தமிழ்நாட்டின் மொத்த கடன் தொகை என்பது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. கடந்த 2020 – 21 காலகட்டத்தில் அதிமுக ஆட்சி முடியும் தருவாயில், 4,56, 660 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த கடன் தொகை அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டின் மொத்த கடன் தொகை படிப்படியாக குறை க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த நான்கு வருடத்தில் தமிழ்நாட்டின் மொத்த கடன் தொகை, திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது, திமுக ஆட்சிக்கு வந்த முதல் வருடம் 2021 – 22 காலகட்டத்தில் போது 5,70,000 கோடி கடனாக இருந்தது. அதற்கு அடுத்த வருடம் 5,77,000 கோடிகள் ஆனது, இதில் அந்த ஒரு வருடத்திற்கு வெறும் 7000 கோடி மட்டுமே அதிகரித்திருந்தது.

ஆனால் 2023 – 24 காலகட்டத்திற்கான நிதி அறிக்கை பொழுது, தமிழ்நாட்டின் மொத்த கடன் தொகை 7,26,029 ரூபாயாக உயர்ந்து சுமார் இந்த இடைப்பட்ட ஒரு வருட காலத்திற்குள் மட்டுமே சுமார் 2 லட்சம் கோடி கடன் தமிழகத்திற்கு அதிகரித்தது, இந்த நிலையில் தற்போது நடப்பாண்டில், 2024 – 25 காலகட்டத்திற்கான நிதி அறிக்கையில் தமிழ்நாட்டின் மொத்த கடன் தொகை 8,33,362 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த புதிதில், அப்போது நிதி அமைச்சராக இருந்த பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், தமிழக நிதி குறித்து பேசுகையில், தமிழக அரசுக்கு ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி பொது சந்தா கடன் உள்ளது. தமிழகத்தில் புள்ளிவிவரங்களின்படி, 2 கோடியே 16 லட்சத்து 24,238 குடும்பங்கள் எனக் கொண்டால், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் உள்ளது”.
என அப்போது நிதி அமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் பேசி இருந்தார்.
இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பொழுது, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் 2.63 லட்சம் கடன் உள்ளது என்ன கடந்த கால அதிமுக ஆட்சியை குற்றம் சாட்டி விட்டு ஆட்சி பொறுப்பிற்கு வந்த திமுக, கடந்த நான்காண்டு ஆட்சியில், தற்பொழுது உள்ள புள்ளி விவரப்படி தமிழ்நாட்டின் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு குடும்பங்களின் தலையிலும் தற்பொழுது 3,71,85 ரூபாய் கடன் உள்ளது என்பது குறிப்பிட்ட தக்கது.
இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதல்வர் மு க ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்றை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். முதல்வர் மு க ஸ்டாலின் அப்போது எதிர்க்கட்சியாக இருந்தபோது பேசிய அந்த வீடியோவில், ஊழல் செய்வதற்காகவே தலைமைச் செயலகத்திற்கு வந்தவர்கள், பினாமி கம்பெனிகளை வைத்து கொள்ளை அடித்தவர்கள், கமிசன் அடிச்ச 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் என முதல்வர் மு க ஸ்டாலின் எதிர்கட்சியாக இருந்தபோது பேசிய அந்த வீடியோவை வெளியிட்டுள்ள அண்ணாமலை.
இந்த மாதம் 14ஆம் தேதி, வரும் நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. இந்த ஆண்டு நிறைவு பெறும் போது, தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியிருக்கும் என தெரிவித்துள்ள அண்ணாமலை, மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது, அன்றைய எதிர்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் பேசிய காணொளி ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது என தெரிவித்த அண்ணாமலை,
அந்த வீடியோவில், கமிஷன் அடித்தே 5 லட்சம் கோடிக்கு தமிழகத்தை கடனாளி மாநிலமாக ஆக்கியுள்ளார்கள் என முக ஸ்டாலின் பேசியுள்ளார், இன்று தமிழகத்தின் மொத்தக் கடன் 9.5 லட்சம் கோடி ரூபாய். நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு, திரு முக ஸ்டாலின் என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.