டென்ஷன் ஆனா நடிகர் அஜித்குமார்….நான் எதற்கு உதயநிதியை பார்க்க வேண்டும்.? எதற்கு தெரியுமா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் குமார் நடிகர்களில் வித்தியாசமானவர், தன்னுடைய சுயநலத்துக்காக அப்பாவி ரசிகர்கள் வாழ்க்கையை சீரழித்து விட கூடாது என்பதற்காக தன்னுடைய ரசிகர் மன்றங்களை அதிரடியாக கலைத்தவர் நடிகர் அஜித்குமார். முதலில் உங்க குடும்பத்தை பாருங்க என்னுடைய படம் பிடித்திருந்தால் என் படத்தை பாருங்கள் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தி வருகின்ற நடிகர் அஜித் அவருடைய ரசிகர் மன்றங்களை கலைத்த பின்பு தான் மேலும் அவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் படம் வலிமை. இந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், படத்தின் ஹீரோ அஜித்குமாரிடம் சில கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதில் போனி கபூர் வலிமையை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழில் படம் தயாரிக்க இருக்கிறார், இதனை தொடர்ந்து தமிழ் பட நடிகைகள் ஒன்றிணைத்து சென்னையில் போனி கபூருக்கு விருந்து ஓன்று ஏற்பட்டு செய்துள்ளார்கள்.

இதற்கு நடிகர் அஜித்தை அழைத்துள்ளார் போனி கபூர், ஆனால் அஜித் மறுத்துள்ளார். இதனை தொடர்ந்து வலிமை படம் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம் என வெளியாக உள்ளதால்,படத்தை விளம்பரம் செய்யும் வகையில் பெங்களூரியில் பிரமாண்ட நிகழ்ச்சி ஓன்று நடத்த ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாளர் போனி கபூர், ஆனால் அஜித் இந்த நிகச்சியை புறக்கணிக்க அந்த நிகழ்ச்சியும் நடக்கவில்லை.

இந்நிலையில், தனது ரசிகர்களை வலிமை படம் பார்க்க சொல்லி ஒரு அறிக்கை வெளியிட சொல்லி போனிகபூர் கோரிக்கை விடுக்க, படம் நல்லா இருந்தால் எனது ரசிகர்கள் பார்க்கட்டும், நான் கட்டாய படுத்த மாட்டேன், என திட்டவட்டமாக மறுத்து விட்டார் அஜித் குமார், இதனை தொடர்ந்து தமிழில் படம் தயாரிப்பை தொடங்கியுள்ள போனிகபூருக்கு தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திமுக தயவு தேவை என்பதால் உதயநிதியை சந்திக்க முடிவு செய்துள்ளார்.

மேலும் ரசிகர்கள் சிறப்பு காட்சி ஏற்பாடுகளுக்காக, உதயநிதியை சந்திக்க அஜித்குமாரை அழைத்துள்ளார் தயாரிப்பாளர் போனிகபூர், இதை கேட்டு டென்ஷன் ஆன அஜித் குமார், நான் எதற்காக உதயநிதியை பார்க்க வேண்டும், என் படம் நல்லா இருந்தால் மக்கள் வந்து பார்க்கட்டும், மற்றபடி உதயநிதியை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என அஜித் டென்ஷனாக சாரி சார் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என போனி கபூரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து உதயநிதியை சந்திப்பதை அஜித் புறக்கணித்ததை தொடர்ந்து தனியாக சென்று உதயநிதியை சந்தித்துள்ளார் போனிகபூர், இதன் பின்பு நள்ளிரவு தமிழகம் முளுவதும் வலிமை சிறப்பு காட்சி நடந்ததாக கூறப்படுகிறது. நடிகர் அஜித் குமார் எதுவாக இருந்தாலும் யாருக்கும் அஞ்சாமல் நேரடியாக பேசக்கூடியவர் என்பது கருணாநிதி முதல்வராக இருந்த போது எங்களை கட்டாயபடுத்தி பாராட்டு விழாவுக்கு அழைக்கப்படுவதாக மேடையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி முன்பு கர்ஜித்தவர் அஜித்குமார் என்பது குறிப்பிடதக்கது.