ஜெயம் ரவிக்கு அந்த மாதிரி பழக்கம்… லீவர் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை.. என்னாச்சு தெரியுமா.?

0
Follow on Google News

உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதற்காக பல ரசாயன பொருட்கள் சந்தையில் உலா வருகிறது, ஆனால் எம்ஜிஆர், சிவாஜி காலத்தில், இயற்கையான முறையில் உடல் பயிற்சி செய்து, அவர்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்கள், இன்றும் தமிழ் சினிமாவில் 60 வயதை கடந்தும் கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் இருக்கும் நடிகர் சரத்துக்குமார் எந்த ஒரு ரசாயன பொருளையும் உட்க்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வடிவமைக்கவில்லை.

இளம் வயதில் இருந்து இயற்கையான முறையில் உடல் பயிற்சி செய்து உடலை 60 வயது கடத்தும் இன்றும் தன்னுடைய இயற்கையான உடல் பயிற்சியின் மூலம் கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் சரத்குமார், ஆனால் மிக விரைவில் உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, உடல்பயிற்சி செய்ய கூடியவர்கள், மற்றும் இன்றைய காலகட்ட நடிகர்கள், சீராய்டு என்கிற ஊசியை பயன்படுத்துவது அவர்களுக்கு மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையை சேர்த்த 25 வயதான ஆகாஷ் என்பவர் மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றிப் பெற வேண்டும் என கடுமையாக பயிற்சி செய்து வந்துள்ளார், அப்போது சீராய்டு மருந்தை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார், இதனால் 25 வயதே ஆன ஆகாஷ் இரண்டு கிட்னியும் செயலிழந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், ஆகாஷ் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் அவர் பயன்படுத்திய ஸ்டிராய் மருந்து தான் என கூறப்படுகிறது.

இதே போன்று யூ டியூப் பிரபலமான பாடிபில்டர் ஜோ லிண்டர் தனது 30வது வயதில் நரம்பு வெடித்து பலியானார், இவரின் மரணத்திற்கு அனியூரிசம் என்று நோய்தான் காரணம் என்று கூறப்பட்ட நிலையில் ஸ்டெராய்டு பயன்பாடு காரணமாக அந்த நோய் அவருக்கு ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்பட்டது. இப்படி பலர் உயிரை காவு வாங்கி வரும் ஸ்டெராய்டு மருந்து குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இன்னும் பலர் உடலை விரைவில் கட்டுக்கோப்பாக உருவாக்க வேண்டும் என்பதால் ஸ்டெராய்டு பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ராஜா ராஜா சோழனாக நடித்த நடிகர் ஜெயம் ரவி,தன்னுடைய கதாபாத்திரத்தில் கட்டு கோப்பாக உடலை வைப்பதற்காக கடுமையான உடல்பயிற்சி செய்துள்ளார், மேலும் உடல் எடையை அதிகரிப்பதற்காக சில ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்து, ஜிம்மில் கடுமையான உடல் பயிற்சி செய்து வந்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி.

பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு மாதக்கணக்கில் தொடர்ந்து நடைபெற்று வந்தது, இடையில் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்பு தடை பெற்றது, இதனால் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் விரைவில் எடுத்து முடிக்க முடியாமல் நாட்கள் தள்ளி கொண்டே சென்றது. அப்படி ஒரு சூழலில் மாதக்கணக்கில் பொன்னியின் செல்வன் படத்திற்காக தன்னுடைய உடல் எடையை மெயின்டெயின் செய்து வந்திருக்கிறார்.

இதற்க்கு ஸ்டிராய் மருந்தை ஜெயம் ரவி பயன்படுத்தியதாக கூறப்படும் நிலையில், அதனால் அவருக்கு சில பக்க விளைவுகளும் ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஸ்டிராய்டு எடுத்துக் கொண்டதன் விளைவாக ஜெயம் ரவிக்கு கல்லிரல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இறைவன் படத்தில் நடிப்பதற்கு முன்பு, மூன்று மாத காலம் அதற்கான சிகிச்சையில் பெற்று வந்துள்ளார் ஜெயம் ரவி என கூறப்படும் நிலையில்,

ஸ்டிராய் மருந்து பயன்படுத்தியதால் ஜெயம் ரவிக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் குணமடைந்த பின்பு, போதும்டா சாமி, நான் தப்பித்து வந்ததே போதும் என ஸ்டீராய்டு மருந்து பயன்படுத்துவதை நிறுத்தி விட்டாராம் ஜெயம் ரவி. இந்நிலையில் ஜெயம் ரவி தனக்கு ஸ்டிராய் மருந்து பயன்படுத்தியதால் ஏற்பட்டா கல்லிரல் பிரச்சனையை ஆரம்பத்திலே கண்டறிந்து சரி செய்துவிட்டார், தொடர்ந்து கண்டுகொள்ளாமல் ஸ்டிராய் மருந்தை பயன்படுத்தி வந்திருந்தால் மிக பெரிய ஆபத்தில் கொண்டு சென்று விட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.