தேனிலவில் இருக்கும் விக்னேஷ் சிவனுக்கு தீடிரென போன் போட்ட அஜித்… இது மட்டும் கூடாது என சொன்ன அஜித்..!

0
Follow on Google News

நடிகர் அஜித்குமார் தற்பொழுது இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், லைக்கா தயாரிப்பில் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் அஜித்குமார. விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் ஜோடியாக நடித்த நயன்தாரா அப்போது நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றார் நயன்தாரா.

இதனை தொடர்ந்து நயன்தாரா வற்புறுத்தலின் பெயரில் விக்னேஷ் சிவனுக்கு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் விக்னேஷ் சிவன் கமிட்டான போதே பல கண்டிஷன்களை போட்டுள்ளார் அஜித். அதில் இந்த படம் முழுக்க முழுக்க விக்னேஷ் சிவன் படமாக இருக்கக்கூடாது. 50% விக்னேஷ் சிவன் படமாகவும் 50% அஜித் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் இது அஜித் குமார் படமாகவும் இருக்க வேண்டும் என அஜித் தெரிவித்திருந்தார்.

மேலும் படத்தில் அரசியல் பஞ்ச் எந்த ஒரு காரணத்திற்காகவும் இடம்பெறக்கூடாது, அப்படி இடம்பெற்றால் நான் அந்த வசனத்தை பேச மாட்டேன் என திட்டவட்டமாக அஜித் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சமீப காலமாக சென்னையில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது ரசிகர்களின் தொந்தரவு காரணமாக பல பிரச்சனையை சந்திக்க நேரிட்டது என தெரிவித்த அஜித்.

என்னை வைத்து படமாக்கும் காட்சிகள் தமிழ்நாட்டில் எந்த பகுதியில் எடுக்கப்படக்கூடாது என பல்வேறு கண்டிஷன்களை போட்டிருந்தார் அஜித். இதனைத் தொடர்ந்து அஜித் எதிர்பார்த்தது போன்ற அவருக்கான புதிய படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் தீவிரமாக இருந்து வந்த விக்னேஷ் சிவன். கடந்த சில நாட்களுக்கு முன்பு மனைவி நயன்தாராவுடன் இரண்டாவது தேனிலவுக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கே செம ஜாலியாக மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை ஒவ்வொன்றாக வெளியிட்டு வந்து கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். மேலும் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கான லொகேஷன் பார்த்தும் வருகிறார் விக்னேஷ் சிவன். இந்த நிலையில் திடீரென விக்னேஷ் சிவனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அஜித்குமார். அடுத்து இருவரும் இணையும் படத்தை பற்றி ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேலும் இதற்கு முன்பு முழுக்க முழுக்க இது விக்னேஷ் சிவன் படமாக இருக்கக் கூடாது என கண்டிஷன் போட்ட அஜித், தற்பொழுது உங்கள் விருப்பம் போல் நீங்கள் சுதந்திரமாக வேலை செய்யலாம், இது நூறு சதவீதம் உங்களுடைய படமாகவே இருக்கட்டும். ஆனால் அரசியல் பஞ்ச் மட்டும் எந்த ஒரு காரணத்திற்காக இடம்பெற கூடாது என அஜித் தெரிவித்துள்ளார்.

இதனால் செம்ம ஹாப்பி மூடில் இருக்கும் விக்னேஷ் சிவன், அஜித் தனக்கு முழு சுதந்திரம் கொடுத்து விட்டார் என்பதை கொண்டாடும் விதத்தில், மனைவியுடன் தேனிலவு சென்ற ஸ்பெயின் நாட்டில், அதை ஒரு பார்ட்டியாக கணவன் மனைவி இருவரும் கொண்டாடியதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடதக்கது.

உயிருக்கு ஆபத்தாகிவிடும்… சந்திரமுகி 2 படத்தில்  நடிக்க ரஜினி மறுப்பு…எச்சரிக்கை சமிக்கை என்ன தெரியுமா.?

error: Content is protected !!