டார் என சொன்னாங்க. நாம பயப்படுறது ரெண்டே பேருக்குதான். ஒன்னு அந்த பரம்பொருள் கடவுளுக்கு இன்னொன்னு நல்லவங்களுக்கு. மற்றபடி யாருக்கும் பயப்படுறதில்ல. என பேசிய ரஜினிகாந்த், தொடர்ந்து ஒரு கட்டி கதை ஒன்றை தெரிவித்தார், அதில் காட்டுல பெரிய மிருகங்களை எப்பவும் சின்ன மிருகங்களை தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கும்.

உதாரணத்துக்கு காக்கா அனைவரையும் தொந்தரவு செய்யும், ஆனால், கழுகு யாரையும் தொந்தரவு செய்யாது. காக்கா எப்போ எல்லாம் கழுகுக்கு தொல்லை தருகிறதோ அப்போ எல்லாம் கழுகு எதுவுமே செய்யாமல் மேலே பறந்து போய்விடும். ஆனால், காக்காவாலா சண்டை போட முடியும் ஆனால் அதனால், உயரமாக பறக்க முடியாது. உலகின் உன்னதமான மொழி மெளனம் தான். சரியான பஞ்ச்:

நான் காக்கா கழுகுன்னு சொன்ன உடனே, இவரை தான் சொல்றேன்னு சோஷியல் மீடியால சொல்லுவாங்க. இங்க குலைக்காத நாயும் இல்லை. குறை சொல்லாத வாயும் இல்லை. இது ரெண்டும் இல்லாத ஊரும் இல்லை. நாம வேலையை பார்த்துட்டு நேரா போயிட்டே இருக்கணும் என அனல் பறக்க ரஜினிகாந்த் பேசியது, விஜய்யை குறி வைத்து தான் என பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், விஜயை தலைவர் வெச்சு செஞ்சுட்டார் என ரஜினி ரசிகர்கள் ஒரு பக்கம் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருவதும் குறிப்பிடடத்தக்கது.