விஜயை வீழ்த்திய மகிழ்ச்சியில்.. அஜித்தின் வாழ்க்கையில் நடந்த அதிரடி மாற்றம்.. அதிர்ச்சியூட்டும் சர்ப்ரைஸ்..

0

நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் தமிழ் சினிமாவில் ஒரே காலகட்டத்தில் தங்களுடைய நடிப்பு தொழிலை தொடங்கி, அதன் பின்பு சமகால போட்டியாளராக உருவெடுத்து, இருவரும் தங்களுக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டனர். சிவாஜி – எம்ஜிஆர் அதன் பின்பு ரஜினி – கமல் என சினிமாவில் இருந்த போட்டியில் அஜித் – விஜய் என்கிற அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றவர்கள் அஜித் மற்றும் விஜய் இருவரும்.

இந்த நிலையில் அஜித் மற்றும் விஜய் இருவருக்கும் சம அளவில் ரசிகர்கள் ஆதரவு இருந்து வந்த நிலையில், தொடர்ந்து அஜித் படத்தை விட விஜய் படமே அதிக வசூல் படைத்து வருகிறது. மேலும் விஜய் தான் நம்பர் ஒன் என்கின்ற ஒரு தோற்றம் தமிழ் சினிமாவில் இருந்து வந்தது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என திட்டமிட்ட அஜித், என்ன ஆனாலும் சரி வெற்றியோ, தோல்வியோ நேரடியாக விஜய்யுடன் மோதி பார்த்து விடுவோம் என்று களத்தில் இறங்கினர் நடிகர் அஜித்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் வெளியாகும் அதே தேதியில் தன்னுடைய துணிவு பணத்தையும் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்தார் நடிகர் அஜித். அபொங்கல் பண்டிகைக்கு துணிவு மற்றும் வாரிசு ஆகிய இரண்டு படங்களும் நேரடியாக மோதிய நிலையில், வாரிசு படத்தை விட துணிவு படம் அதிக வசூல் சாதனை படைத்துள்ளது.

மேலும் ரசிகர்கள் மத்தியிலும் வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு அதிக மதிப்பெண்களையும் பெற்று இந்த பொங்கல் பண்டிகையில் விஜயை வீழ்த்தி அஜித் முன்னணி பெற்றுள்ளார். அந்த வகையில் சமீப காலமாக சினிமாவில் வசூலில் நம்பர் ஒன் விஜய் என்கின்ற ஒரு பிம்பத்தை உடைத்து, மிகப்பெரிய மகிழ்ச்சி அடைந்துள்ள அஜித் குமார். அவருடைய வாழ்க்கையில் சில அதிரடி மாற்றங்களை கொண்டு வர இருக்கிறார்.

வாரிசு படத்தின் ப்ரோமோஷன் க்காக, விஜய் ஆடியோ வெளியீட்டு விழா, ரசிகர்களை அழைத்து பிரியாணி விருந்து என வாரிசு படத்தை ஓட வைக்க பல ப்ரோமோஷன் நிகழ்வில் கலந்து கொண்டார் விஜய். ஆனால் அஜித் எந்த ஒரு ப்ரோமோசனும் தன்னுடைய படத்திற்கு செய்யவில்லை. இருந்தாலும் அவருடைய ரசிகர்கள் அஜித்தை வெற்றி பெறச் செய்ய வைத்துள்ளார்கள். அந்த வகையில் தான் ரசிகர் மன்றங்களை கலைத்தாலும் தன் மீது இன்றளவும் அன்பும் மரியாதையும் உள்ள ரசிகர்களுடன் தொடர்ந்து நம்ம உறவில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள நடிகர் அஜித்குமார்.

தன்னுடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் அடிக்கடி ரசிகர்களை சந்திப்பது மற்றும் அவர்களுக்கு சாப்பாடு விருந்து கொடுப்பது என்கின்ற பல ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் பல நிகழ்வுகள் இனிவரும் காலங்களில் அஜித் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் அஜித் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஆக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.