மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யும் நடிகர் ஜெயம் ரவி… பிரபல நடிகையுடன் கிசு கிசு…

0
Follow on Google News

சமீப காலமாகவே தமிழ் திரைத்துறையில் விவாகரத்து என்பது அதிக அளவில் அரங்கேறி வருகிறது. ‘இதற்கு இல்லையா சார் ஒரு End’ என்னும் டயலாக்கிற்கு ஏற்றார் போல, மாதம் மாதம் ஒரு நடிகர்களின் விவாகரத்து செய்தியும் வந்து கொண்டுதான் இருக்கிறது. முதலில் இசையமைப்பாளரான டி. இமான், பிறகு தனுஷ்-ஐஸ்வர்யா, G.V பிரகாஷ்-சைந்தவி என பலரின் விவாகரத்து செய்தியை கேட்டு, அந்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத ரசிகர்களுக்கு, தற்போது நடிகர் ஜெயம்ரவி மற்றும் அவரது காதல் மனைவியான ஆர்த்தியும் விவாகரத்து செய்யப் போகிறார்கள் என்ற செய்தி மேலும் ஒரு இடியாக விழுந்துள்ளது.

ஜெயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ரவி தான், அந்த படத்தின் வெற்றியால் ஜெயம் ரவி என இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் அந்த படத்தின் 21 வது ஆண்டு நிறைவு நாள் இன்றைய தினம் கொண்டாடப்படும் சூழ்நிலையில், ஜெயம் ரவி தனது ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளார். ஜெயம் படத்திற்குப் பிறகும் அவர் நடித்த பல படங்கள், சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து, இன்றைய தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராகவும் இவர் இருக்கிறார்.

இந்நிலையில்தான் இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கோலிவுட்டில் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி போன்றுதான் ஜெயம் ரவியும், ஆர்த்தியும் இதுவரை எந்த ஒரு சர்ச்சைகளிலும், கிசுகிசுப்புகளிலும் சிக்காமல் நல்ல தம்பதிகளாகவே வாழ்ந்து வந்தனர்.

ஆனால் தற்போது ஜெயம் ரவியும் ஆர்த்தியும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவாகரத்துச் செய்தி வதந்தியாக இருக்கும் என அனைவரும் நினைத்து வந்த நிலையில் ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டிருந்த ஜெயம் ரவியின் புகைப்படங்களை நீக்கி அந்த செய்திகளை உண்மையாக்கியிருந்தார். சினிமா பிரபலங்கள் பலருக்கும் விவாகரத்து நடைபெற்று வரும் சூழ்நிலையில் தற்போது அந்த லிஸ்டில் ஜெயம் ரவியும் இடம் பெற்றுள்ளார்.

அதேபோல் மூத்த பத்திரிகையாளரான சபிதா ஜோசப், ஜெயம் ரவியின் விவாகரத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் அளித்த பேட்டியில் இத்தனை வருடம் நல்ல understand couples-ஆக இருந்த இருவருக்கும் இடையில் தற்போது பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது, குறிப்பாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகுதான் ஜெயம் ரவி விவாகரத்து கோரி இருக்கிறார் என்றும், அந்த படத்தில் நடித்த ஒரு ஹீரோயின் தான் இதற்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.

இதுவரை எந்த கிசுகிசுப்புகளிலும் சிக்காத ஜெயம் ரவி, முதலில் சிக்கியது இந்த சம்பவத்தில் தான். இந்தப் பிரச்சினையால்தான் தற்போது ஜெயம் ரவி விவாகரத்து கோரி இருக்கிறார். மேலும் ஆர்த்திக்கு ஜெயம் ரவியை விட்டுத்தர மனமே இல்லை என்றும், ஜெயம்ரவி தரப்பில் இருந்து தான் இந்த விவாகரத்து பிரச்சனை எழுந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

அதேபோல் இது குறித்து எந்த பத்திரிகைகளிலும் செய்தி வரவில்லையே என்ற கேள்விக்கும், அவர்கள் இப்போதுதான் கோர்ட்டில் Divorce-க்கு அப்ளை செய்திருக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவியின் இந்த முடிவை பார்த்து ரசிகர் பட்டாளமே அதிர்ச்சியில் உறைந்து உள்ளதோடு, மீண்டும் ஒரு பேச்சு வார்த்தை நடத்தி இருவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!