கர்நாடக மக்களை குளிர்விக்க ஒரு பேச்சு.. தமிழர்களை ஏமாற்ற ஒரு பேச்சு… பிரகாஷ் ராஜ் போடும் இரட்டை வேடம்..

0
Follow on Google News

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் கர்நாடகா- தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையே தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இரு மாநில விவசாயிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் நேற்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் இரு மாநில எல்லைகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்நிலையில் நடிகர் சித்தார்த், தான் நடித்துள்ள சித்தா படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க பெங்களூரு சென்று இருந்தார். அங்குள்ள ஒரு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக்கொண்டு இருந்தார். அப்போது கன்னட அமைப்பினர் திடீரென்று அங்கு வந்தனர். அவர்கள் மேடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு கண்டனம் தெரிவித்து கோஷமிட்டனர். தமிழ் நடிகர்கள் இங்கு வரக்கூடாது. தமிழ் படங்களை கர்நாடகாவில் திரையிடக்கூடாது என்று சித்தார்த்தை அவமதித்து ஆவேசமாக குரல் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கன்னட அமைப்பினர் எதிர்ப்பை தொடர்ந்து சித்தார்த் அங்கிருந்து வெளியேறினார். இதையடுத்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

தற்போது இதற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார். பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் “பல ஆண்டுகளாக காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாத அரசியல் கட்சிகளையும், ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கேள்வி கேட்காமல், சாமானிய மக்களுக்கும், திரைக் கலைஞர்களுக்கும் தொந்தரவு கொடுப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது; ஒரு கன்னடிகனாக, கன்னடியர்களின் சார்பாக நான் மன்னிப்பு கேட்கிறேன்… சாரி சித்தார்த்” என்றிருக்கிறார்.

தற்போது காவிரி பிரச்சனைக்காக நடிகர் பிரகாஷ்ராஜ் கன்னட அரசை எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. வெறும் மத்திய அரசை மட்டுமே குறை கூறிக் கொண்டுள்ளார். அதுமட்டுமின்றி அவர் சித்தார்த்திற்காக பற்றி போட்ட டுவீட் ஆங்கிலத்தில் உள்ளது. ஆனால் கன்னட மொழியில் மற்றொரு டுவீட் போட்டுள்ளார். அதில் ”காவிரி நம்முடையதே” என்று டுவீட் போட்டுள்ளார். இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கன்னட மொழியில் வெளியிட்ட பதிவில், நம் காவிரி என்று ஹேஷ்டேக் செய்துள்ள பிரகாஷ் ராஜ், ஆங்கிலத்தில் வெளியிட்ட பதிவில், அந்த வார்த்தையை தவிர்த்துள்ளார்.இதனால் பிரகாஷ்ராஜ் இரட்டை வேடம் போட்டு வருவதாக கூறப்படுகிறது. கர்நாடகாவைப் பூர்வீமாகக் கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ் தமிழில் பல காலமாக கோலோச்சிய நடிகராக இருக்கிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், இந்தி என அவர் தடம் பதித்த களங்கள் பல.

சினிமாவில் பிரபலமான பிரகாஷ்ராஜ் அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் அரசியல் சம்பந்தப்பட்ட கருத்துக்களை கூறி வருகிறார். அவரின் நோக்கம் அனைத்தும் மத்திய அரசு மோடியை விமர்சிப்பதில் மட்டுமே உள்ளது. உண்மையில் சமூக அக்கறைக்காக பேசவில்லை என்பது இந்த சர்ச்சையின் மூலம் தெளிவாகத் தெரிகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆங்கிலத்தில் சித்தார்த்க்கு எதிராக கன்னட அமைப்பினர் செயலுக்கு மன்னிப்பு கேட்டு தமிழர்கள் மத்தியில் பாராட்டை பெரும் வகையில் நடந்து கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், அடுத்து கர்நாடக மொழியில் காவேரி நம்முடையதே என பதிவு செய்து கர்நாடக மக்கள் பாராட்டை பெரும் வகையில் நடந்து கொண்டுள்ள பிரகாஷ் ராஜ் காவேரி விவகாரத்தில் கன்னடவுக்கு ஆதரவாக தமிழர்கள் முதுகில் குத்தும் செயல் செய்து வருவது சிலர் கருத்து தெரிவித்து வருவது பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்யுங்கள்..