அட இதுக்கு தான் விஜயகாந்த் மறைவுக்கு அஜித் போகவில்லை… இதற்கு பின்னால் இப்படி ஒரு அதிர்ச்சி தகவலா.?

0
Follow on Google News

நடிகர் அஜித் குமார் எந்த ஒரு பொது நிகழ்வுக்கு வரமாட்டார், தன்னை சுற்றி ஒரு தடுப்பணையை போட்டு கொண்டு, யாரும் அவரை எளிதாக நெருங்கிவிட முடியாத அளவுக்கு ஒரு விதியசமான வாழ்க்கையை அஜித் வாழ்ந்து கொண்டிருக்கிறார். என்ன தான் பொது நிகழ்ச்சிக்கு வராமல் அஜித் இருந்தாலும் கூட, சக நடிகர்கள் இரங்களுக்கு அஜித் வராதது இதுவரை அவரை கொண்டாடி வந்த ராசிக்கார்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைக்கு அஜித் உள்ளாகி உள்ளது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதி முக்கியத்துவம் வாய்த்த நடிகராக திகழ்ந்த நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு அஜித் வராதது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது, இந்நிலையில் அஜித் என் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தவில்லை என அனைவர்க்கும் ஷாக் கொடுக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் சினிமாவில் வளர்ந்து வந்த நேரத்தில் ஒருபடத்தில் நடிப்பதற்காக தயாரிப்பாளர் ஏவிஎம் ரத்னம் 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து அஜித்தை கமிட் செய்திருந்தார். பொதுவாகவே சினிமா நடிகர்கள் வாங்கும் அட்வான்ஸ் தொகையை வேறு ஒரு தொழிலில் முதலீடு செய்து விடுவார்கள், அந்த வகையில் ஏவிஎம் ரத்னம் கொடுத்த அட்வான்ஸ் தொகையை அஜித் வேறு ஒரு தொழிலில் முதலீடு செய்து விட்டார்.

அப்படி ஒரு கலக்கட்டத்தில் சினிமா துறையில் ஃபெஃப்சி தொழிலாளர்களும், இயக்குனர்களுக்கும் இடையில் மிக பெரிய சண்டை வெடிக்கிறது, அந்த பிரச்சனையில் ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக சினிமா துறையில் இருந்து அஜித் மற்றும் கமல்ஹாசன் இருவரும் ஆதரவாக குரல் கொடுக்கிறார்கள். அப்போது அஜித்திடம் சென்று ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயல்பட கூடாது என, இயக்குனர்களுக்கு ஆதரவாக செயல்படவேண்டும் என ஏ.எம் ரத்தினம் தெரிவிக்க.

அதற்கு பாதிக்கப்பட்ட ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கு ஆதரவாக இருப்பேன் என அஜித் உறுதியாக தெரிவிக்க, அப்படியானால், உடனே நான் கொடுத்த 10 லட்சம் அட்வான்ஸ் தொகையை உடனே கொடு என அஜித்துக்கு நெருக்கடி கொடுக்கிறார் ஏ எம் ரத்தினம். ஆனால் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை வேறு ஒரு தொழிலில் முதலீடு செய்து விட்டதால், கையில் பணம் இல்லாமல், உடனே 10 லட்சத்தை எப்படி கொடுப்பது என திகைத்து போன அஜித்,

பல பேரிடம் பணம் கேட்டும் அஜித்துக்கு யாரும் பணம் கொடுக்க முன்வரவில்லை. அப்போ வடசென்னையை சேர்ந்த ஒரு சினிமா பைனான்சியர் எந்த ஒரு டாகுமெண்ட் வாங்காமல், ஏ.எம்.ரத்தினத்திடம் அஜித் வாக்கிய பணத்தை திருப்பி கொடுக்க உதவி செய்துள்ளார். இந்த நிலையில் திடீரென அஜித்துக்கு உதவி செய்த அந்த சினிமா பைனான்சியர் இறந்து விடுகிறார். நேரில் சென்று தனக்கு உதவி செய்த சினிமா பைனான்சியர் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அஜித்.

அவர் உடல் மாயணத்தில் அடக்கம் செய்யும் வரை உச்சி வெயிலில் கூட அங்கேயே இருந்து இறுதி காரியம் முடித்துவிட்டு தான் அங்கிருந்து திரும்பி வந்துள்ளார் அஜித். இப்படி மக்களோடு மக்களாக இருந்து அஜித், நடிகை மனோரமா மறைவுக்கு இரங்கல் செலுத்த நேரில் சென்ற போது, அவருக்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்து நடக்க முடியமால் கடும் சிரமத்தில் மனோரமா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார், ஆனால் அஜித்தை வருகையில் அங்கே சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் அவரை வெளியில் வர முடியாத அளவுக்கு அஜித்துக்கு சிரமத்தை கொடுத்துள்ளார்கள்.

இதனால் கடும் சிரமத்திற்கு மத்தியில் அவரது மனைவி ஷாலினியுடன் அங்கிருந்து வெளியாகியுள்ள அஜித், இந்த நிகழ்வுக்கு பின்பு தான் யார் மறந்தாலும் நேரில் அஞ்சலி செலுத்துவதில்லை என்று கூறப்பட்டாலும் கூட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த போது இரண்டு ப்ளைட் மாறி ஓடோடி வந்த அஜித், எஸ்.பி.பி மற்றும் விஜயகாந்த் இறப்புக்கு வராமல், நெருங்கிய நண்பரும், இயக்குனருமான வெற்றி துரைச்சாமியின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டார் அந்த வகையில் அஜித் விஜயகாந்த்க்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என மந்தார நினைத்தால் நிச்சயம் செய்திருக்கலாம், அதை விட்டு ரசிகர் கூட்டம், அது, இது என பழைய பஞ்சாங்கத்தை பாடுவதை ஏற்று கொள்ள முடியாது என விமர்சனம் எழுந்துள்ளது குறிப்பிடதக்கது.