எல்லாம் அப்ப வேஷம் தான ரஜினி… ஒரு ஆன்மீக வாதி நீங்களே இப்படி செய்யலாமா.?

0
Follow on Google News

நடிகர் ரஜினிகாந்த் ஒரு மிக பெரிய நடிகர் என்பதைத் தாண்டி, அவர் ஒரு மிகப்பெரிய ஆன்மீகவாதியும் கூட. குறிப்பாக சொல்ல போனால் நடிப்பை விட அதிகம் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர் ரஜினிகாந்த், இந்தியாவில் உள்ள பிரசித்தி போற்ற ஆன்மீக தளங்களுக்கு சென்றுள்ள ரஜினிகாந்த், அடிக்கடி இமயமலை சென்று, அங்கே சில நாட்கள் தங்கி தியானம் செய்ய செய்வதை வழக்கமாக கொண்ட ரஜினிகாந்த், கடந்த சில வருடங்களாக தான், அவருடைய உடன்நிலையை கருத்தில் கொண்டு இமயமலை பயணத்தை தவிர்த்து வருகின்றவர்.

பெரும்பாலும் ரிஷிகள் சொன்ன தத்துவங்களை மேடைகளில் பேச கூடிய ரஜினிகாந்த், அதற்கு குட்டி கதை செல்லி விளக்கமும் கொடுப்பார். பொதுவாக மேடையில் ஆன்மீகம் சார்ந்து ரஜினி பேசுகின்ற தத்துவங்கள் பலர் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேடைகளில் மட்டுமில்லாமல் ரஜினி தன்னுடைய படத்திலும் ஆன்மீகம் சார்ந்த கருத்துக்களை முன் வைப்பதில் தவறுவது கிடையாது.

அந்த வகையில் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தில், மிக பெரிய கோடீஸ்வரர் ஜமீனான இருக்கும் ரஜினிகாந்த், தன்னுடைய சொத்துக்களை ஏழை எளிய மக்களுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு, ஒரு துறவி போன்று வரும் கட்சியில், பிறக்கும் போதும், ஒன்னும் கொண்டு வரல, இறக்கும் போதும் ஒன்னும் கொண்டு வரப்போவது இல்லை, இதுக்கு இடையில எதுக்குயா.. என்னது உன்னதுனு என முற்றும் துறந்த துறவி போன்று முத்து படத்தில் ரஜினிகாந்த் பேசியிருப்பார்.

இப்படி ஆன்மீக தத்துவங்களை அள்ளி தெளித்து வந்த ரஜினிகாந்த, எங்கே தனது சூப்பர் ஸ்டார் படம் பறிபோகி விடுமோ என்கிற அச்சத்தில், யாரோ செய்யும் சலசலப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ரஜினி நடிப்பில் வெளி வர இருக்கும் ஜெயிலர் படத்தில், சமீபத்தில் விவாத பொருளாக மாறியுள்ள சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைத்துள்ள பாடல் வரிகள் ரஜினிக்கு எதிராக கடும் விமர்சனம் எழுத்து வருகிறது.

இந்த பாடலில் பட்டத்த பறிக்க நூறு பேரு…… குட்டி செவுத்த எட்டி பார்த்தா … உசிரு கொடுக்க கோடி பேரு.. என்கிற வரி ரஜினியின் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கு விஜய்க்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைத்துள்ளது. இந்நிலையில் இந்த பாடல் வரிகள் ரஜினிகாந்த் அனுமதியில்லாமல் இடம்பெறுவதர்க்கு வாய்ப்பே இல்லை. ஒரு வேலை கண்ணா… நீ எழுது கண்ணா என்று ரஜினியை இது போன்ற பாடல் வரிகளை கேட்டு வாங்கி இருக்கலாம் என்று கூட சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

பொதுவாகவே தங்களை ஆன்மீகவாதி என்று வெளிப்படுத்திக் கொள்ளும் நடிகர் ரஜினிகாந்த் வெளியில் எந்த ஒரு பட்டமும், பதவியும் தேவையில்லை என்று காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் வேறு ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்களா.? என்கிற சந்தேகம் சமீபத்தில் ஜெயிலர் படத்தின் பாடல் மூலம் கிளப்பியுள்ளது. அனைத்தையும் பொதுப்படையாக சிந்திக்க கூடிய ஒரு ஆன்மீகவாதியான ரஜினிகாந்த் கேவலம் ஒரு அடைமொழி பட்டம் அதற்கு இந்த அளவுக்கு கீழே இறங்கி வந்து பாடல் மூலம் மல்லு கட்ட வேண்டுமா.?

சூப்பர் ஸ்டார் என்கின்ற பட்டம் இது ஜனாதிபதியிடம் வாங்கிய பத்மபூஷன், பத்ம விபூஷன் அல்லது தேசிய விருதோ என அங்கீகரிக்கப்பட்ட பட்டம் கிடையாது. சினிமாவில் போற போக்கில் ஒவ்வொரு நடிகனுக்கும் இருக்கும் அடைமொழி தான் இந்த சூப்பர் ஸ்டார் பட்டம், இதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்துவதற்கு எந்த தடையும் இல்லை அப்படி இருக்கையில், தன்னை ஆன்மீக வாதி என காட்டி கொள்ளும் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சர்ச்சைக்கு ரெம்ப சீரியசாக எடுத்து கொண்டு பாடல் வரிகளில் பதிலடி கொடுத்துள்ளது ரஜினிக்கு எதிராக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருவதை பார்க்க முடிகிறது.